இங்கே பேசுவோம்.வரதட்சனை என்ற வெட்கங்கெட்ட விலைபேசுதல்

சுல்தானண்ணா நீங்க சொல்லிட்டீங்க.கேட்கரப்ப சந்தோஷம் தான்.
பாவம் ஏழை வீட்டு பெண்கள் 30 வயசிலும் பாக்கெட் போட பின்னூசி செய்யன்னு வேலை செய்து ஏக்கத்துடன் பெற்றொர் பாத்துட்டிருப்பாங்க.

அதாவது இப்பொழுது நடப்பது glorified dowry sustem ..அதனை நிறுத்த ரொம்ம்ப கஷ்டம்..பைய்யன் வீட்டில் அந்த காசு,நகையால் எந்த ப்ரியோஜனம் இல்லாட்டாலும் அடுத்தவங்ள்ட இவ்வளவு பைய்யனுக்கு கிடைச்சதுன்னு சொல்ல வேண்டும்..அது மட்டும் தான் நோக்கம்.
எங்களுக்கு காசு,பணம் வேண்டாம் உங்க பொண் மட்டும் போதும் என்று பேசிட்டு தேடி அலைவது இவங்களை விட வசதி படைத்த வீட்டிலுள்ள பெண்...

அண்ணா அனுப்புங்கள்..சரி தான் அதான் காரணம்.
எனக்கு நினைத்தாலே பயமாக இருக்கிறது..தமிழாட்டில் கூட நல்ல மாற்றம் வருகிறது..பிள்ளைகள் திருந்திக் கொண்டு வருகிறார்கள்..கேரளம் சுத்த மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது..
சமீபத்தில் எங்கள் சொந்தத்தில் நடந்த திருமணத்தில் பெண்ணுக்கு கொடுத்தது 300 பவனும்,10 லட்ஷம் ரூபாயும் ,ஒரு ஸ்கார்பியோவும்...கேட்டதிலிருந்து ஜன்னியே வந்து விட்டது....ஆம்பிளைகள் வெறும் money making machines ஆக மாறி விட்டார்கள் பாவம்.
இது எங்கப் போய் முடியுமோ தெரியலை..சென்ற முறை டிவியில் ஒரு மலையாள சானலில் இதனைப் பற்றி கல்லூரி மாணவர்களிடம் கேட்க 90% மாணவர்கள் வரதட்சனை வாங்குவதில் தப்பே இல்லை ..அந்த பெண்ணை வாழ்நாள் முழுக்க பாக்க கிடைக்கிரதில் என்ன தப்பு என்று கேட்கிரார்கள்..அதை பார்த்ததிலிருந்து ஆத்திரமும் வருத்தமும்

நாங்க வாங்க மாட் டோம். மஹர் கொடுத்து செய்வோம்.இன்ஷா அல்லா.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சபாஷ் அண்ணா ..இன்னும் நிறைய அனுப்பி சாட்டையடி கொடுங்கள்.
..ரொம்ம்ப யோசித்து வருந்தி விட்டேன்..இப்பொழுது ஒரு தமாஷ்...குலசை என்ற உங்கள் ஊர்பெயர் மறந்து காலையில் சுடலைசுல்தான் என்று type செய்து அனுப்பும் நேரத்தில்; தான் நியாபகம் வந்து மாற்றினேன்..நல்ல வேளை

வரதட்சணை

பெற்று சீராட்டி
வளர்த்த மக்களை
மாக்களாக
விற்கிறோம்
திருமண சந்தையிலே!

கூட்டமாக நிற்கும்
மாக்கள் தான் - மந்தையிலே!!
நாமும் தான்
மாறவேண்டும் நிந்தையிலே!!

குழந்தையில் ஏது பேதம்
வளர்ந்த பின் - அது
பெருகிறது சாபம்
வரதட்சணை எனும்
சாபம்...

கவிதை : வரதட்சணை! - கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]

மணச் சந்தை -
மானம் ஈனம்
சூடு சுரணை
சுயமரியாதை
ஆண்மை
எல்லாமெ விற்பனைக்கு!

படிப்பு பட்டம்
பணி பாரம்பரியம்
தகுதி தராதரத்துக் கேற்ப
விலைகளும்
பேரங்களும்!

மனசாட்சியைத்
தொலைத்து விட்டுக்
கை யெழுத்தாகிறது
மண ஒப்பந்தம்!
சாட்சியாய்
சொந்தங்கள் பந்தங்கள்!

கந்துவட்டிக்காரர்களாய்
உருவெடுக்கிறார்கள்
பிள்ளை வீட்டார்!
கொத்தடிமை ஆக்கப்படுகிறாள்
மணப் பெண்!

பெண்ணைப்
பெற்ற கடன் ....
கேட்கும் போதெல்லாம்
கொடுக்கும்
நிர்ப்பந்தத்தில்
பெண் வீட்டார்!

பிள்ளையைப்
பெற்ற கடனும்....
வளர்த்த செலவும்
வசூலிக்கும் நிலையில்
பிள்ளை வீட்டார்!

பொன் முட்டையிடும்
வாத்தாய்
இருத்தல் வேண்டும்
மணப் பெண்!
அன்றேல்
விளக்கேற்ற வந்தவளின்
வாழ்க்கை விளக்கு...?

மண்ணிலே
பிறந்த பெண்ணுக்கு
மண்ணெண்ணெய்
செந் தீயால்
அபிஷேகம்!

பெண்ணினத்துக்கு
இழைக்கப்படும்
கொடுமைகள் அநீதிகள்!
பெண்களே காரணமாய்
இருக்கும் நிலைமைகள்
அவலங்கள்!

மனிதம் செத்துவிட்ட
சமுதாயத்தில்
மானங் கெட்டவர்களின்
பெருக்கம்!

பணத்துக்காக
விலை போகும்
பெண்ணை
சமூகம்
அழைக்கும் பெயர்..
வேசி!

வரதட்சணையின் பெயரில்
பணத்துக்கும் பொருளுக்கும்
விலை போகும்
ஆண்களையும்
அவர்களுக்கு உடந்தையாய்
இருப்போரையும்
என்னென்று அழைப்பது...?

வரதட்சணை பற்றி கவிதை ஒன்று! படித்ததில் பிடித்தது நீங்களும் படிக்க இங்கு இணைக்கின்றேன்.

எம்மாடியோவ், எனக்கு கவிதை எல்லாம் வராது//

நாங்க கொடுக்கவும் மாட்டோம், வாங்கவும் மாட்டோம்.
வரதட்சணை கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண் வீட்டாரை கண்டு என் மணமும் துடிக்கும்.
வரதட்சணை கேட்கும் வீட்டாரை கண்டால் சாட்டையால் நாலு சாத்து சாத்தலாம் முன்னு தூணும்.
ஜலீலா

Jaleelakamal

சுபா, சுல்தான் அங்கிள் கவிதை அருமை. பெண்கள் நினைத்தால்தான் வரதட்சணையை ஒழிக்கலாம். மகன் கேட்காவிட்டாலும் தாய்தானே கேட்கிறார் 'கவுரவத்திற்காக' வரதட்சணை.

ஒரு கவிதை,
பல லட்சங்கள்
வாங்கி மணம் முடித்தவர்
இன்று
மேடை மேடையாய்
முழங்குகிறார்
வரதட்சணையை
ஒழிப்போம் என்று
ஏனெனில் அவர்
மூன்று பெண்களின்
தந்தை

ஒரு SMS joke
உன் தந்தை ஏழை என்றால்
அது உன் விதி- உன்
மாமனார் ஏழை என்றால்
அது உன் முட்டாள்தனம்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுல்தான் அங்கிள் என்னைப் பொறுத்தவரை... ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உண்மையில் கணவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் குடும்ப நிர்வாகம் என்பது பெண்கள் கையிதான் இருக்கிறது. எந்த வீட்டிலும் பாருங்கள் அந்தக் குடும்பத் தலைவியின் சொற்படிதானே குடும்பம் இயங்குகிறது. கணவனும் சரி, பிள்ளைகளும் சரி தாய்(மனைவி) சொல்லைத் தானே கேட்கிறார்கள். எங்காவது ஓரிரண்டு ஆண்கள் இருக்கலாம் எனக்கு சீதனம் வேண்டும் என்று கேட்பதற்கு, ஆனால் 90 வீதமும் தாய்தானே மகனுக்காக கேட்கிறார். அந்தத் தாய் மகனிடம் சீதனம் வாங்க வேண்டாம் குணமுள்ள பெண்தான் முக்கியம் எனக் கேட்டால் அதை அந்த மகன் தட்டுவாரா?
எமது நாடுகளைப் பொறுத்தவரை தந்தை ஏதாவது சொன்னால்கூட தாயிடம் முறையிடுவார்கள் ஆனால் தாய் சொன்னால் அதை உடனடியாக ஏற்றுக் கொள்கிறார்கள்(பிள்ளைகள்).

போன கிழமை ஒருநாள் எனது கணவர் வேலையால் வந்ததும் எனக்கு சொன்னார்... ஏதோ தனது நண்பன், யாருக்கோ சொன்ன கதை, மாறி, இவரது காதிற்கு, வேறு விதமாக கேட்டிருக்கிறது , அது இவருக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது.. சற்று கோபமாகவும் இருந்தது. நான் அதற்குச் சொன்னேன் "அவர் அப்படி நிட்சயம் சொல்லியிருக்க மாட்டார்,,, ஏதோ கதை மாறுபட்டு உங்கள் காதிற்கு வந்திருக்கிறது, அதை பெரிது படுத்தாமல் மறந்துவிடுங்கள்" என்றேன். அவர்(hus) மேலே போய் உடை மாற்றி வந்து, எனக்குச் சொன்னார் " நீங்கள் அப்படிச் சொன்னது என் மனதிற்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்கிறது , ஒருவேளை நீங்கள், (மாறுதலாக)... அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்?, என என்னிடம் சொல்லியிருந்தால், எனக்கு இன்னும் கோபம் அதிகமாகியிருக்கும்" என்றார். இதைக் கேட்டதும் எனக்கு பெருமையாக இருந்தது. நான் சாதாரணமாகத்தான் சொன்னேன்.. ஆனால் அதனால் எவ்வளவு பெரிய மாற்றம் என.

எல்லாக் குடும்பங்களிலும் மனைவிதானே கணவனுக்கு மந்திரி. அதைக் கணவன்மார் கேட்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது செய்வது நல்ல விதமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மனைவி நினைத்தால் சீதனத்தை ஒழிக்கலாமா? முடியாதா? அங்கிள் உண்மையைச் சொல்லுங்கள், உங்கள் மனைவியின் நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்வீர்களா இல்லை நீங்கள் வைப்பதுதான் சட்டமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்