hello everybody
iam devi ravikumar. yennoda kelvi yennana yenaku 15 mathathil oru magan ullan. avanuku antibackterial kuraivaga ullathu easyaga infection aagirathu. athai thadupatharku yenna yenna sapadu kodukallam. ungalin anbana pathilukaga kathirukiren.
bye bye
ஹாய் தேவிர்குமார்
எப்படி இருக்கீங்க உங்க பையன் எப்படி இருக்கிறான்.உங்கள் மகன் பற்றி கவலைபட வேண்டாம். எனது பையனுக்கும் இதே வயசுல இருந்தது அடிக்கடி உடம்பு சரில்லாமல் போகும். எங்கள் வீட்டிலே யாருக்காவது உடம்பு சரில்லாமல் போனால் தடுமல்,காய்ச்சல் அந்த மாதிரி இருந்தால் என் பையனை நினைத்து தான் கவலைப்படுவோம் இவனுக்கு உடனே வந்துடுமே என்ன செய்யன்னு. அப்புறம் சாப்பாட்டுலதான் அவனுக்கு சரியானது. நான் அவனுக்கு உங்க பையன் வயசுல என்ன என்ன ஆகாரம் கொடுத்தேன்னு சொல்றேன் அது படி முயற்ச்சி செய்து பாருங்க.
அரிசி,பருப்பு,காய்கறி சேர்ந்த சாதம்,கீரைகள்,கீரையை சாத்துடன் கலந்தே அரைத்து கொடுக்கலாம் முழு சாதம் கொடுக்க பழக்கி இருந்தால் அப்படியேயும் கொடுக்கலாம். அப்புறம் பழம் என்றால் ஆரஞ்ஜு ஜூஸ் கொடுங்க, ஆப்பிள் வேகவைத்து கொடுங்க,வாழைப்பழம் கொடுங்க, ராகி கொடுக்கலாம் பாட்டலில் கொடுத்தால் அதுலேயே செய்து கொடுக்கலாம்.இட்லி, தோசை நல்லா சாம்பாரில் பிசைந்து கொடுங்க. நீங்க அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் முட்டை,ஈரலில் சிறிது மிளகு,ஜீரகம்,உப்பு சேர்த்து அவித்து அந்த தண்ணீரை கொடுக்கலாம்.காய்கறிகளையும் சீரகம்,மிளகு,உப்பு சேர்த்து வேகவைத்து அந்த தண்ணீரை கொடுத்தாலும் சரி. வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
அன்புடன் கதீஜா.
hello gatheeja akka
thanksakka. ungalin pathil yenaku migavum uthaviyaga ullathu. vazaipazam yen maganuku pidikamattengrathu. yeppadi kudupathu yenru sollavum. appuram ragium yeppadi kodupathu yendru sollavum.
bye akka
devi
devi
அன்பு தங்கை தேவிர்குமார்
எப்படி இருக்கிறீர்கள் பையன் நலமா. வாழைப்பழம் சிறியதுண்டுகளாக நறுக்கி அதன் மேல் சிறிது சீனியை தூவி கொடுத்துப்பாருங்கள். அப்படியும் சாப்பிடவில்லை என்றால் உங்கள் பையனுக்கு மோஷன் அடிக்கடி போகாது என்றால் மலம் நார்மலாக போறதாக இருந்தால் பேசாமல் பாலில் பாதி வாழைப்பழத்தை அடித்தாவது கொடுத்துவிடுங்கள்.ராகியை கூல் போல காய்ச்சி கொடுக்கவும் சிறிது சீனியும் சேர்த்துக்கலாம். அப்படி இல்லை என்றால் ராகியில் களி போல செய்து கூட ஊட்டி விடலாம் எனது குறிப்பில் உள்ளது. வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.
அன்புடன் கதீஜா.
மர்லியா ,கதீஜா
கதீஜா அஸ்ஸலாமு அலைக்கும்
எப்படி இருக்கிறீர்கள் இன்ஷாப் நலமா
மர்லியா எப்படி இருக்காங்க ரொம்ப தேடுது
ஜலீலா
Jaleelakamal
ஹாய் ஜலீலா அக்கா
வஅலைக்குமுஸ்ஸலாம் ஜலீலா அக்கா நான் நல்லா இருக்கேன்.இன்ஷாஃப் நல்லா இருக்கிறான். நீங்க எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் நலமா. மர்ழியா நல்லா இருக்கா அடுத்த வாரம் சென்னைக்கு வந்துடுவாள் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன் கதீஜா.