ஈஸி போண்டா

தேதி: March 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - ஒரு கப்
இட்லி மாவு - அரை கப்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு
முந்திரி - 6
நறுக்கிய தேங்காய் பல் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி, உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, மல்லி இவற்றை பொடியாக நறுக்கவும்.
மைதா, இட்லி மாவு, தேங்காய் பல், உப்பு நறுக்கி வைத்திருக்கும் மற்ற சாமான்களையும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


இந்த போண்டா செய்வது ரொம்ப ஈஸி. எண்ணெயும் அதிகம் குடிக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

சென்னையில் ரத்னா கேபே போண்டா எனக்கு வேண்டும் சீக்க்ரம் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
நானே சூப்பரா செய்வேன் ஆனால் எனக்கு அந்த மாதிரி வேண்டும்.
என்க்கு போண்டா பிடிக்கும் என்று தெரிந்து ஊருக்கு போனால் யார் பார்த்தாலும் ஆ ஜலீலா விற்கு போண்டா தான் ரொம்ப பிடிக்கும் உடனே ரத்னா கேபே போண்டாதான்.
எனக்கு அங்கு போய் அவர்கள் எல்லாத்தையும் பார்த்ததே பத்து போண்டா சாப்பிட்ட மாதிரி இருகும்.

வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல அன்பு தொல்லை தாங்கவே முடியாது.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா!..சென்னையில் எங்க இருக்கு ரத்னா கபே? எனக்கு தெரியாதே.. எங்கேன்னு சொல்லுங்க சென்னை போகும்போது சாப்பிட்டுபார்த்து சொல்கிறேன். அதுவரையில் இந்த போண்டாவை சாப்பிட்டு பாருங்க. நல்லா இருக்கும். முன்பு ஒருமுறை மனோகரிகூட ரத்னாகபே சாம்பார் என்று ஒரு குறிப்பு கொடுத்திருந்தார் செய்து பார்த்தேன். நல்ல மணமாகவும் டேஸ்டியாகவும் இருந்தது. அவ்வளவு ஃபேமஸா ரத்னாகபே?

ரத்னா கேபே தெரியாதா சென்னை திருவல்லி கேனியில் உள்ள பேமஸ் ஹோட்டல் அது.
அதுக்கு பேக் சைட் தான் நாங்க இருக்கிறோம்.

கண்டிப்பாக உங்களுடையதும் டிரை பண்ணுவேன்.
ஜலீலா

Jaleelakamal

நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருந்து நான் நேத்து இந்த போண்டா செய்தேன். டீயுடன் சாப்பிட்டோமா ரொம்ப சூப்பர் மேடம். செய்யவும் ஈஸியா இருந்துச்சு, கெஸ்ட் எல்லாம் வந்துட்டா கூட உடனே ரெடி பண்ணறது போலவும் இருக்கு மேடம். அதோட எனக்கு தேங்காய் பல் சேர்த்து செய்தால் ரொம்ப பிடிக்கும். ரொம்ப நன்றி மேடம். உடம்பு இப்ப பரவாயில்லையா மேடம் ரெஸ்ட் எடுத்துக் கோங்க

ஆமாம் காயத்ரி!.... இந்த போண்டா செய்வது ஈஸியாக இருக்கும். எங்க வீட்டிலும் இந்த போண்டா எல்லோருக்கும் பிடிக்கும். பொதுவாகவே என்னுடைய பெரும்பாலான குறிப்புகள் ஈஸியாத்தான் இருக்கும். தேங்க்யூ!!

மாலதி யக்காவ்
நேற்று நோன்பு திறக்க இந்த ஈஸி போண்டா செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது கொஞ்சம் காரகுழிபணியார டெஸ்ட் இருந்தது.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா...! பாராட்டுக்கு நன்றி..! இந்த போண்டா இப்ப என் பேரனுக்கும் ரொம்ப பிடிக்கிறது. ரம்ஜான் வாழ்த்துக்கள்..! ரம்ஜானுக்கு என்ன மெனு தயாரிப்பதாக இருக்கிறீர்கள்?

இரண்டு நாள் முன்பு உங்களுடைய ஈஸி போண்டா செய்தேன். மிகவும் நன்றாக இருந்த்து.
எங்கள் வீட்டில் எப்பொழுதும் இட்லி மாவினை அரைத்து வைத்துவிடுவேன். இப்படி தீடீர் என்று வரும் விருந்தினை சாமாளிக்க சிறந்த ஒரு குறிப்பு இது.
இப்பொழுது தான் பார்த்தென். உங்களுக்கு பேரன் இருப்பதாக சொல்லியிறுக்கின்றிங்க….மிகவும் சந்தோசம்…உங்களை போல பெரியவங்க கூட பேசுவதில் மகிழ்ச்சி.
குறிப்புக்கு மிகவும் நன்றி.
அன்புடன்,
கீதா ஆச்சல்

கீதாஆச்சல்..!! நீங்க நிறைய குறிப்புகள் ஃபோட்டோவுடன் கொடுத்திருக்கிறீர்கள் அல்லவா..!!
இந்த போண்டா எண்ணெய் நிறைய குடிக்காது. சாப்பிட்டபிறகு எண்ணெய்ப்பலகாரம் சாப்பிட்ட திகட்டல் இருக்காது.
நன்றி கீதா..!!

பெயருக்கேற்றார்போல் ரொம்ப ஈசியான போண்டாதான் மேம் இது சுவை நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..