ஆந்திரா வெங்காய (கத்திரிக்காய்) பஜ்ஜி

அக்கா
ஆந்திரா வெங்காய (கத்திரிக்காய்) பஜ்ஜி செய்வது எப்படி
please

radika

எனது மாமியார் ஆந்திரா அவுங்க செய்வாங்க எனக்கு சொல்லிய்யும் கொடுத்துருக்காங்க
பஜ்ஜி இரண்டு முறையில் செய்வாங்க

தேவையான பொருள்
வெங்காயம் - 1
தக்காளி - 4
கருவடாம் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
கத்திரிக்காய் - 250 கிராம்
கறிவேப்பிலை - 10 இலை
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
புளி - எழுமிச்சை அளவு

செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் கத்திரிகாய், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெகவைத்த கலவையை புளி சேர்த்து மத்து வைத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கருவடாமை போடவும்.
வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு, அதில் வேகவைத்தவற்றை ஊற்றவும்..

இன்னொறு முறை வேகவைக்கும் போது மேற்கூறியவற்றில் துவரம் பருப்பு 200 போட்டு வேகவைக்கவும்.

பின்பு கடைந்து தாளிக்கவும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

மேலும் சில பதிவுகள்