இன்று பிறந்த நாள் காணும் தங்க மங்கை அமிரா!

அன்பு நெஞ்சங்களே!
இன்று எனது பேத்தி அமிரா என்ற இள மழலை ஐந்தாம் பிறந்த நாள் காண்கிறாள்.(17-3-2008)
தற்போது எங்களை விட்டு தொலை தூரத்தில்(சார்ஜா-uae) இருக்கும் இவளை, உலகின் பல திக்குகளில் வாழும் அன்பு உள்ளங்களாகிய நீங்களும் என்னோடு சேர்ந்து வாழ்த்த அன்போடு அழைக்கிறேன்..
என்னுயிர்த் தோழி யான இவள் நீடுழி வாழ நல்ல இதயங்களே! நீங்களும் வாழ்த்துங்களேன்.
அமிராவை வாழ்த்தி ஒரு சிறு கவிதையினை உங்களனைவரின் ஒப்புதலுடன் இங்கு சமர்ப்பிக்கிறேன்.
அமிரா வின் புகைபடத்தினை காண இத்துடன் இணைக்கபட்டுள்ள லின்கை காப்பி பண்ணி, அட்ரஸ் பாரில் பேஸ்ட் பண்ணி எண்டர் கொடுத்து, தங்க மங்கையை காணலாம்..நன்றி.

அமிரா-தங்க மங்கை

எங்கள் சிந்தை குளிர - வந்தாள்
இந்த தங்க மங்கை!
எங்கள் உள்ளங்களின் எழிலரசி இவள்
எங்கள் இல்லத்தின் நித்திய இளவரசி இவள்.
(அமிரா என்றால் இளவரசி என்று பொருள்)
என் உயிர் தோழி இவள்!
என் சோகங்களின் சுமை தாங்கி இவள்-என்
மகிழ்வுக்கு இமயம் இவள்!
தினம் என் தூக்கத்தை கெடுப்பவள்-என்
துக்கங்களின் வடிகால் இவள்!-இன்று
சார்ஜா சாலைகளில் உலா வருகிறாள்.
அப்பா(தாத்தா) என ஆனந்தம் பொங்க இவள்
அழைக்கையில் அழகு தமிழும் தலை வணங்கும்!
ஐந்தாம் பிறந்த நாள் காணும் இவள்-எனக்கு
ஆறாம் அறிவாய் இருப்பவள்!
நற்பிறப்பின் நாயகியாம் -இவள்
நீடு வாழ இறை வழிப் பேண
நல் இதயங்கள் நீங்கள் -
நாளும் வாழ்த்துங்களேன்.........
அன்பு.
குலசை.சுல்தான்.
link to see amira:
http://i261.photobucket.com/albums/ii42/er_sulthan/roshan2004_0058.jpg
http://i261.photobucket.com/albums/ii42/er_sulthan/2138156.jpg

MAY ALMIGHTY SHOWER ALL THE CHOICEST BLESSINGS ON YOU DEAR.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

link is there ,but error what to do?i will check next time,once again ,many more happy returns of the day.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு சகோதரர் குலசை சுல்தான் அவர்களே,
இன்று பிறந்த நாள் காணும் உங்கள் அன்பு பேத்தி அமீராவுக்கு எங்களின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
உங்கள் பேத்தி அமீரா நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியதுடனும் வாழ்வின் எல்லா வளங்களும் பெற்று வளர வாழ்த்துகிறோம்.
உங்கள் பேத்தியின் பிறந்த நாளை எங்களால் மறக்கவே முடியாது ஏனெனில் எங்கள் அன்பு மகனின் பிறந்த நாளும் இன்று தான். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்புள்ள செல்வி உங்கள் அன்பு மகளுக்கும் எனது
எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புள்ள அண்ணன் சுல்தான் அவர்களின் பேத்தி அமீராவிக்கும் எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

சுல்தான் அங்கிள் உங்கள் அன்புப் பேத்தி அமிரா 'பல்கலையும் கற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்' அத்துடன் அடுத்த பிறந்தநாளை தாத்தா, பாட்டியுடன் சேர்ந்து கொண்டாட இறைவனை வேண்டுகிறேன். இவர் உங்கள் மூத்த பேத்தியா?

செல்வியக்கா உங்கள் அன்பு மகனிடம் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்.

இன்று எனக்கும் மறக்க முடியாத நாள்... ஏனெனில் எனது மாமா(ஹஸ் 'ஸ் அப்பா )வின் பிறந்தநாள். கனடாவில் இருக்கிறார். அதற்காக நாங்கள் இங்கு கேக் சாப்பிட்டோம்(கடையில்தான் வாங்கினோம்)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று பிறந்தநாள் காணும் அன்பு அமீராவிற்கு வாழ்த்துக்கள் .வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமின் ....மாஷாஅல்லாஹ் அமீரா அழகாக இருக்கிறது

செல்வியக்கா உங்கள் அன்பு மகனிடம் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அமீரா குட்டி,
அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அழகு அமிரா நாட்டை ஆளப் பிறந்தவள்.இன்று பிறந்தநாள் காணும் உங்கள் செல்லத்திற்கு எனது ப்ராத்தனைகள்.இனியும் பல பிறந்தநாட்களை குடும்பத்தினர் அனைவருடனும் ஒன்றாக கொண்டாட ப்ராத்திக்கிறேன்.
சுல்தானண்ணா உங்களது மகளின் மகளா அமீரா..1 பேரக்குழந்தையா உங்களுக்கு..
எனக்கு உங்களது சந்தோஷம் ,ஏக்கம் நன்கு புரிகிறது.
என் செல்லத்திற்கு 2 வயது அவளைக் காண எஙள் குடும்பமும் காத்திருக்கிறது..உங்கள் எழுத்தை படித்தபொழுது கடந்த முறை ஊரிலிருந்து நான் திரும்பும்பொழுது என் பிள்ளையை என்னிடம் தர மனசில்லாமல் அப்பா கண்கலங்க என்னிடம் தந்து விட்டு போனது மனதில் வந்து தொண்டை எல்லாம் வலிக்கிறது.

சுல்தான் அண்ணா,

உங்கள் பேத்தி அமீரா அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் பெற்று இனிதுடன் வாழ வாழ்த்துக்கள். உங்க பேத்தி ரொம்ப அழகா இருக்காங்க.

ஜானகி

அமீராவிற்கு,
வாழ்க வளமுடன்...

HAPPY BIRTHDAY TO YOU...
MAY GOD BLESS YOU...

இதே நிலை தான் என் வீட்டில் ...
ஒரு வாரம் இப்போழுது ஊருக்கு சென்று வரும் போது குழந்தையை பிரிய யாருக்கும் மனமில்லை....

நான் வீட்டிற்கு மூத்தமகள்.. அம்மா அப்பாவிற்கு முதல் பேரன்....
அப்பாவிற்கு அவனை பிரிந்து சென்றதில் காய்ச்சலே வந்துவிட்டது...

பெண்கள் மனதால் மிகவும் மென்மையானவர்கள் என்கிறார்கள் ஆனால் உண்மையிலே பெண்கள் அழுதாலும் சிலவிஷயத்தில் தைரியமாக சாதித்துவிடுவோம்...
ஆனால் ஆண்கள் தான் மிகவும் பாதித்துவிடுவார்கள்...
உதாரணமாக எனது அப்பா மற்றும் சுல்தான் சார்....

மேலும் சில பதிவுகள்