அறுசுவை தோழிகளே முடிஉதிர்வது பற்றிய புதிய த்ரெ்ட் [anjali]

ஹலோ அறுசுவை தோழிகளே நான் anjali,எங்க போய்ட்டீங்க எல்லாரும் நான் தான் காலையிலிருந்து வரலயேன்னு பார்த்தா இங்க வந்தா யாரையும் காணும். எல்லரும் இன்னகி அறுசுவைக்கு லீவா?

அறுசுவை ஒரே சோகமா காட்சியிகளிக்கு என்ன காரணம்? அறுசுவையை பார்வையிடுதலில் பிரச்சனையா? எந்த பிரச்சனையும் இல்லாமல், அறுசுவை இமைக்கும் பொழுதில் தளம் வருகிறது. அறுசுவை கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

hai:- viji,ammu, anu,rajini,jayesree,nandhini, priya,athira,thalika,banu,muthulaxmi,manohari madam ஹர்ஷினி எப்படி இருக்கிங்க?
guest கூட ரொம்ப பிசி. உடனே கலந்துகொள்ள முடியவில்லை sorry!!! nandhini mail id எங்கே? அனுப்புங்க சரியா ஒ.கே

அம்மு முடிஉதிர்வது பற்றி கேட்டு இருந்தீங்க என்னால உடனே பதில் அனுப்ப முடியவில்லைய் உறவினர்களோடு ரொம்ப பிசி.உங்களுக்கும் விடையளிப்பதற்காகவும்.அறுசுவை தோழிகளோடு கலந்துரையடுதலுக்கும் இந்த புதிய த்ரெ்ட் ஒபன் பண்ணிருக்கிறேன்.

நான் எனக்கு தெரிந்தவிஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

முடிஉதிர்வது எல்லாருக்குமே பெரும்பிரச்சனையாக உள்ளது.இதற்கு காரணமென்ன?

மனகவலையால் முடிகொட்டுகிறதா? வைட்டமின்குறைவால ?அல்லது தரமான சாம்பு உபயோகிகாமலா? கன்டிஸ்னர் உபயோகிகாமலா? சொல்லுங்க.

முடிஉதிர்வதுக்கு இத்தெல்லாம் சரியானகாரணங்கள்தான் இருப்பினும் வேற ஒரு தலையான காரணமுண்டு.

முடிஉதிர்வதுக்கு தண்ணீரும் காரணம் தான்! இதை மறந்துவிடுகிறோம்

எல்லாநாடுகளிலும்,நகரங்களிலும் நாம் பயன்ப்படுத்தும் குழாய் தண்ணிரீல் குளோரின் அளவு அதிகம் .அதனால் முடிகொட்டுவதும் அதிகமாக உள்ளது.

அதிலும் வெளிநாடுகளில் வாழ்வோருக்கு கேட்கவே வேண்டாம் ......தோலுக்கூட மாய்ஸ்டர் தடவினால் தான்! வாழவே முடியும் அவளவு ட்ரையான சூழ்நிலை.

ட்ரையான சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழ்வோருக்கு [ஆண்களுக்கும்,பெண்களுக்கும் ]பெரும்பிரச்சனை முடிஉதிர்வதுதான்!

ட்ரையான சூழ்நிலையில் முடியின் நிலையோ அந்தோ பரிதாபம்!முடிக்கு திண்டாடம்! பொடுக்கு கொண்டாடம்!
எங்கே பார்த்தாலும் முடி?எதில பார்த்தாலும் முடி?இதை சமாளிப்பது எப்படி?

ஒரே வழிதான் நான் கண்டேன்.!முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டாலும்,முடிந்தவரைய் கட்டுப்படுத்த முடிந்தது முடியைய்.

அது என்ன வழி என்று கேள்கிரீர்களா? உங்கள் குளியலறையில் தான் உள்ளது இதன் இரகசியம்.ஸ்வர் அது தான் இரகசியம் ஓ.கே.
ஸ்வர்ரில் ஸ்வர் fliterயை மட்டினால் தண்ணிரீல் உள்ள குளோரின் அளவு குறைக்கப்பட்டு முடிஉதிர்வது கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் ஒரு செய்தி எல்லா கடைளிலும் ஸ்வர் fliter கிடைக்கும் என்று நினைக்கிறேன்.[USA]வெளிநாடுகளில் வாழ்வோருக்கு BED BATH BEYOND,MALL,'TARGET ஆகிய கடைளில் கிடைக்கிறது.

முடிஉதிர்வது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும்.
இதை பார்த்து படித்துவிடு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள்தோழி.
ANJALI

ஹாய் தோழிகளே, நான் அஞ்சலி . முடி பற்றி மேலும் ஒரு டிப்ஸ்

முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? இரும்புசத்து, புரோட்டீன்.இந்த இரண்டும் மிக முக்கியம். இந்த இரண்டும் குறைபாடு இருந்தால் தலைமுடி கொட்டும்.

ஆதலால் அன்றாட வாழ்கையில் இரும்புசத்து, புரோட்டீன். உள்ள உணவை உண்ணுவது உத்தமம்.

முடி,ஆயில் முடியா? வறண்ட முடியா?என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? எளிய டிப்ஸ்.

ஒரு பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து தலைமுடியில் மிதமாக அழுத்தி,1 நிமிடம் வரை வைத்திருங்கள்,பின்

எடுத்துபாருங்கள்,பெப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால்,உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று தெரியும்.

அப்படியில்லாமல், பெப்பரில் , தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால் தலைமுடி ,வறண்ட தன்மை கொண்டது

தலைமுடி[ஆயில் தன்மை , வறண்ட தன்மை ]எந்த வகை என்று தெரிந்து கொண்டு அதற்குரிய ஷாம்புவை பயன்படுத்துவது உத்தமம்.

ஆயில்முடியுள்ளவர்கள், ஆயிலை நீக்கிசீராக்கும் வகையிலுள்ள டீப் கிளீன்சிங்! ஷாம்புவை பயன்ப்படுத்த வேண்டும்.

வறண்டதலைமுடியுள்ளவர்கள் ,கண்டிஷனர் தரம் அதிகமுள்ள s.l.e.s என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்புவை பயன்ப்படுத்தினால் நல்லது

naturebeuaty

ஆகா... அஞ்சலி அருமையான குறிப்புகள்....
இப்ப என்ன முடி ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அஞ்சலி சொன்னவை அனைத்தும் முடி உதிர்வதற்கான காரணங்கள்தான். இருந்தாலும் முடி உதிரும் போது முடிதானே, போகட்டும்னு இருக்க முடியாதே.

முடிந்த வரை உதிர்வதை குறைப்பதற்காவது ஏதாவது செய்தாக வேண்டுமே.

நல்ல முற்றிய தேங்காயை துருவி, அரைத்து (முடிந்த வரை மிக்ஸியில் அரைக்காமல் உரலில் அரைப்பது நல்லது)பால் பிழிந்து ஒரு இரும்பு வாணலியில் ஊற்றி மிதமான தணலில் காய்ச்சவும். தண்ணீர் வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கி ஆற விட்டு, வடிகட்டி தலைக்கு தேய்த்து ஒருமணி நேரம் ஊற விட்டு, சீயக்காய்த்தூள் தேய்த்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இப்படி செய்தால் முடி உதிர்வது நின்று, நல்லா வளர ஆரம்பிக்கும்.

காய்ச்சும் போது அடியில் தங்கும் வண்டல் திரிந்து போகாமல், உருட்டுவது போல் வர வேண்டும்.

தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் வழக்கம் இருப்பவர்கள் தினமும் கூட இந்த எண்ணெயை தடவலாம்.

ஆனால் ஒரு வாரத்திற்குள் உபயோகித்து விட வேண்டும்.

அரைக்காமல் கையால் பிழிந்து பால் எடுத்து அதை மட்டும் காய்ச்சினால் இன்னும் நல்லது.
பால் எடுத்த தேங்காயை அரைத்து சமைக்க பயன்படுத்தலாம்(கையால் பிழிந்தால்).
முக்கியமாக தலையில் பொடுகு இருந்தாலும் முடி கொட்டும். அதனால், முதலில் பொடுகை நீக்கி விட்டு பிறகு முடி வளர எதுவும் செய்தால்தான் பலன் அளிக்கும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எப்படி இருக்கீங்க?
கையால் பிழிந்து பால் எடுப்பது என்றால் எப்படி. தேங்காயை துருவி அப்படியே பிழியனும்மா? கொஞ்சம் தானே பால் வரும். பொடுகை போக்க உங்களுக்கு எதும் வழி தெரியுமா?

இப்ப மனசு வச்சா செய்யலாம் ஆனால் நான் செய்ரதில்லை...திருமணத்துக்கு முன்பு வரை வாரம் ஒரு முறை நல்லெண்ணையை லேசாக சூடாக்கி அதில் 4 துளி எலுமிச்சை நீர் விட்டு தலைக்கு தேச்சு 20 நிமிஷம் கழிச்சு குளிப்பேன்..முடி சும்மா கறுகறுன்னு அருமையா வளரும்...அது செய்வதை நிறுத்தினப்ப தான் அதன் மகிமை புரியுது.

நலமா? எப்படி இருக்கீங்க?
நான் நல்லெண்ணை காய்ச்சுவேன். பொடுகுக்கு வெல்லத்தையும், நன்றாக வளர 4 துளி எலுமிச்சை நீர் விடவா? ஒன்றுக் ஒன்று react ஆகாதே? போற போக்கில் நடிகர் ரஜனிகாந்த் மாதிரி ஆகி விடுவேனுன்னு பயமா இருக்கு

ஆன் போட்டுப்பாத்துட்டு எனக்கு சொல்லுங்க..உங்களுக்கு ஒன்னும் ஆவாட்டி நானும் போடறேன் ..ஹிஹிஹீ
இதுக்கெல்லாம் பயந்தா எப்படிப்பா ஒன்னும் ஆவாது சும்மா சத்தியராஜ் மாதிரி முடி வரும் பாருங்க.

அன்பு வித்யா,
நலமா? நைசாக துருவி, துருவியவுடன் கையால் இறுக்கி பிழிந்தால் வரும் பால் ஒரு முறை தேய்க்க போதுமானது.
பொடுகுக்கு தேங்காய்ப்பால் பிழிந்து, 1/2 மூடி எலுமிச்சம் பழம் அதில் சாறு பிழிந்து தலையில் தேய்த்து 1/2 மணி ஊற விட்டு சீயக்காய் தேய்த்து குளிச்சா சரியாகும்.
வேப்பிலையை அரைச்சு தலைல அரை மணி ஊற விட்டு குளிச்சாலும் போகும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கட்டாயமாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.
வெல்லத்திற்கே பொடுகு கொஞ்சம் பரவாயில்லை.

செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். வேப்பிலை முடியாது(இங்கு கிடைக்காது) , தேங்காய் காட்டாயமாக செய்கிறேன்.
உங்கள் புகை படம் பார்த்த பிறகு, உங்களை அக்கா என்றோ, அம்மா என்றோ கூற முடியவில்லை, என் தோழி போல் தான் உள்ளீர்கள். இளமையின் ரகசியம் என்ன?

மேலும் சில பதிவுகள்