பலன் தரும் பப்பாளி [anjali]

எல்லாருக்கும் வணக்கமுங்கோ !

நீங்க தந்த ஆதரவுக்கு நன்றிங்கோ!

நாந்தா அஞ்சலிங்கோ!

இன்னைக்கு பப்பாளி பற்றி சொல்லவதிருகேங்கோ!

பப்பாளி பழம் உடல் நலனுக்கு உகந்த சிறந்த பழம். பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்து கொண்டால் நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.

பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.

ஆராய்ச்சியில் பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகளும் L.D.L 23.3குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பப்பாளியில் பப்பின் புரதசத்துள்ளது.பாப்பின் எனப்படும் பப்பாளி பால் மருந்துகள்தயாரிக்கவும் ,முகத்தின் பொலிவுக்கு உபயோகிக்கும் கீரிம்களிலும் சேர்க்கப்படுகின்றன.

பப்பாளிபழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு.

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும் .

சில பெண்களின் முகம் கரடு முரடாகத்தெரியும்.இந்த முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு.பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்.

பெண்கள் சிவப்பழகை பெற செய்ய வேண்டியது

கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1, உலர்ந்த திராட்சை பழம்-10, இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!
இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.
20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.

மென்மையான பாதங்களுக்கு!

பப்பாளி கூழ்-2 டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், விளக்கெண்ணை-கால் டீஸ்பூன், மூன்றையும் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பாதங்களில் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.உங்கள் பாதங்கள் சுருக்கம் இல்லாமல் மென்மையானதாக மாறிவிடும்

பார்த்து படித்துவிடு அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும் .

உங்கள்தோழி,
anjali

very very thanks madam it is veryusefull for me

அஞ்ச்லிங்கோ எப்படி இருக்கிங்கோ ? நலமாங்கோ?

ரொம்ப நல்ல தகவல்கள் சொல்லி இருக்கிங்க ரொம்ப நன்றிப்பா.

அன்புதோழி
ஜெயலக்‌ஷ்மிசுதர்சன்

பப்பாளியை வெறுமனே கூழாக்கி முகத்திலும், கை ,கழுத்திலும் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவி வந்தாலே ஒரு வாரத்திலேயே நல்ல நிறமும் பளபளப்பும் கிடைக்கும்.இது என் சொந்த அனுபவத்தில் நானே உணர்ந்தது.
நீங்கள் இன்னும் நிறைய டிப்ஸ் கொடுத்துள்ளீர்கள். நாச்சுரல் பொருட்களாததால் அனைவருமே பயமில்லாமல் ட்ரை செய்யலாம்.
டிப்ஸ்க்கு நன்றி அஞ்சு...
கவிதாசிவக்குமார்.

anbe sivam

கவிதா நீங்க எங்கே வசிக்கிறீர்கள்.

SIVAKAVI
ஹாய் ப்ரபா!
சென்னையில் தான் வசிக்கிறேன்.ஏன் கேட்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
கவிதாசிவக்குமார்

anbe sivam

மேலும் சில பதிவுகள்