தேதி: March 27, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுந்து - ஒரு கப்
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் பொரிக்க - ஒரு கப்
தயிரில் சேர்ப்பதற்கு:
கெட்டி தயிர் - ஒரு கப்
பொடியாக துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4
அலங்கரிக்க:
பூந்தி - கால் கப்
பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு தேக்கரண்டி
கேரட் துருவல் - ஒரு தேக்கரண்டி
உளுந்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறிய உளுந்தினை நன்கு மை போல கெட்டியாக அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
எண்ணெயை காயவைத்து உளுந்து வடைக்கு தட்டுவது போல் கையை தண்ணீரில் நனைத்து மாவை எடுத்து ஆள் காட்டி விரலாலும் கட்டை விரலாலும் நடுவில் ஒரு குழி இட்டு அப்படியே காய வைத்த எண்ணெயில் போட்டு பொரித்து வைக்கவும்.
2 கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து பின் பொரித்த வடைகளை அதில் போட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் பிழிந்து எடுக்கவும்.
தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து கலந்து அதில் பிழிந்து எடுத்த வடையை போட்டு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். பரிமாறும்பொழுது அதன் மேல் பூந்தி, கேரட் துருவல், மல்லி இலை தூவி அலங்கரித்து பரிமாற சுவையான அழகான வெள்ளை வெள்ளேர் என்று இருக்கும் தயிர் வடை ரெடி.
இங்கு ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் உளுந்து வடை இப்படி தான் செய்வார்கள். ஆனால் இதில் நான் துருவல் தான் சேர்த்துள்ளேன். அவர்கள் இஞ்சி, மிளகாயை அரைத்தே சேர்த்திருப்பார்கள். ரொம்ப நாள் பரீஷனத்திற்கு பின் செய்முறையை கண்டுபிடித்தேன். தாளிப்பு போதும் என்று நினைப்பவர்கள் அலங்காரப் பொருட்களுக்கு பதில் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ஊற்றுங்கள்.
Comments
( நீங்க நானா (அ) நான் நீங்களான்னு)
தளிக்கா சொல்லி வைத்த மாதிரி ( நீங்க நானா (அ) நான் நீங்களான்னு) தெரியல சொல்லி வைத்த மாதிரி அப்பட்டியே இருக்கு ஆனால் இந்த ரெஸிபி நான் கொடுக்கவில்லை நோன்பில் மட்டும் தான் செய்வேன் என் பெரிய பையனுக்கு இது ரொம்ப பிடிக்கும்.தயிர் வடை குறிப்பு அருமை
ஜலீலா
Jaleelakamal
ரூபி கண்ணு
வாவ்!இது என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஸ்னாக்.இது கொஞ்சம் டிஃப்ரன்ட்டா இருக்கு ரூபி கண்ணு. செய்து பார்த்துட்டு கன்டிப்பா சொல்ரேன்,சரியா.
ம்ம்ம்ம்.......முணுமுணுப்பு கேட்குது இங்க வரை,என்னடா இந்த ஹிபா, தளிகாஸ் சிக்கன் ரோஸ்ட்டுகே இன்னும் பினூடத்தை காணோம்,இதத்தான் செஞ்சி கிழிக்கப்போராலாக்கும்னு.......
என்னத்த சொல்ல இங்க 15 நாலா,ஹலால் சிக்கன் கிடைக்கலேப்பா..ஆனா,இந்த ரெசிப்பி(தயிர் வடை) இந்த வாரம் செய்யனும்னு முடிவு செஞ்சிட்டோமில்ல....
என்னுடைய
என்னுடைய இனியா தோழிக்களூக்கு வணக்கம், நான் அருசுவை பகுதிக்கு புதியவள்.i am living in silanka now.
with love,
kamali
With love,
Kamali
ஹாய் கமலி
புது வரவான உங்களை வருக வருக என்று அறுசுவை தோழிகள் சார்பில் வரவேற்க்கிறேன்.
அன்புடன் கதீஜா.
urud vadai
ஓஹோ சற்று முன் தான் இங்கே பதிவு இருப்பதை பார்த்தேன்..அதான் ஜலீலாக்கா பூர்வ ஜென்ம பந்தம்...எங்க வீட்டுக்கு பெரிய பைய்யனுக்கும் இது ரொம்ப இஷ்டம்(ஆத்துக்காரர்)
ஹிப அதுக்கென்ன நேரம் கெடச்சா செய்யலாம் இல்லாட்டி இனி எப்பவவது செய்யலாம்..
இன்னொரு டிப்ஸ் - என் ஃப்ரென்ட் சொல்லி செஞ்சு பார்த்தேன்...உழுந்து வடை செய்ய நேரம் இல்லை ஆனால் சாப்பிடனும்னு ஆசையா...ப்ரெட் ஸ்லைcஎஸை சதுரங்களாக வெட்டி எண்ணையில் பொரித்து ஊற விட வேண்டாம் அப்படியே தயிரில் போட்டு சாப்பிட்டால் உழுந்து வடை போலவே இருக்கு
தளிகாவின் தயிர் வடை.
ரூபி,இன்று கொஞம் பிசி,ஏன்னு சொல்லு.ம்ம்ம்...நானே சொல்ரேன்,உன்னுடைய தயிர் வடை செய்தேன்.இனி தான் சாப்பிடனும்.
விட்டுப்போன நோன்பு வைத்தேன்.இஃப்தாருக்கு செய்தேன்.பார்ப்பதர்க்கு சூப்பரா இருக்கு.கன்டிப்பா நல்லா இருக்கும்.
நம்ம அருசுவையில் இருந்து ரத்னா கஃபே சாம்பார் என்று ஒரு ரெசிப்பி இருக்கில்ல அதுவும் செய்தேன்.டின்னருக்கு இட்லி,இந்த சாம்பார்,சட்னி உன்னுடைய உள்ளி சம்மந்தி.தேங்காய் சம்மந்தி தான் செய்யலாம்னு... ஆனால் தேங்காய் தற்சமயம் லேது......
ஆஹா..... தயிர் வடை.
ரூபி,
தயிர் வடை சூப்பரோ சூப்பர்..........
உடனே சொல்லனும் என்று நினைத்தேன்,நேரம் இல்லாதது தான் காரணம்.ஆனால் இதை செய்து வைத்துள்ளேன்,நோன்பு திறந்து தான் சாபிடனும்னு சொன்னேன் தானே,நேரம் இல்லைனு பின்னூடம் கொடுக்கலைனு யாருக்கு தெரியும்,தளிகாவின் தயிர் வடை நல்லா இல்லை போல,அதனால தான் சாப்பிட்டுவிட்டு பின்னூட்டதைக்கானோம் என்று யாரும் எண்ணிவிடக்கூடாதே.
இது எல்லோரும் கண்ன்டிப்பா செய்து பாருங்க.ரொம்ப நல்லா இருந்தது.இட்லி,தோசைக்கு உளுந்து அரைக்கும் போதே கொஞ்சம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்து செய்தால் சுலபமும் கூட.
பூந்தியும்,கேரட்டும் துருவி போடேன்.தாளிக்கவும் செய்தேன்.
ரூபி,,இதை எழுத எழுத நாக்கு ஊறுது....வாவ்...நல்லா எஞ்சாய் பண்ணி சாப்பிட்டோம்.நன்றி ரூபி,இந்த ரெசிப்பிக்கு.
நிஜம் தான்
நிஜம் தான் நானும் பிடிக்கவில்லை போல என்று நினைத்து விட்டேன்...சில குறிப்பு நமக்கு பெயர் வாங்கி தந்தாலும் அதனை அடுத்தவர்கள் செய்தால் அது போல வராது அது மாதிரி ஹிபாவுக்கு உழுந்து வடை பிடித்திருக்காது என நினைத்தேன் இப்பொழுது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி ஹிபா
Dahi vada
This recipe inspiring us to try for it soon.Could u plz tell us ulunthu 1 cup = howmuch ml measurement cup.Expecting your earliest reply.
Thanks for the nice recipe.
measurement help
அடடா எனக்கு இப்படி சொல்ல தெரியாதே...அதாவது சின்ன டீ கப்பில் 1.5 கப் வரும்..எம் எல் இல் சொல்ல எனக்கு தெரியலையே யாராவது உதவுங்களேன்.
Thalika & Ravi
thalika... net'la adichchaa 1 kap'ku 240 ML 'nu varudhu. But Ravi you can choose a tea cup and measure all ingredients with the same cup (Whichever has the measurment in cup). then you will get it right.
Thalika, i think jaleela can help, i saw the same details given by her in some other recipe.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரவி உளுந்தை கிராம் கணக்கில்
ரவி உளுந்தை கிராம் கணக்கில் தான் அளக்க முடியும் நீஙக் பயன் படுத்தும் டீ கப்பாக இருந்தால் இரண்டு கப் போடுங்கல்
இல்லை 220 கிராம் போடனும் இது எப்படி போட்டாலும் ஒகே தான் தான்ரைஸ் குக்கர் கப் என்றால் ஒன்னறை போடுங்கள்
ஜலீலா
Jaleelakamal
நன்றி ஜலீலக்கா &வனிதா
நன்றி ஜலீலக்கா வனிதா..திரு ரவி நீங்கள் தாளித்தே சாப்பிடுங்கள் இது அருமையாக இருக்கும்.