தெரிந்தவை சில! தெரியாதவை பல!! (குலசை சுல்தான்)

அன்புள்ளங்களே!
சில அரிய தகவல்களைத் திரட்டி இங்கு உங்களுக்காகவும் உங்களின் மழலைகளுக்காகவும் தந்திருக்கிறேன்.ஓரு வேண்டுகோள். வெளி நாட்டு வாழ் சகோதரிகள் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு இப்போதே தமிழ் கற்று கொடுங்கள். எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! எமது தமிழ்! ஒரு சீனியரின் அறிவுறையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.

தெரிந்தவை சில தெரியாதவை பல

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா ஒன்றுதான்.

* நத்தை ஒரு மைல் தூரத்தைக் கடக்க மூன்று வாரம் ஆகும்.

* ஓநாய்கள் மணிக்கு 40 மைல் வேகத்தில் ஓடக் கூடியது.

* சில ரக எட்டுக்கால் பூச்சிகளுக்கு 8 கண்கள் உண்டு.

* ஒட்டகச் சிவிங்கியின் கழுத்தில் 7 எலும்புகளே இருக்கும்.

* பறவைகளின் கண்கள் நீண்டிராமல் வட்டமாய் இருக்கும்.
தன் தலையை முழுவதும் திருப்பக் கூடிய பறவை ஆந்தை.

* பெரிய கடல் பறவை அல்பெட்ராஸ்.

* மிக அறிவுள்ள விலங்கு சிம்பன்ஸி குரங்கு.

* வேகமாக ஓடக் கூடிய விலங்கு சிறுத்தை.

* இறகு இல்லாத பறவை கிவி.

* வேகமாக ஓடக் கூடிய பறவை ஈமு.

* தோலினால் சுவாசிக்கும் பிராணி மண்புழு, அட்டை.
உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.

* நல்ல முத்து என்றால் பாலில் மிதக்கும்.

* நீர் அருந்தாத ஜீவராசி பல்லி.

நீர்க்கோழியின் ஆயுட்காலம்? - 50 ஆண்டுகள்.

* மிருகங்களிலேயே குறைந்த நேரம் தூங்கும் தன்மை கொண்ட விலங்கு? – கழுதை

*பாம்பின் கண்களில் எப்போதும் நீர் ததும்பி நின்று பளபளப்பாகக் காணப்படும். ஆனால் பாம்புகளால் அழ இயலாது!

குளிர்பிரதேசங்களில் பல்லிகள் இருக்காது.

பெண் கொசு ஒரு தடவைக்கு 300 முட்டை வரை இடும்.

* லோப்ஸ்டர்கள் ஒரே சமயம் லட்சம் முட்டை இடும்.

* ஆமைகள் 300 ஆண்டுகள் வரை கூட உயிர் வாழும்.

* முட்டையிட்டு பால் தரும் விலங்கு பிளாடிபஸ்.

* பெரும்பாலான அட்டைகள் சுத்த நீரில் வாழ்பவை.

* பேன் இறக்கையில்லாத பூச்சி. மேலும், அதற்கு பார்வையும் கிடையாது.

ஒட்டகச் சிவிங்கியின் நாக்கு சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது. மணிக்கு சுமார் 45 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றன.

* ஒரு யானையின் துதிக்கையில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன.

டால்பின்களுக்கு குரல்வளை கிடையாது. எனினும், காற்றை ஊதி 32 விதமான ஒலிகளை வெளிப்படுத்துகின்றன.

கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே இல்லை.

* கர்னார்டு என்ற வகை மீன் மனிதனிடம் பிடிபட்டதும் உடனே தன் கோபத்தை உறுமிக் காட்டும். ஆழ்கடலில் மட்டுமே இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன.

ஒட்டகப் பால் மூன்று மாதங்களானாலும் கெட்டுப் போகாது.
பூனையின் உரோமம் நச்சுத்தன்மை வாய்ந்தது.

ஆமைக்குப் பற்கள் கிடையாது.

* சிறுத்தை நீரைக் கண்டால் கூச்சப்பட்டது போல ஒதுங்கிவிடும்.

* புலிக்கு வெள்ளையாக எதைப் பார்த்தாலும் பயம் ஏற்பட்டு விடும்.

* யானைக்குத் துதிக்கையில் காயம் ஏற்பட்டுவிட்டால் உடனடியாக ஆறவே ஆறாது.

* நியூசிலாந்தில் உள்ள ராட்சதப் பல்லிகளின் முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர ஓர் ஆண்டு காலம் ஆகிறது.

* குதிரைகளுக்கு 18 ஜோடி விலா எலும்புகள் உள்ளது.

* பூரானுக்கு நாற்பது கால்கள் உள்ளன.

பூனையின் பழக்கங்கள் இரண்டு கோடி ஆண்டாக மாறவில்லை.

* பிக்மி மர்சோசெட் குரங்கு அரை அடி நீளமே இருக்கும்.

* கிளிகளில் ஆணும், பெண்ணும் ஒரே மாதிரி இருக்கும்.

* கழுதைப் புலி நொறுக்கித் தின்னும்.

* யானை ஒரே இடத்தில் 8 மணி நேரம் கூட நிற்கும்.

* கழுகு தன் எடை போல் மூன்று பங்கு இறைச்சி தின்னும்.

ஈசலுக்கு ஜீரண உறுப்புகள் கிடையாது

அடேயப்பா !எவ்வளவு அரிய தகவல்!பிள்ளகளுக்கு மட்டுமா எங்களுக்கும் தான்!தொடரட்டும் உங்கள் நர்ப்பணி.

இதை வாசித்தே களைத்துவிட்டேன், எப்படித்தான் பொறுமையாக எழுதினீர்களோ(முட்டை குடித்துவிட்டுத்தான் எழுதினீங்களோ என்று சந்தேகம்-பகிடி)

மிகவும் பயனுள்ளவை.. அருமையான குறிப்புகள்.. தந்தமைக்கு வாழ்த்துக்கள்..
உங்கள் வயதிலுள்ளவர்கள்தான் தமிழைப் பற்றிக் கவலைப் படுகிறீர்கள். எங்கள் அப்பா, அம்மாவும் எப்ப கதைத்தாலும் சொல்வார்கள் தமிழ் சொல்லிக் கொடுங்கள் என்று. ஆனால் பிள்ளைகள் சொல்கிறார்கள் "this is very hard" என்று. நான் கொஞ்சம் கொஞ்சம் சொல்லிக் கொடுத்துக்கொண்டே வருகிறேன். இதில் புதினம் என்னவென்றால் என் கணவருக்கும் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது. நன்றாக கதைக்க மட்டும்தான் தெரியும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சிறிய வயதில் முத்தாரம் படிப்பேன்... அதனை போல உள்ளது.மிக்க நன்றி.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் அறுசுவைக்கு புதுசு. இப்பதான் இள்ள வரேன் முன்னாடி இருத்தடவ வந்தேன் இங்க வந்து பார்த்தா நிறைய விஷயம் தெடிஞ்சிக்கிட்டென். ஐய்யோ எப்படி அங்கிள் இதெல்லாம். எங்கே இருந்து கலெக்ட் பன்னிங்க. சூப்பர், குழந்தைகளுக்கு உதவும் அங்கிள் நிச்சயம்.

மேலும் சில பதிவுகள்