கதை சொல்லலாம் வாருங்கள்!!

நம் பாட்டி சொல்லிய கதை கேட்டு இருப்போம்.ஆனால் நம் குழந்தைகள் அவர்கள் பாட்டியை பார்ப்பதே வருடத்திற்கு ஒரு முறை தான். அதில் அவர்களுடன் பேசி பழகவே 15 நாள் ஆகிவிடும். பின் எங்கே கதை கேட்க!!

அதனால் நமக்கு தெரிந்த நம் பாட்டி சொல்லிய, நாம் எங்கோ படித்து மனதை பாதித்த, மற்றும் சின்ரெல்லா, தேவதை கதைகளை கூறினால் நமக்கும் பிடிக்கும், நம் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

எனக்கு சில சின்ரெல்லா கதைகள் மட்டுமே தெரியும்...
முழுவதும் தெரியாது..
இது என்னை போன்றோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
மாரல் கதைகள், குட்டி கதைகள், ராஜா ராணி கதைகள் அனைத்தும் ஊரில் உள்ளவர்கள் பாட்டிகளிடம் சேகரித்தாவது சொல்லுங்களேன்!!
எனவே கதை சொல்ல வாரீர்!!

எனக்கு தெரிந்த ஒரு கதை!! இது ஆரம்பம்தான்!!
இது எப்டி தெரிந்தது என்று தெரியவில்லை... எனது கணவரின் நண்பர்கள் கணவரிடம் சொல்லியது....

ஒரு ஊரில் குரங்குகள் மிக அதிகம். அவ்வூரில் உள்ளவர்கள் அதனால் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

அவ்வூரில் திடிரென்று ஒரு விளம்பரம் ..
முதலாளியும் ஒரு வேலைக்காரனுமாக ஊரில் வந்து எங்களுக்கு குரங்குகள் அதிகமாக தேவை!! ஒரு குரங்கை பிடித்து வந்தால் ரூ 10 இனாம்!! என்று கூறினார்கள்.

விடுவார்களா? மக்கள் ஆளாளுக்கு 50, 60 என பிடித்து பணத்தையும் பெற்றுக்கொண்டார்கள்...
குரங்கின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது... அதனால் விலையை அதிகமாக்கி ரூ 20 என அறிவித்தார்கள்..
அப்பொழுதும் 10, 20 என பிடித்து கொடுத்து பணத்தையும் பெற்றார்கள்.
முதலாளிக்கு அவசர வேலை என ஊருக்கு சென்றார்.

அப்போது ஊரில் உள்ள சில மனிதர்களிம் ரகசியம் என்று வேலையாள் கூறினான்..

இனி குரங்கின் விலை ஒன்றுக்கு 100 ரூ ஆகப்போகிறதாம். முதலாளி இப்போதான் போன்ல சொன்னாருன்னு சொல்ல!! உனக்கு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ ஒரு குரங்கை ரூ 40 க்கு தரேன் நீ என்கிட்டே ரொம்ப பழகிட்டே அதனால 60 ரூ லாபம் தானே!! என்று கொளித்திப்போட ஊரில் உள்ளவர்கள் எல்லாம் குரங்கை பணம் கொடுத்து வாங்கி போட்டனர்.

இப்போது வேலையாளும் இடத்தை காலி செய்ய ஊரில் உள்ள மக்கள் பணத்தை கொடுத்து குரங்குடன் வாழ்கின்றனர்.
முதலாளியும் பணத்தை எண்ணிக் கொண்டு சிரிக்கிறார் முட்டாள்கள் !!! என்று

மாரல்: ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபர்கள் இருப்பார்கள்...

எனவே தொடர்ந்து ,
கதை நிறைய சொல்லுங்கள்!!
புது இன்பம் பெருங்கள்!

இது ஒரு தெனாலி ராமன் கதை

எப்பொழுதோ படித்தது....

தெனாலிராமன் ராஜசபையில் விகடகவி ஆகி பேரும் புகழும் அடைந்த சமயம்...
மிகவும் அழகிய வீட்டில் சுற்றிலும் தோட்டம் அமைத்து தேவையானவற்றை அங்கேயே பயிரிட்டு வந்தார்கள்.

அப்போது தண்ணீர் பாய்ச்சாமல் தோட்டம் கொஞ்சம் வாடி இருந்தது.
தெனாலிராமன் நினைத்தார், தன்னால் இதற்கு ஒரு நாள் முழுவதும் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாய்ச்ச முடியாது...வேலையாளை போட்டால் கட்டுபடியாகது..

என்ன செய்யாலாம் என யோசிக்கும் போது ஒரு மரத்தின் பின் இரண்டு தடியர்கள் நிற்பதை பார்த்து இவர்களை பார்த்தால் நல்லவர்கள் போல தெரியவில்லை கள்வர்களோ?? என நினைக்கும் போதே ஒரு திட்டம் உருவாகி அதை உடனே செயல்படவும் ஆரம்பித்தார்...
தன் மனைவியை கத்தி அழைத்தார்.. வாசலிலே நின்று உரக்க பேசினார்... "நானோ அரசவையில் தினமும் விதவிதமான மதிப்பிலா சன்மானம் பெற்றுவருகிறேன் அவற்றை எல்லாம் வீட்டில் வைத்தால் ஆபத்து... எனவே அனைத்தும் ஒரு மூட்டையாக கட்டி கிணற்றில் போட்டு விடுவோம்" என கூறி மனைவியை அழைத்து சென்றார்...

மனைவியோ என்ன இது ? என வினவ.. அவருடைய திட்டத்தைக் கூற தேவையில்லா பொருட்களை ஒரு மூட்டையில் கட்டி அதை திருடர்கள் பார்க்குமாறு கொண்டு சென்று சத்தம் வருமாறு கிணற்றில் போட்டார்கள்.....

போட்டு விட்டு நிம்மதியாக உறங்கியும் விட்டார்கள்.....

திருடர்கள் கிணற்றை எட்டிபார்த்து கிணற்றில் தண்ணீர் மிகவும் குறைவாகவே உள்ளது... எனவே விடியும் முன் தண்ணீரை இறைத்து பொருளையும் கைப்பற்றிவிடலாம் என எண்ணி தண்ணீர் இறைத்து இறைத்து ஊற்றினார்கள் விடிய ஆரம்பித்தும் விட்டது....

தெனாலிராமன் காலையில் திருடர்களை பார்த்து மிகவும் நல்லது இரவெலாம் தண்ணீர் பாய்ச்சி என் தோட்டத்தி காப்பாற்றிவிட்டீர்கள்... நன்றி, என கூற உண்மை நிலை புரிந்தது...

திருட நினைத்த திருடர்களுக்கு தண்டனை கொடுத்தது போலவும் ஆயிற்று... தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிய மாதிரியும் ஆயிற்று...

என்ன ஒரு சமயோஜித புத்தி............

இது எப்டி??

சுபா இப்ப பாத்து ஒரு கதையும் நியாபகத்துக்கு வரவே மாட்டேங்குது.

என் பொண்ணுக்கு கதை சொன்னதே இல்லை...கதை சொன்னால் என்னை அடிக்கிராள் நிறுத்த சொல்லி.திவாகருக்கு கதை புடிக்குமா?

தளிகா

hai ruby
கதை நிறைய சொல்வேன்...
குளிக்கும் போது நிறைய சொல்வேன்...
நான் சொல்வதை கேட்டு அவங்க அப்பா தான் நிறைய சிரிப்பாரு...
ஆடு வடிவேலு காமெடி எல்லாம் சொல்லும் எல்லாம் புருடா கதைகள் தான் சொல்றப்போ எனக்கே சிரிப்பா வரும்...

"அது புரியாத வயசு... இப்போ இது புரியரவயசு"

அதனால நிறைய தத்துவ கதைகள் சொல்வேன்....
சின்ரெல்லா பற்றி நிறைய தெரியாது...
அதான் கேட்டேன்...

கதை செல்லுங்க குழந்தைகள் ரொம்ப விரும்பி கேட்பார்கள்...

ஹ..ஹா. ரூபீ,எனக்கு சிரிப்பு சிரிப்பா வருதுப்பா.ரீமா குட்டி,உங்க கதையை எவ்வளவு விரும்பி கேக்கறா.ஹ...ஹா

அப்டியா பரவாலயே..கதை கேட்டு வளருவது நல்லது.எனக்கு என் பாட்டி சொன்ன கதைகளும் கருத்துக்களும் தான் இன்னும் என் மனசில்...இப்பவும் எல்லா செயலுக்கும் அவங்க சொன்னது நியாபகம் வருது..ட்ரை பன்னி பாக்கலாம்..நான் ஸ்டோரி புக் வாங்கி வந்து சொல்லிக் கொடுப்பேன்..ஒரு மாதிரி என்னை பாத்துட்டு அப்ரம் அடிச்சுட்டு நிருத்த சொல்வா...அது வேண்டாம் பாட்டு பாடும்பா.
ஆனால் 1 பெட் டைம் ஸ்டோரி புக் மட்டும் தினம் 30 முறையாவது ஒரே கதையை திரும்ப திரும்ப படிச்சு காமிக்க சொல்வா...ஒன்னு இப்டி இல்ல அப்டி..சின்ட்ரெல்லா கதைகள் பிறகு எழுதறேன்.
யார்டா அது என்னை கிண்டல் பன்றது..ஆத்திக்காவுக்கு இப்பவே சொல்லிடுங்க..கொஞ்சம் முழிச்சாலும் பின்னாடி அடி வுழாது

நீங்க கேட்டிருப்பது ரொம்ப நல்ல விஷயம். எனக்கு நிறைய கதைகள் தெரியும். என் சின்ன வயதில் என் பாட்டி, அம்மா நிறைய கதை சொல்லியிருக்காங்க. தினம் ஒண்ணு சொல்றேன். ஆரம்பமா நானும் தெனாலிராமன் கதையே ஒண்ணு சொல்றேன்.

ஒருமுறை அரசவை தோட்டதில் கத்தரிக்காய் அதிகமாக விளைந்திருந்ததாம். தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் என்றால் உயிர். தோட்டத்தில் நுழைந்து கூடை நிறைய காய்களைப் பறித்துக் கொண்டாராம். காவலர்கள் பார்த்துவிட்டார்கள். காவலர்கள் தன்னைப் பார்த்ததை ராமனும் பார்த்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வீட்டுக்கு வந்து மனைவியிடம் காய்களைக் கொடுத்து அன்று இரவே சமைக்க வேண்டுமென்று சொன்னாராம். அவரது மனைவியும் இரவு கத்தரிக்காய் குழம்பு சமைத்தாராம். ராமனுக்கு நாவில் நீர் ஊறியது. என்றாலும் அரசருக்கு நாளை பதில் சொல்ல வேண்டுமென்ற பயம் வேறு. என்ன செய்வதென்று யோசித்த போது மூளையில் ஒரு மின்னல் அடித்தது. அவரது மகன் வாசல் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வாளி தண்ணீரை அவன் தலையில் ஊற்றிவிட்டு அவனை எழுப்பினார். "மழை பெய்கிறது. உள்ளே வந்து சாப்பிட்டுவிட்டு படுத்துக்கோ" என்று கூறினார். அந்த பையனும் தூக்க கலக்கத்தில் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். பொழுது விடிந்ததும் அரண்மனைக் காவலர்கள் கதவைத் தட்டி ராமனை அரசர் அவசரமாக அழைத்ததாகச் சொன்னார்கள். ராமன் புரிந்து கொண்டு அவர்களுடன் சென்றார்.அரசர், "நீ கத்தரிக்காய் திருடினாயா?" என்று விசாரித்ததும் ராமன் அதை தீர்க்கமாக மறுத்தார். முந்தைய தினம் ராமன் வீட்டில் கத்தரிக்காய் குழம்பு என்றும், ராமனுடைய பையனை விசாரித்தால் உண்மை தெரியும் என்றும் காவலர்கள் கூற, ராமனுடைய மகன் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான். அரசர் அவனிடம் "நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது?" என விசாரித்தார். அவன் " நேத்து ராத்திரி நான் திண்ணையில் படுத்து தூங்கிட்டிருந்தேன். அப்போ மழை பெய்து நான் நனைஞ்சிட்டேன். என் அப்பா என்னை எழுப்பினார். நான் உள்ள போய் கத்தரிக்காய் குழம்பு சாதம் சாப்பிட்டு படுத்து தூங்கிட்டேன். இதான் நடந்தது" என்று கூறினான். அதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். உடனே ராமன் அரசரிடம் "நேத்து தான் மழையே பெய்யவில்லையே.. அவன் சின்ன பையன். அவன் சொல்வதை நம்பாதீர்கள். நேற்று மழை பெய்ததைப் போலவே அவன் கத்தரிக்காய் சாப்பிட்டதும் பொய்" என்று கூறினார். அரசரும் ராமனை விடுவித்தார். அதன் பிறகு ராமன் அரசரைத் தனியாக சந்தித்து நடந்தவைகளைக் கூறி மன்னிப்பு கேட்டார். அரசரும் அவரை மன்னித்தார்.

hi subha நீங்க கேட்டிருப்பது ரொம்ப நல்ல விஷயம். எனக்கு நிறைய கதைகள் தெரியும். என் சின்ன வயதில் என் பாட்டி, அம்மா நிறைய கதை சொல்லியிருக்காங்க. தினம் ஒண்ணு சொல்றேன். ஆரம்பமா நானும் தெனாலிராமன் கதையே ஒண்ணு சொல்றேன்.

ஒருமுறை அரசவை தோட்டதில் கத்தரிக்காய் அதிகமாக விளைந்திருந்ததாம். தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் என்றால் உயிர். தோட்டத்தில் நுழைந்து கூடை நிறைய காய்களைப் பறித்துக் கொண்டாராம். காவலர்கள் பார்த்துவிட்டார்கள். காவலர்கள் தன்னைப் பார்த்ததை ராமனும் பார்த்தார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் வீட்டுக்கு வந்து மனைவியிடம் காய்களைக் கொடுத்து அன்று இரவே சமைக்க வேண்டுமென்று சொன்னாராம். அவரது மனைவியும் இரவு கத்தரிக்காய் குழம்பு சமைத்தாராம். ராமனுக்கு நாவில் நீர் ஊறியது. என்றாலும் அரசருக்கு நாளை பதில் சொல்ல வேண்டுமென்ற பயம் வேறு. என்ன செய்வதென்று யோசித்த போது மூளையில் ஒரு மின்னல் அடித்தது. அவரது மகன் வாசல் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வாளி தண்ணீரை அவன் தலையில் ஊற்றிவிட்டு அவனை எழுப்பினார். "மழை பெய்கிறது. உள்ளே வந்து சாப்பிட்டுவிட்டு படுத்துக்கோ" என்று கூறினார். அந்த பையனும் தூக்க கலக்கத்தில் ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு வேலையை தொடர்ந்தான். பொழுது விடிந்ததும் அரண்மனைக் காவலர்கள் கதவைத் தட்டி ராமனை அரசர் அவசரமாக அழைத்ததாகச் சொன்னார்கள். ராமன் புரிந்து கொண்டு அவர்களுடன் சென்றார்.அரசர், "நீ கத்தரிக்காய் திருடினாயா?" என்று விசாரித்ததும் ராமன் அதை தீர்க்கமாக மறுத்தார். முந்தைய தினம் ராமன் வீட்டில் கத்தரிக்காய் குழம்பு என்றும், ராமனுடைய பையனை விசாரித்தால் உண்மை தெரியும் என்றும் காவலர்கள் கூற, ராமனுடைய மகன் அரசவைக்கு அழைத்து வரப்பட்டான். அரசர் அவனிடம் "நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது?" என விசாரித்தார். அவன் " நேத்து ராத்திரி நான் திண்ணையில் படுத்து தூங்கிட்டிருந்தேன். அப்போ மழை பெய்து நான் நனைஞ்சிட்டேன். என் அப்பா என்னை எழுப்பினார். நான் உள்ள போய் கத்தரிக்காய் குழம்பு சாதம் சாப்பிட்டு படுத்து தூங்கிட்டேன். இதான் நடந்தது" என்று கூறினான். அதைக் கேட்டு அரசவையில் இருந்தவர்கள் சிரித்துவிட்டார்கள். உடனே ராமன் அரசரிடம் "நேத்து தான் மழையே பெய்யவில்லையே.. அவன் சின்ன பையன். அவன் சொல்வதை நம்பாதீர்கள். நேற்று மழை பெய்ததைப் போலவே அவன் கத்தரிக்காய் சாப்பிட்டதும் பொய்" என்று கூறினார். அரசரும் ராமனை விடுவித்தார். அதன் பிறகு ராமன் அரசரைத் தனியாக சந்தித்து நடந்தவைகளைக் கூறி மன்னிப்பு கேட்டார். அரசரும் அவரை மன்னித்தார்.

மற்றொரு கதை
இது மரியாதை ராமன் என்பவர் பற்றியது...
இது குழந்தைகள் சம்மந்தப்பட்ட புத்தகத்திலும் நீதிக்கதைகள் போன்ற வற்றிலும் இருக்கலாம்...
இது நான் கேள்வி பட்ட கதை

அக்காலத்தில் அனைவரும் நடந்து தான் பயணம் செய்வார்கள்...
அப்போது இளைப்பாற்ற சத்திரங்கள் உண்டு அவரவர் வசதிக்கு ஏற்ப கிடைக்கும்...

வியாபரம் சம்மந்தமாக வந்தவர்களும் உண்டு..
அப்படி இரு வணிகர்கள் அந்த சத்திரத்தில் இரவு தங்க நேரிட்டது...
ஒருவர் மிகவும் விலைமதிப்பு மிக்க வைரகடுக்கன் அணிந்திருந்தார்..
இருவரும் எதிரெதிரே தலை வைத்து படுக்க நேரிட்டது...
அப்போது ஒருக்களித்து படுத்திருந்தவரின் ஒரு காதில் இருந்த தோடை கழற்றி மற்றொருவரின் காதில் மாட்டிக் கொண்டார்..

காலையில் தோடு அணிந்தவரி ஒரு காதில் கடுக்கன் இல்லாத்து அறிந்து மற்றொருவரிடன் சண்டை போட்டார்...

காவலர்களும் இரவு நேரத்தில் கவனிக்கவில்லை...
இது மரியாதை ராமனிடம் வழக்கு சென்றது..
அப்போது அவர் இருவரையும் கூர்மையாக கவனித்து விட்டு திருடியவரை கண்டுபிடித்துவிட்டார்...
எப்படி???
இருவரையும் சத்திரத்தில் எவ்வாறு உறங்கினார்களோ அவ்வாறு உறங்கச்செய்தார்...
ஒருவர் இடது காது தெரியும் படியும் மற்றொருவர் வலது காது தெரியும் படியும் எதிரெதிரே படுத்தனர்...
தோடு காணாமல் போனது இடது காதில்... தோடு உள்ளதோ மற்றொருவருக்கு வலது காதில்.... இப்பொழுது யார் திருடன்....

வலது காதில் தோடு அணிந்தவன் தான் திருடன்..
அவனுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டது...

கருத்து::
யாரும் கவனிக்கவில்லை என நினைத்து தவறு செய்தால் அது நம்க்கே வினையாக முடிந்து விடும்...

நேற்று தெனாலி ராமன் கதையைப் படித்ததும் எனக்கு நிறைய கதைகள் ஞாபகம் வந்து ஒரு கதை சொன்னேன். இன்று மரியாதை ராமன் கதையைப் படித்ததும் அவரைப் பற்றிய நிறைய கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு கதைக் சொல்கிறேன்.

ஒரு ஊரில் நான்கு நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு ஒரு பானை நிறைய தங்க காசுகளும், வைர நகைகளும் கிடைத்தன. அவர்களுக்கு அதை அரசரிடம் ஒப்படைக்க மனசில்லை. இவ்வளவு காலமாக உழைத்து சாப்பிட்ட அவர்களுக்கு அந்த புதையலைப் பார்த்ததும் கஷ்டப்படாமல் வசதியாக வாழ வேண்டுமென்ற எண்ணம் வந்துவிட்டது.அதே ஊரில் இருந்தால் அவர்களுடைய திடீர் வசதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் என்றெண்ணி அவர்கள் வேறொரு ஊருக்கு போய்விட்டார்கள். அவர்களால் அத்தனை எளிதாக அந்த புதையலை விற்க முடியவில்லை. எனவே அவர்கள் கையில் இருந்த பணத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தர்கள். அந்த ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அவருடைய குடிசையில் இவர்கள் தங்கினார்கள். அந்தப் பாட்டியிடம் பானையைக் கொடுத்து "நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்து கேட்டால் தான் இந்த பானையைக் கொடுக்க வேண்டும்" என்று சொன்னார்கள். அந்தப் பாட்டியும் பானையைத் திறந்து பார்க்காமல் பத்திரமாக உள்ளே வைத்தார். ஒருநாள் உச்சி வெயில் நேரம். நால்வருக்கும் தாகமாக இருந்தது. அந்த நேரத்தில் ஒரு பெண் நீர் மோர் விற்றுக் கொண்டு வந்தாள்.இவர்கள் அந்தப் பெண்ணை நிறுத்தினார்கள். நண்பர்களில் ஒருத்தனை உள்ளே அனுப்பி மோர் வாங்க பாட்டியிடம் ஒரு பானை வாங்கி வரச் சொன்னார்கள். அவனும் உள்ளே போய் பாட்டியிடம் பானை வேண்டுமென்று கேட்க பாட்டியோ அந்த பானை என நினைத்துக் கொண்டார். அவனிடம் "அந்த பானையா?" என்று கேட்க அந்த நண்பனுக்கு பேராசை தொற்றிக் கொண்டு அந்த பானை தான் என்று சொன்னான். பாட்டி கொஞ்சம் சந்தேகத்தொடு உரக்க குரல் கொடுத்தள் "பானை கொடுத்து அனுப்பவா?" வெளியே இருந்தவர்களும் ஆம் என்று சொல்ல பாட்டி புதையல் பானையை அவனிடம் கொடுத்துவிட்டாள். அவன் அதை எடுத்துக் கொண்டு பின்வாசல் வழியாக ஓடிவிட்டான்.நீண்ட நேரமாகியும் நண்பன் வராததால் மூவரும் உள்ளே வந்தார்கள். பாட்டி நடந்தைச் சொன்னதும் அவர்கள் கோபமாக பாட்டியைத் திட்ட ஆரம்பித்தார்கள். பாட்டி தான் எப்படியாவது அந்த பானையைத் திருப்பித் தர வேண்டுமென்று மிரட்டிடார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் பாட்டி மரியாதை ராமனை நாடினார்.அவர் நடந்த விஷயங்களை பொறுமையாகக் கேட்டுவிட்டு அந்த மூவரைப் பார்த்து தீர்ப்பு கூறினார் "உங்கள் உடன்பாட்டின்படி நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் பானையைத் தர வேண்டும். இப்போது மூன்று பேர் மட்டும் தான் இருக்கிறீர்கள். நாலாவது ஆளையும் சேர்த்துக் கொண்டு வந்து கேளுங்கள். பாட்டி அந்த பானையைத் தருவார்". மூவரும் பேச்சின்றி நின்றார்கள்.
வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு உழைப்பை நிராகரித்து கிடைத்ததை இழந்து நின்றார்கள்.

உழைத்து கிடைக்கும் பணம் தான் நிலையானது.

மேலும் சில பதிவுகள்