தேதி: March 25, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
நல்ல வெள்ளை கத்திரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி பேஸ்ட் - 90 கிராம் டின் (அ) தோலெடுத்து அரைத்தது
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
தாளிக்க:
ஆலிவ் ஆயில் (அ) நல்லெண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கடுகு - அரை தேக்கரண்டி
முழு மிளகு - நான்கு
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - நான்கு பல் (தட்டி கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
கத்திரிக்காயை நல்ல கழுவி பொடியாக நறுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கத்திரிக்காய் போட்டு நல்ல வதக்கி மூடி போட்டு ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து வேக விடவும்.
பிறகு தக்காளி பேஸ்ட், மிளகாய் தூள், உப்பு தூள், பச்சை மிளகாய் இரண்டாக ஒடித்து போட்டு கிளறி மீண்டும் தீயை பத்து நிமிடம் சிம்மில் வைத்து தொக்கு போல் ஆனதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இது தயிர் சாதம், லெமென் சாதம், எல்லா வகையான பிரியாணிக்கும் ஏற்றது.
Comments
hi jaleela
hi jaleela,
in us,v get only violet brinjal.shall i prepare this recipe with that?
ஜெயந்தி,கத்திரிக்கா
எல்லா கத்திரிக்காயிலும் செய்யலாம்.
ஜெயந்தி,
Jaleelakamal
hi jaleela
hi jaleela,
yesterday i prepare ur kathirikai thokku. its very very tasty.
expecting more kathirikai recipe.
thanks.
கத்திரிக்காயில் பஜ்ஜி
ஹாய் ஜெயந்தி
கத்திரிக்காய் தொக்கு நல்ல இருந்ததா
எண்ணை கத்திரிக்காய் கொடுத்துள்ளேன் பாருங்கள், இன்று கூடகத்திரிக்காய் ரசம் கொடுத்துள்ளேன், கத்திரிக்காயில் பஜ்ஜி கூட நல்ல இருக்கும்.
நீங்கள் மட்டன் சாப்பிடுபவராக இருந்தால் மட்டனில் கத்திரிக்காய் போட்டு கூட செய்யலாம்.ரொம்ப டேஸ்டாக இருக்கும்.
ஜலீலா
Jaleelakamal
ஜலீலா மேடம்
தனியா தூள் சேர்க்க வேண்டாமா,என்னிடம் காஷ்மீர் மிளகாய் தூள் இல்லை.வெறும் மிளகாய் தூள் தான் இருக்கு.அப்படி அதை போட்டா காரம் ரொம்ப இருக்குமா,தனியா தூள் சேர்க்கலாமா?
ஜெயந்தி கத்திரிக்காய்
ஜெயந்தி கத்திரிக்காய் தொக்கு செய்து பார்த்து உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ஜலீலா
Jaleelakamal
ஹாய் சுகன்யா தொக்கு
ஹாய் சுகன்யா தொக்கு என்றால் அப்படியே ரெட் கலரில் கூட்டு மதிரி இருக்கும், தனியா தூள் சேர்த்தால் மஞ்சள் கலந்த நிறம் வரும், அப்படி உங்களுக்கு அது சேர்த்தால் தான் பிடிக்கும் என்றால் அரை தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள்.
காஷ்மீரி சில்லி இல்லை என்றால் ( மிள்காய் துள் + ரெட் கலர் சிறிது சேர்த்து கொள்லுங்கள்.) இல்லை முழு மிளகாயை ஊறவைத்து அரைத்து ஊற்றுங்கள்.)
(தனியா தூள் எதற்கு சேர்க்கிறோம் என்றால் கிரேவி நிறைய வருவதற்கும், நிறைய காரம் சேர்த்து சமைக்கும் உணவிற்கு வயிற்றி புண்ணு ஏற்படாமல் இருப்பதற்கும்)
தனியா உடம்பிற்கு ரொம்ப நல்லது.பல வயிறு உபாதை களுக்கும்நல்லது. அஜீரணத்துக்கு தயாரிக்கும் சுக்கு காப்பிக்கு கூட தனியாதான் சேர்ப்பார்கள்.
ஜலீலா
Jaleelakamal
நன்றி ஜலீலா மேடம்
உங்கள் உடனடி பதிலுக்கு நன்றிபா.நான் எதற்கு கேட்டேனா வெறும் மிளகாதூள்னா வயிறுக்கு எரிச்சலாயிடும் அதனால தான்.ஆனால் நீங்க சொல்ற மாதிரி காஷ்மீர் தூள் போட்டு செய்தா ப்ரச்சனை இல்ல,ஏன்னா அதுல காரம் கம்மி.அதான்.அப்புறம் 4 காய்ந்த மிளகாய் ஊற வச்சு அரைச்சா கரெக்டா இருக்குமாபா.
டியர் சுகன்யா
டியர் சுகன்யா உங்களுக்கு தக்காளி பேஸ்ட், பூண்டு, சீரகம், ஆலிவ் ஆயில் சேர்வதால் காரத்தை அடித்து விடும், (ஏற்கனவே தாளிக்க ஒரு மிளகய் + பச்ச மிளகாய் சேர்வதால் முன்று போதும் என்று நினைக்கிறேன் தனி மிளகாய் தூள் என்றால் அரை தேக்கரண்டி போது + ஒரு பின்ச் அளவு ரெட் கலர் பொடி சேருங்கள் ( தக்காளி பேஸ்டே நல்ல கலர் கொடுக்கும்)
ஜலீலா
Jaleelakamal
உடனடியான பதில்
இன்றைக்கு இது தான் செய்ய போறேன்,எப்படியும் நல்லா வரும்.அதனால் இப்பவே உங்களுக்கு நன்றிபா
பிரியாணிக்கு சூப்பர் காம்பினேஷன்
உங்களின் வெஜிடபள் பிரியாணிக்கு இந்த தொக்கு செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. எனக்கு கத்தரிக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். உங்களிடம் பைங்கன் பர்தா குறிப்பு இருந்தால் கொடுக்கவும்.
லாவண்யா
Never give up!!!
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
வெள்ளை கத்திரிக்காய் தொக்கு
வெள்ளை கத்திரிக்காய் தொக்கு செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி லாவன்யா.
Jaleelakamal