உளுந்தங் களி

தேதி: March 24, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாவு தயாரிக்க:
உளுந்து -- 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)
பச்சரிசி -- 3 கப்
களி செய்ய:
அரைத்த மாவு -- 1 கப்
வெல்லம் / கருப்பட்டி -- 1 என்னம் (3/4 பாகம் போதும்)
நல்லெண்ணைய் -- தேவையான அளவு


 

மாவு தயாரிக்க:
உளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்... (தண்ணீரின்றி)
களி செய்ய:
மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.
நன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.
பரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.
ரெடி.

இது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.
இடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா,இதில் எப்போ உளுந்து மாவு சேர்க்கனும்,எப்போ பச்சரிசி மாவு சேர்க்கனும்?

டியர் உமா,

மாவு என்பது உளுந்து, அரிசி சேர்த்ததுதான்...
என் மாமியார் மாவுமில்லில் கொடுத்து 3 கிலோ மாவை இந்ததடவை ஊரில் இருந்து வரும் சமயம் தந்தார்கள்...

அதைதான் பயன் படுத்துகிறேன்...

வேண்டும் என்றால் யாரும் சமைக்கலாமில் போடுகிறேன்பாருங்கள்...

நம்முடைய பீரியட்ஸ் டைமில் கூட பயன் படுத்தலாம்.. எனக்கு நல்ல ஆறுதலாக இருந்தது...

ரொம்ப நன்றி, இப்போ நல்லா புரிஞ்சிருச்சு சுபா.
சரி,நான் கேள்வி கேட்டா உமாவுக்கு பதில் சொல்ரீங்க,ஜலீலாக்கா என்னடான்னா செம்பருத்திக்கு பதில் கொடுக்கிராங்க.

டியர் கேஆர்,
உங்க பேரு உமா இல்லையா???
சாரி மன்னிக்கவும் இதையும் இனி நோட்டில் குறிக்கவேண்டியது தான்...

என்னவோ இந்த ஒரு வாரமா உளுந்தங்களி சாப்பிடனும் போல இருந்தது. பார்த்தா ,
ஆஹா.........என்னவோ எனக்காகவே நீங்க குடுத்தது போல.அரிசி மாவு இருக்கு,உளுந்து வீட்டில் உள்ளதை வறுத்து மிக்ஸியில் அரைதுக்கொல்லலாமா?
சரி,சுபா இந்த வாரம் இத செய்து பார்த்துட்டு சொல்ரேம்பா.
ம்ம்ம்ம்........நோட்ல நல்லா கரெக்டா குறீச்சுக்குங்க..