help please...........................................................................

Hi help please,

thalika akka,nandhini,viji,anjali,katheeja madam,selvi madam,manohari madam,...........matrum arusuvaill ulla anaivarukum vanakam.en per ammu.nan epo US la iruken.enga entha month summer aramichuruchu.mudi romba uthiruthu.mudi valara help panunga please.......................:-(

எப்படி இருக்கிறீர்கள. முடி உதிர்வதுக்கு என்ன செய்ய என்று எனக்கு தெரியவில்லை எனக்கும் இந்த பிரச்சனை இருக்கு நானும் மனோஹரி மேடம் ஒரு பதிவுல சொல்லி இருந்தாங்க டாபர் அம்லா யூஸ் பண்ணினால் முடி உதிர்வது குறையும் என்று இபொழுதுதான் நான் அந்த எண்ணெய் யூஸ் பண்ண ஆரம்பித்து இருக்கிறேன் பரவாயில்லை முடி உதிர்வது. நீங்களும் வேண்டுமானால் இந்த ஆயில் கிடைத்தால் வாங்கி யூஸ் பண்ணி பாருங்க. நாம விண்டர் சமயம் ஹாட் வாட்டரில் குளிக்கிறதால கூட நமக்கு சம்மர் சமயம் முடி அதிகமா உதிருதோ என்று தெரியலை. மற்ற சகோதரிகளிடம் இருந்தும் பதில் வரும்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கிறீர்கள். நீங்க எழுத்துதவியில் தமிழில டைப்பண்ண பழகிட்டதால எ கலப்பை இன்ஸ்டால் பண்ணுங்க அதன் வழியாக நாம ஈஸியாக தமிழில் டைப்பண்ண முடியும். உங்களுக்கு நீங்க கேட்ட த்ரெட்லடே பதில் அளிக்க என்னால் முடியவில்லை திரும்ப திரும்ப உள் நுளையவும் என்றே வருகிறது பதிலளி என்று வரவில்லை அதனால் இங்கு பதில் அனுப்பி இருக்கிறேன்.

அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும் கதீஜா.
இப்போ தான் நான் முதல் முறை உங்களோடு பேசுகிறேன்,ஆனால் உங்களுடன் நிறைய நாட்கள் பேசியது போன்ற ஒரு உணர்வு.என் அக்கா பெயரும் கதீஜா தான் என்பதினாலோ?
இன்னும் இந்தியாவில் தான் இருக்கிரீங்கலா?ஊரில் எல்லோருக்கும் எனது சலாம் சொல்லவும்.இன்ஸாஃப் குட்டி எப்படி இருக்கிறார்?
நாம் இனி அடிக்கடி பேசுவோம் கதீஜா,இன்ஷாஅல்லா.

வலைக்குமுஸ்ஸலாம். நான் நல்லா இருக்கேன். இன்சாஃப் நல்லா இருக்கான். நீங்க எப்படி இருக்கிறீர்கள். ஆமாம் நானும் இப்பொழுதுதான் உங்களுடன் பேசுகிறேன்.உங்கள் பொண்ணு எப்படி இருக்காங்க என்ன வயது ஆகிறது. இப்ப நீங்க எங்க இருக்கிறீர்கள்.உங்கள் சொந்த ஊர் எது. இன்ஷா அல்லாஹ் நாம இனி அடிக்கடி பேசலாம்.

அன்புடன் கதீஜா.

அம்மு கதீ சொன்னது சரி தான்..டாபர் ஆம்லா எண்ணை நான் உபயோகித்ததில்லை..ஆனால் 5 வயது பெண் குழந்தை வெறும் சொட்டத்தலை போல் இருந்தது ...இந்த எண்ணை தேய்த்தபின் போன விடுமுறைக்கு ஊருக்கு போனப்ப எனக்கே ஆச்சரியம் சாதா பிள்ளைக போல் முடி வளர்ந்திருக்கு..அப்ப தான் இந்த எண்ணைக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

கதிஜா,நாங்கள் இருப்பது சைனாவில் ஷங்க்காய்.சொந்த ஊர் கோயம்புதூர்.
குழந்தைக்கு அடுத்த மாதம் இன்ஷாஅல்லா,ஒரு வருடம் முடிவடைகிறது.பெயர் ஆதிக்கா.

டியர் அம்மு
எல்லோருக்கும் இந்த முடி பிரச்சனை தான்
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ஒகே என்றால் டிரை பண்ணுங்கள்.
எந்த எண்ணையுமே லேசாக சூடுபடுத்தி அதில் முழுமிளகு,சீரகம்,வெந்தயம் போட்டு காய்ச்சி வைத்து கொள்ளுங்கள்.இது எண்ணுடைய டிப்ஸ்.
வாரம் ஒரு முறை தேய்க்கவும்.

பிறகு தலைக்கு என்ண்ணை தேய்க்கும் போது அதை தேவையான அளவு எடுத்து ஒரு பவுளில் மைக்ரோ வேவில் பத்து செகண்டு வைத்து அதை நல்ல தலையில் உச்சி முதல் முடி சுனி வரை நல்ல தேய்த்து ஊற வைத்து பிறகு ஒரு டப்பில் வெண்ணீர் வைத்து கொண்டு அதை டர்கி டவலை நனைத்து பிழிந்து விட்டு அந்த சூட்டுடன் அதலையில் கட்டனும்.
மண்டையில் உள்ள நரம்பு களுக்கு நல்ல உயிரோட்டம் கொடுக்கும்.
நான் படித்த எல்லா பியுட்டி டிப்ஸ்களிலும் இப்படி தான் சொல்கிறார்கள்.

அப்படியே டாபர் ஆம்லா எண்ணை கிடைத்து அதை நீங்க டிரை செய்து முடி கொட்டுவது நின்று விட்டால் உடனே தெரிய படுத்துங்கள், மற்ற அருசுவை தோழிகளுக்கும் உதவும்.

ஜலீலா

Jaleelakamal

ellarum epdi irukeenga?enaku tips kuduthathuku romba thaks kandippa try pani pakaren.nan normal parasute than use panuven.ethu try panitu nikuthanu solren.

enaku tamil typng epdi pananumnu theriyalla.epdi pananu solreengala akka's?akka nu koopdava madamnu koopdava unga moonu peraum??

டியர் அம்மு நலமா?அருசுவை ஹோமில் மேலே பதிவேடு என இருக்கும் அங்கு போனால் இரு பாக்ஸ் இருக்கும் கீழே உள்ள பாக்ஸில் ஆங்கிலத்தில் டைப் பண்ணினால் மேலே இருக்கும் பாக்ஸில் தமிழில் வரும் அதை காப்பி பண்ணி எதில் அனுப்ப வேண்டுமோ அந்த பதிவில் பேஸ்ட் பண்ணிடுங்க முயற்சி பண்னுங்க வெற்றி நிச்சயம்....
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்