ஃபிரைட் டோஃபு (Fried Tofu & Vegies)

தேதி: April 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

சுவையான இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a>அவர்கள் இந்த வெஜிடபிள் ஃப்ரைடு டோஃபுவின் செய்முறையை படங்களுடன் விளக்குகின்றார். இது ஒரு தாய்லாந்து உணவு.

 

டோஃபு (Tofu) - ஒரு கப்
காரட் - 1/2 கப்
பெல் பெப்பர் - 1/4 கப்
பீன்ஸ் - 1/2 கப்
அஸ்பராகஸ் - 1/2 கப்
காலிஃபிளவர் - 1/2 கப்
வெங்காயம் - 1/4 கப்
உள்ளி - 4 பல்லு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 தேக்கரண்டி
மிளகாய் ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
பிரவுன் சுகர் - 1 தேக்கரண்டி
சோய ஸோஸ் - 1 1/2 தேக்கரண்டி
பட்டர் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும். காரட், பெல்பெப்பர், பீன்ஸ், அஸ்பராகஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமான துண்டுகளாக வெட்டவும். டோஃபு, காலிஃபிளவர், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டவும். உள்ளியை நசித்து வைக்கவும்.
ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு டோஃபுவை சோட்டே(sautee) செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் மிளகாய் ஃபிளேக்ஸ், உள்ளியை போட்டு வதக்கவும்.
பின்னர் நறுக்கின இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளைச் சேர்த்து, உப்பை போட்டு கிளறி மூடி 8- 10 நிமிடங்கள் மூடி மிதமான சூட்டில் அவிய விடவும்.
பின்னர் மூடியை திறந்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை வேக விடவும்.
தண்ணீர் வற்றி காய்கள் ஓரளவு வதங்கியதும் அதனுள் சோயா ஸோஸ், பிரவுண் சீனி சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு கிளறவும். பின்னர் டோஃபுவை கொட்டி கலந்து இறக்கவும்.
சுவையான டோஃபு டிஷ் தயார். இதனை தனியே சாப்பிடலாம் அல்லது நூடில்ஸ், ஸ்பகடியுடன் சேர்த்தும் உண்ணலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த டிஷ் காரமா? அல்லது இனிப்பா?"ஊள்ளீ" என்ட்ரால் என்ன?

உள்ளி என்றால் பூண்டு

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Gayu,

இது காரம் + இனிப்பான ஒரு உணவு. மிளகாய் பிளேக்ஸ் சிறிது அதிகமாக சேர்த்தால் இன்னும் சிறிது காரமாக இருக்கும்.
-நர்மதா :)

அஸ்பராகஸ் என்றால் என்ன?

அஸ்பரகஸ் நீள நீளமாக இருக்கும்.அதாவது பச்சைஒயாக மூங்கில் தண்டு போல் பென்சில் மாதிரி இருக்கும்..ப்ரோக்கோலி,செலெரி எல்லாம் வைக்கும் இடத்தில் இதையும் வைத்திருப்பார்கள்.

எந்த வ்கை tofu வாங்க வேண்டும. will it taste with chapathi

பரீதா, இதற்கு எல்லா வகையான டோபுவும் பாவிக்கலாம். Hard டோபு பொரிக்க இலகுவாக இருக்கும். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
-நர்மதா:)

உங்கள் அனைத்து ரெசிபியும சூப்பர்
உங்கள் பதிலுக்கு நன்றி

hi mam
ஃபிரைட் டோஃப செய்தேன் மிகவும் நான்றாகயிருந்த்தது