தடங்கலுக்கு வருந்துகின்றோம் - சர்வர் பராமரிப்பு பணிகள்

தற்போது சர்வர் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால், அவ்வபோது அறுசுவையை பார்வையிடுதலில் சங்கடங்கள் உண்டாகலாம். சில நிமிடங்கள் அறுசுவை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். சிறிது நேரத்திற்கு பின்னர் அனைத்தும் பழைய நிலைக்கு வந்துவிடும். தவிர்க்க இயலாமல் கொடுக்கப்படும் இந்த சிரமத்திற்கு மன்னிக்கவும்.

சர்வர் பராமரிப்பு காரணங்களுக்காக அறுசுவையை சிறிது நேரம் நிறுத்தி வைத்திருந்தோம். தற்போது அந்த பணிகள் முடிவுற்ற நிலையில், இனி தடங்கலின்றி பார்வையிடலாம். பார்வையிடுதலில் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் இங்கு தெரிவிக்கவும்.

எந்த பிரச்சனையும் இல்லாமல், அறுசுவை இமைக்கும் பொழுதில் தளம் வருகிறது. தங்களின் கடின உழைப்பிற்கு நன்றி.

அறுசுவை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. அறுசுவைக்காக நீங்கள் கடினமாக பாடுபடுவது எங்கள் அனைவருக்குமே தெரியும். மென் மேலும் அறுசுவையும் உங்கள் பணியும் வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

இன்று அறுசுவை ஓரளவு பறவாயில்லை, இருப்பினும் முன்பு இருந்ததுபோல் விரைவாக இல்லை. சீக்கிரம் வழமைக்குத் திரும்பிவிடும் என நம்புகிறேன். உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு சுமார் 2 மாதமாகவே அறுசுவையில் ப்ரச்சனை வருது..பலமுறை லாகின் செய்ய வேண்டும்..சில த்ரெட்டில் மட்டுமே நுழைய முடியும்..சிலதில் முடியாது லாகின் செய்தாலும் ஆகாது...அதுவே அடுத்த நாளைக்கு லாகின் ஆகலாம் திரும்ப வேற த்ரெட்டில் ப்ரச்சனை.
இந்த ப்ரச்சனை எமிரேட்ஸ் ப்ரச்சனையா இல்லை மற்றவர்களுக்கும் உண்டா என்று தெரியபடுத்தவும்..அட்மினுக்கு என்னவென்று சொல்ல உபயோகமாக இருக்கும்.

தளிகா,
அப்படியெல்லாம் எனக்குப் பிரச்சனை இல்லை. ஓபின் பண்ண நீண்ட நேரம் எடுக்கும் அவ்வளவுதான். ஆனால் இப்போ நன்றாக இருக்கிறது. பகலில் அதிகப்பேர் பார்ப்பதாலும் தாமதமாகுதே தெரியவில்லை.
ஆனால் சில நேரம் அடிக்கடி பெயர்ப் பதிவு கேட்கிறது... என் கொம்பியூட்டரே என்னைச் சந்தேகபடுகிறதோ என்னவோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

லாகின் செய்த பிறகு, சில த்ரெட்டில் நுழைய முடியாவிட்டால், Page-ஐ ஒரு முறை, refresh செய்து பாருங்கள். எனக்கு இப்படி செய்தால் பிரச்சனை சரியாகிறது

இல்லை வித்யா ரெப்ஃரெஷ் பன்னினாலும் அந்த த்ரெட்டில் நுழைய முடியாது...ஆனால் உடனே வேற த்ரெட்டில் போனால் தானாக லாகின் ஆகியிருக்கும்...என்ன மாயமோ..அதிரா சொல்லும் அதே ப்ரச்சனை தான்.
அட்மினுக்கு நான் தெரியப்படுத்துவதுண்டு....யாரும் சரியாக என்ன ப்ரச்சனை என்று சொல்லாததால் அவருக்கு சரியான ஆலோசனை சொல்ல கஷ்டம்....ப்ரச்சனை இருப்பவர்கள் என்ன ப்ரச்சனை எத்தனை நாட்க்களாக இருக்கிறது என்று சொன்னால் அவர் ஆலோசனை சொல்வார்..
உதாரணத்திற்கு நேற்று இரவு கைவேலைப்பாடுகள் பகுதியில் எம்ப்ராயிடரியை பார்வையிட முடியாமல் இந்த பக்கத்தை பார்வையிட உங்களுக்கு அனுமதியில்லை என்று வந்தது..அதுவே இன்று காலை திறக்கிறது....

எனக்கு தெரிந்த வகையில் அறுசுவையில் இருக்கும் பிரச்சனைகளை இங்கே குறிப்பிடுகின்றேன்.

நமது தளத்திற்கும் peak hours என்று சில மணி நேரங்கள் இருக்கின்றது. இந்திய நேரப்படி பகல் 9 மணியில் இருந்து மதியம் 12 வரை. பின்னர் இரவு 8 ல் இருந்து 12 வரை (US ல் இது பகல் நேரம்). இந்த நேரங்களில் அறுசுவையை மிக அதிகம் பேர் பார்வையிடுகின்றனர். இந்த நேரங்களில் ஒரே நேரத்தில் 400க்கும் அதிகமான பார்வையாளர்கள் அறுசுவையை திறக்க முயற்சி செய்கின்றனர். இது சர்வரை பாதிக்கின்ற காரணத்தால், தற்போதைக்கு ஒரே நேரத்தில் கனெக்ட் செய்பவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி குறைத்து வைத்துள்ளேன். இதனால் சர்வருக்கு பிரச்சனையில்லாமல் இருக்கும். ஆனால், பார்வையாளர்கள் பலரால் அறுசுவையை திறக்க முடியாது. மிகவும் ஸ்லோவாக இருக்கும். பலருக்கும் the page cannot be displayed என்று error message வரும்.

இது முக்கிய பிரச்சனை. இதற்கு இரண்டு விசயங்களை சரி செய்ய வேண்டும். ஒன்று, தற்போது இருக்கும் application ஐ மாற்றியமைக்க வேண்டும். இது ஏராளமான resource எடுத்து கொள்கின்றது. அடுத்து, ஒரு சர்வரை மட்டும் வைத்து காலத்தை ஓட்டாமல், மல்டிபிள் சர்வர்ஸ் என்று மாறவேண்டும். இந்த இரண்டையும் அடுத்த சில மாதங்களில் செய்யவிருகின்றோம்.

அடுத்து, அவ்வபோது லாக் அவுட் ஆகும் பிரச்சனை. எங்கள் பக்கமிருந்து தினமும் ஒருமுறை sessions table clear செய்கின்றோம். இதை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. அப்படி செய்யும்போது அப்போது லாகின் செய்திருந்தவர்கள் எல்லாம் லாக் அவுட் ஆகிவிடுவார்கள். இதை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே செய்கின்றோம். அதுவும் அதிகம் பேர் லாகின் செய்திராத நேரம் பார்த்து செய்கின்றோம். நாள் ஒன்றுக்கு ஒருமுறை லாக் அவுட் பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம். சகோதரி தளிகா குறிப்பிட்டுள்ளதுபோல், அடிக்கடி லாக் அவுட் ஆனால் இங்கே தெரிவிக்கவும்.

இப்போதெல்லாம் மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை சர்வர் ரீஸ்டார்ட் செய்யவேண்டியுள்ளது. அந்த நேரங்களில் சில நிமிடங்கள் அறுசுவை கிடைக்காமல் போகும். நானும் சர்வரில் பல மாற்றங்கள் செய்து பார்த்து, performance improve செய்ய முடியுமா என்பதை தொடர்ந்து முயற்சித்து வருகின்றேன். நான் இப்படி விளையாடிக்கொண்டிருக்கும் நேரங்களிலும் சில சமயம் அறுசுவையை திறக்க இயலாமல் போகும்.

அறுசுவை வேகத்தை கூட்ட crawling bots ஐ கட்டுப்படுத்திவிட்டோம். இதனால் கூகிள், அலெக்ஸா போன்றவற்றில் அறுசுவையின் இடம் கீழே சென்றுவிடும். வேறு வழியில்லை. எல்லாம் மாற்றியமைக்கப்படும் வரை இப்படித்தான் எடுத்துச் செல்லவேண்டும்.

ஆனால், சகோதரி தளிகா குறிப்பிட்டுள்ள பிரச்சனை முன்பு UAE வருகையாளர்களுக்கு மட்டும் இருந்தது. இப்போதும் அது தொடர்கின்றதா என்பது தெரியவில்லை. மற்றவர்கள் அதனை தெரியப்படுத்தினால் காரணம் கண்டறிய உதவியாக இருக்கும்.

இப்ப கடைசியாக இன்னொரு முறை கேட்கிறேன்.
சில மாதங்களாக நான் சொல்லி வரும் உள்நுழைவு ப்ரச்சனை எனக்கு மட்டும் என்று நினைத்தேன்.பிறகு எமிரேட்ஸ் ப்ரச்சனை என்று நினைத்தேன்.ஆனால் பல சமயமும் பலரும் பேசுவதைக் கேட்டால் உங்களுக்கும் அதே ப்ரச்சனை உண்டோ என்று தோன்றுகிறது.
கடைசியாக கேட்டு பதில் எதுவும் அதிகம் வராததால் இது எமிரேட்ஸ் ப்ரச்சனை தான் என்று முடிவுக்கு வர நேற்று விஜிக்கும் அதே ப்ரச்சனை இருப்பதாக சொன்னார்..அதனால் கடைசியாக யாருக்கெல்லாம் இந்த ப்ரச்சனை உண்டு என்று தயவு செய்து தெரியப்படுத்தவும்..ஹேன்ட்ஸ் அப்ப்

மேலும் சில பதிவுகள்