மரணம் ஓர் பார்வை

ரஸியா,ஜலீலா,தளிகா,பானு,கதீஜா,ஆஸியா,பர்வீன்,ஜூலைகா,சர்மி,ருமையா, மற்றும் அனைத்து சகோதரிகளுக்கும்!
அஸ்ஸலாமு அலைக்கும்.!
மரணம் என்பது யாராலும் மறுக்க முடியாத,நிறுத்த முடியாத இறைவனின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட ஒரு இயற்கை நியதியாகும். மரணமே எனக்கு வராது என்று யாராலும் உறுதியாக சொல்ல முடியுமா! அவன் எப்பேர்பட்டவனாக இருப்பினும். உதாரணமாக, மைக்கல் ஜாக்ஸன் எனும் பாடகர், பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளுக்கும்,மரணத்திற்கும் பயந்து பூமிக்கடியில் வீடு கட்டி, குடியிருக்கிறாராம்.இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் இந்த உலகையே புரட்டி போடும் ஆற்றல் உள்ளவன்.(சுனாமி... மறக்க முடியுமா?) ஆக நாம் நமது ஒவ்வொரு செயல்களிலும், மரணத்தை நினைத்தே நம் வாழ்வினை அமைத்து கொள்ள வேண்டும்.மரணம் என்று வரும்போது நம்மால் தங்க முடியாத வேதனை தான். எனது தாயின் பிரிவு என்னை ரெம்பவுமே பாதித்தது.இருப்பினும் இறைவன் நாடி விட்டான் என நினைத்து சபூர் செய்து கொண்டேன்.
"மரணம் பற்றிய ஓர் பார்வை" எனும் தலைப்பில் ஒரு அருமையான பதிவு (பார்த்தாலே மரணத்தை பற்றி சில நேரமாவது நினைக்க தோன்றும்) எனது புதிய இஸ்லாமிய இணைய தளமான www.iniyaislam.webs.com ல் பதிவு செய்திருக்கிறேன். இந்த இணைய தளத்திற்கு சென்று பார்வையிடுவதுடன் உங்களின் மற்ற நண்பர்களுக்கும் இந்த link ஐ e mail மூலமாவது அனுப்பி பார்க்க சொல்லுங்கள். உங்களது கருத்தினை அந்த தளத்திலேயே பதிவு செய்யவும்.
இன்னும் நிறைய புதிய பதிவுகள் அந்த தளத்தினில் தர உள்ளேன்.(இன்ஷா அல்லாஹ்). முடிந்தவரை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இந்த லின்க் கை forward பண்ணுங்கள். இறைவனிடம் நல்லதை எத்தி வைத்ததற்கான கூலியைப் பெறுங்கள்.
link: www.iniyaislam.webs.com
நன்றி
குலசை.சுல்தான்.

சகோதரா ஏன் அந்த தளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை செய்யப் பட்டிருக்கிறது??
அப்படி அதில் என்ன தடை செய்யுமளவு கன்டென்ட்ஸ் இருக்கு??ஏதாவது பயமூட்டும் விதத்திலான புகைப்படங்கள் உண்டா?
மேலே உள்ள தலைப்பை மாற்றூ என்னும் ஆப்ஷனில் போய் சுருக்குங்கள்..முகப்பு உடைந்து பதில் பதிவில் பக்கமும் உடைந்து வருகிறது..தலைப்பு சுருங்கினால் சரியாகும்

I try to open the site,but that site blocked. I felt sorry.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சுல்தான் அங்கிள் நான் ஒருநாள் வரவில்லை அதற்குள் என்னை மறந்திட்டீங்களே... ஏன் வேறு மதத்தவர்கள் அதனைப் பார்க்க முடியாதா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா தாரளமாக போய் பாருங்கள் எல்லோரும் பார்க்கலாம்... மிகவும் அருமையாக இருக்கிறது.

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

மிகவும் அருமையான உபயோகமான தளம்..உண்மையில் உள்ளுக்குள் பயம் இன்னும் விடவே இல்லை..ரொம்ம்ப யோசித்துப் பார்த்தேன்..நான் என்னென்ன தவறு செய்கிறேன் என்று.
அந்த படங்களைப் பார்த்ததும் எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..ஆண்கள் மட்டும் மைய்யத்தை அடக்கி விட்டு வருவது ஏன் என்று இப்பொழுது தான் புரிகிறது..அதனைப் பார்க்கும் ஷக்தி பெண்களுக்கு இருக்காது..
அதில் தடை செய்யப்படுமளவு எதுவும் இல்லை ஆனால் தவறுதலாக ஃபில்டெரிங்கில் உங்கள் தளமும் விழுந்துள்ளது.
கண்டபடி இஸ்லாமிப் பற்றிய தவறான கண்ணோட்டத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல தளங்கள் உருவாக்கப் படுவதால் அது போன்ற தளங்களை இங்கே தடை செய்வார்கள்...அப்பொழுது உங்கள் தளமும் அதில் அறியாமல் சிக்கியிருக்கலாம்(எனது யூகம்)

மீண்டும் ஒரு வேண்டுகோள். பலமுறை நமது தளத்தில் குறிப்பிட்ட விசயம்தான்.

பதிவுகளுக்கு மறவாமல் தலைப்பு கொடுங்கள். ஆனால், பதிவையே தலைப்பாக கொடுக்காதீர்கள். தலைப்பு மூன்று வார்த்தைக்குள் இருக்குமாறு கொடுங்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விடுங்கள். இடைவெளியே இல்லாமல் பெரிய வாக்கியத்தை தலைப்பாக கொடுத்தால் அறுசுவையின் template தோற்றம் மாறிவிடும். இதனை தெரியாமல் சிலர் செய்துவிடுகின்றனர். தயவுசெய்து தலைப்பில் கவனம் செலுத்தவும்.

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆகா என்னால் இந்த தளத்தை பார்க்கமுடியவில்லையே,
தளிக்கா உங்களுக்கு எப்படி கிடைத்தது.
சுல்தான் அண்ணா இது ரிலேட்டடா வேறு ஏதாவது சைட் இருக்கா,
நானும் சுனாமி நடந்ததிலிருந்து மரணத்தை பற்றி டெய்லி நினைப்பதுண்டு,
ஆனால் இந்த மண்ணில் பிறந்தாச்சு அதே மாதிரி இறப்புக்கும் நாள் குறித்து தான் அல்லாவைத்துள்ளான், அதை யாராலும் மறுக்க முடியாது.
ஜலீலா

Jaleelakamal

விரைவில் செயல்படுஙகள்.ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

எனது எண்ணங்கள், கருத்துக்கள் வேறு என்பதால் உங்களின் பதிவு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. மன்னிக்கவும்.

தளம் பற்றி வேண்டுமானால் கருத்து தெரிவிக்கலாம். நல்ல முயற்சி. பக்கங்கள் வடிவமைப்பினை கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். (HTML தெரியவேண்டும்.)

படங்களை Optimize செய்து வெளியிடுங்கள். Load ஆக நேரம் எடுக்கின்றது. file size அதிக அளவில் இருக்கின்றது. BMP format அல்லாமல் JPG format ல் படங்களை வெளியிடுங்கள்.

என்னுடைய ஆலோசனை, முதலில் நீங்கள் வலைப்பூ (Blog) எழுதத் தொடங்குங்கள். Blog பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். அது வெகு விரைவில் பலரைச் சென்றடையும். மிகவும் எளிதானது. டிசைன் ஒர்க் பற்றி எல்லாம் நீங்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

உங்களுடைய நோக்கம் இஸ்லாம் குறித்து எடுத்துக்கூறுதல் என்றால் அது சம்பந்தமாக ஒரு Blog தொடங்கலாம். ஏற்கனவே நிறைய Blogs அது பற்றி எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. நீங்களும் அவர்களுடன் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தான் அண்ணா, இனிய இஸ்லாம் இனையத்தை பார்வையிட்டேன். நன்றாக இருந்தது. தங்களின் இந்த சேவை வெற்றி அடைய எங்கள் வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழிகள் அனைவரும் நலமா

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்