திருமணங்கள் தள்ளிப் போக, முதிர் கன்னிகள் அதிகரிக்க எவை காரணங்களாய் இருக்கின்றன?

வாக்கெடுப்பு சம்பந்தமான மற்றுமொரு விவாதம். இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் (இப்போதைக்கு) வேண்டாம் என்று பெண்ணோ, பையனோ சொந்த கருத்துக்களின் காரணமாக சில முடிவுகள் எடுத்து தள்ளிப் போடுகின்றனர். இதில் பிரச்சனை இல்லை. திருமணம் செய்யகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு திருமணங்கள் நடைபெறாமல் தள்ளிப் போக காரணங்கள் என்ன? எவை இங்கே தடையாக உள்ளன. வாழ்க்கையை நிர்ணயிப்பதாக கூறப்படும் ஜாதகக் கட்டங்களா? கேட்கும் தட்சணை கிடைகாததா? அல்லது கேட்கும் தட்சணையை கொடுக்க முடியாததா? சாஃப்ட்வேர் இஞ்சினியர், டாக்டர் மாப்பிள்ளை என்று எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு தேடி அலைவதாலா? நம்ம ஜாதிதான், இருந்தாலும் என்ன கோத்திரம், என்ன குலம் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து பொருத்தம் பார்ப்பதினாலா? இவை எல்லாமே காரணங்களாக இருந்தாலும் எது இங்கே பெரிது படுத்தப்படுகின்றது? உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த அனுபவங்கள், நீங்கள் எடுத்த முடிவுகள் இவற்றை பற்றியெல்லாம் இங்கே தெரிவிக்கலாம்.

வரதட்சணை பற்றி ஏற்கனவே ஒரு உரையாடல் நடைபெற்றது. வரதட்சணை கொடுக்கும் சூழ்நிலையில் இருக்கும்போது அதை எதிர்க்கும் பெண்கள், வாங்கும் நிலைக்கு வரும்போது (தங்களது மகன்களுக்காக) அதை நியாயப்படுத்தி பேசுகின்றனரே? ஒருபக்கம் இதை எதிர்க்கும் பெண்கள், மற்றொரு பக்கம் ஆண்களை அமரவைத்து சபையில் பையனுக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்கும் பெண்கள்.. நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள்? காலம் காலமாக வரதட்சணை ஒழிப்பு பற்றி பேசி வந்தாலும், சட்டங்கள் இயற்றி திட்டங்கள் போட்டாலும், இன்று வரை வரதட்சணை தொடர்கின்றதே? இது எதனால்?

ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து புதிதாய் ஒரு வாழ்க்கை தொடங்குவதற்கு மனப் பொருத்தம் என்ற முக்கியமான ஒன்று இருக்கின்றதா என்பதை பார்ப்பதைவிடுத்து, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது சரியா? ஜாதகங்கள் உண்மையா? உலகில் எல்லோரும் ஜாதகம் பார்த்துதான் திருமணம் செய்கின்றனரா? இதனால் உண்மையிலேயே நன்மைதான் விளைகின்றதா?

இவற்றைப் பற்றியெல்லாம் இங்கே விவாதிக்கலாம். வழக்கமான விதிமுறைகள் இதற்கும் உண்டு. அதற்கு உட்பட்டு உங்கள் விவாதத்தை தொடரலாம்.

திருமணம் தள்ளிப்போக பலவிதமான காரணங்கள் உள்ளன. நான் சொல்வது எல்லோருக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை.எங்கள் வீட்டில், உறவினர், நண்பர்கள் வீட்டில் நடந்த சம்பவங்களைக் கொண்டு என் அனுபவத்தை எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பெற்றோர் தங்கள் அந்தஸ்தில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். இதற்கு வரதட்சிணை பயம் தான் காரணம். என் தோழி ஒருத்தி வீட்டில் மூன்று பெண்கள், இரண்டு பையன்கள். அவள் அப்பாவுக்கு குறைந்த வருமானம் தான். மூன்று பெண்களும் வேலைக்கு போய் சம்பாதித்து தங்கள் திருமணத்திற்கு தாங்களே பணம் சேர்த்தார்கள். அதனால் அவர்கள் மூன்று பேருக்கும் முப்பது வயதுக்கு மேல் தான் திருமணம் நடந்தது.

சில வீடுகளில் பெண்ணின் திருமணத்திற்கு பணம் வேண்டும் என்பதற்காக பையனுக்கு பணக்கார பெண்ணாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் அந்த பெண், பையன் இரண்டு பேருடைய திருமணமும் தள்ளிப் போகிறது.

அடுத்ததாக ஜாதகம். என் சகோதரிக்கு ஜாதகத்தால் தான் மிகவும் தாமதமாக திருமணம் நடைபெற்றது. இந்த நட்சரத்திற்கு அண்ணன் இருக்கக்கூடாது, மாமியாருக்கு மாமனாருக்கு ஆகாத நட்சத்திரம் என்றெல்லாம் சொல்லி தட்டிக் கழிப்பதால் பல பேருக்கு திருமணம் எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. என் உறவினர் ஒருவர் ஆகாத நட்சத்திரம் என்று சொல்லபட்ட ஒரு பெண்ணை தைரியமாக மருமகளாக ஏற்றுகொண்டார். போன தலைமுறையில் நடந்த புரட்சிகரமான காதல் திருமணம் அது. "நட்சத்திரம் பேர் சொல்லி சின்னஞ்சிறுசுகளை பிரிக்கக்கூடாது. எனக்குதானே ஆகாது நான் வாழ்ந்து முடித்தவன்" என்று சொல்லி அந்த பெரியவர் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தார். அவர் மனைவி இதற்கு சம்மதித்தது தான் பெரிய அதிசயம். இப்போது அந்த பெரியவருக்கு 87 வயதாகிறது. ஆரோக்கியமாக இருக்கிறார். ஜாதகம் சொன்னது என்னாயிற்று?ஜாதகம் பார்த்து செய்து பொய்த்த எத்தனையோ திருமணங்கள் உள்ளன. எந்த பொருத்தமும் பார்க்காமல் செய்து அருமையாக அமைந்த வாழ்க்கையும் எத்தனையோ உள்ளன. அதற்காக ஜாதகம் பொய் என்று சொல்லவில்லை. நமக்கு கிடைத்திருக்கும் ஜோசிய விதிகள் கொஞ்சம் தான். அதற்கு மகாபாரததில் ஒரு கதை உண்டு. அந்த கதை உண்மையோ பொய்யோ.. ஆனால் ஜாதகம் பொய்த்து போன பல கதைகள் உண்மை.

தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதால் ஜாதிப்பித்து ஒழிக்கப்பட்டு வருகிறது. தங்கள் குலம் கோத்திரத்திலேயே வரன் வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருந்த பெற்றோரும் கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். என்றாலும் தங்கள் பிரிவிலேயே தேடிவிட்டு பிறகு தான் அடுத்த கட்டத்திற்கு போகிறார்கள். அதனால் அந்த பெண்களுக்கு பலன் தாமதித்தே கிடைக்கிறது. கொள்கையை முதலிலேயே விட்டுக்கொடுக்கலாம்.

தாமதித்த திருமணத்திற்கு பெண்களின் எதிர்பார்ப்பும் காரணம். கோயிலில் பூஜை செய்யும் பையனை திருமணம் செய்ய மறுத்து பல பிராமண பெண்கள் முதிர் கன்னியாக வாழ்கிறார்கள்.கோயில் பூஜை செய்து கிடைக்கும் வருமானத்தில் தான் அவர்கள் படித்தார்கள். அவர்களது ஜீவனமே அந்த வருமானம் தான். ஆனால் தனக்கு வரப்போகும் கணவன் மட்டும் அரசாங்க வேலை செய்ய வேண்டும். என்ன ஒரு ஓரவஞ்சனை? அதற்கு அவர்கள் கூறும் காரணம் பூஜை செய்கிறவர்கள் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். அவர்களை திருமணம் செய்துகொன்டு அம்மா படும் கஷ்டமே போதும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு ஐடி நிறுவன ஊழியரைவிட ஒரு பூஜை செய்யும் பையன் அதிகமாக சம்பாதிக்கிறான் என்பதே உண்மை.

அழகு, படிப்பு போன்றவற்றில் ஏற்படும் எதிர்பார்ப்பு அடுத்த காரணம். இது இருபாலருக்கும் பொருந்தும்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள். சில பெண்கள் பக்குவப்பட்டு தங்களை விட குறைவாகப் படித்த ஆண்களை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாலும் ஆண்களுக்கு அந்தளவுக்கு பக்குவம் இருக்கிறதா என்பது சந்தேகமே. தன்னைவிட படித்த அதிகம் சம்பாதிக்கும் பெண்ணை சந்தேகப்பட்டு சாகடிக்கும் ஆண்களால் சில பெண்கள் பயந்து அப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார்கள்.

முதல் சம்மந்தம் செய்த அதே அந்தஸ்திலேயே அடுத்தது இருந்தால் தான் (மாப்பிள்ளையோ மருமகளோ) சமமாக இருக்கும் என்ற எண்ணமும், உறவினர்களிடையே தங்கள் அந்தஸ்து குறைந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் பல திருமணங்களைத் தாமதிக்கின்றன.

காதல் தோல்வி போன்ற காரணங்களால் காயப்பட்டு அது ஆறும் வரை தள்ளிப்போகும் திருமணங்களும் உண்டு.

நாத்தனார் இருக்கக்கூடது, கூட்டுக்குடும்பம் இருக்கக்கூடாது என பெண்கள் சொல்லும் அபத்தமான காரணங்களால் தங்கள் வாழ்க்கையை சில பெண்கள் தானே சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால் அவள் மூலம் கிடைக்கும் வசதியான வாழ்க்கையும் வருமானமும் நின்று விடும் என்று கருதி சில பெற்றோர் மகள் கல்யாணத்தைதள்ளிப் போடுகிறார்கள். இது என் தோழி ஒருத்திக்கு நடந்து கொண்டிருக்கும் அவலம்.

சிலர் அவர்கள் திருமணத்திற்கு அவர்களே தடையாக இருக்கிறார்கள். தங்கள் நண்பர்கள், உறவினர் திருமண வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களை கண்டு பயந்து தனக்கும் அது போல் ஏதாவது நடந்துவிடுமோ என எண்ணி அஞ்சுகிறார்கள். அல்லது ஆண்களே இப்படித்தான் பெண்களே இப்படித்தான் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். திருமணம் தள்ளிப்போக இதுவும் ஒரு முக்கிய காரணம்.

சகோதரி அவர்கள் நிறைய காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அனைத்தும் உண்மையே. எல்லாவற்றிலும் ஆதாரப் பிரச்சனையாக இருப்பது இரண்டு விசயங்கள்தான். ஒன்று, பணம். மற்றொன்று நம்பிக்கை. சுற்றி சுற்றி இந்த இரண்டு விசயத்தில்தான் பெரும்பாலும் திருமணங்கள் சிக்கித் தவிக்கின்றன.

அறுசுவை வாக்கெடுப்பில் தற்போது உள்ள நிலவரத்தின்படி ஜாதகங்கள்தான் பெரிதும் காரணம் என்பது பலரது கருத்தாக இருக்கின்றது. என்னுடைய தனிப்பட்ட கருத்தும் அதுதான். மற்ற விசயங்கள், அதாவது வசதி, நல்லவேலை, செல்வாக்கு போன்ற எதிர்பார்ப்புகளினால் திருமணங்கள் தள்ளிபோனால் அதைக்கூட கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். எல்லோருமே வசதி வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள்தானே.. ஆனால், உண்மையா, பொய்யா என்று தெரியாத ஜாதகங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையின் முக்கிய கட்டத்தை முடிவு செய்ய முயற்சிக்கின்றார்களே.. இது என்ன கொடுமை?!

உண்மையில் ஜாதங்கள் பொருத்தங்களை நிச்சயம் செய்கின்றதா? ஜாதகம் பார்த்து செய்த திருமணங்கள் எல்லாம் வெற்றி பெற்றவையா? என்ன ஒரு நம்பிக்கை இது? இந்த நம்பிக்கையினால் அதிகம் விளைவது நன்மையா தீமையா? உங்களில் எத்தனை பேர் இதை நம்பவில்லை? இந்த நம்பிக்கை இல்லாவிடின் நிறைய திருமணங்கள் காலத்தில் நடக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

உண்மையான பதில் தாருங்கள் :-)

எனக்கும் இதில் பங்குபற்ற விருப்பமாக இருக்கிறது ஆனால் சகோதரர் பாபு ஏதோ.. விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பதில் தரும்படி கேட்டிருப்பது கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஏதேனும் விஷேசமான விதிமுறைகள் உள்ளனவா? அல்லது மற்றவர் மனம் புண்படாமல் எதையும் எழுதவேண்டும் என்பதா? தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதே தான் அதிரா... உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இளவீரா இனி எழுதப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஜாதகம் என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் தான். ஏனெனில் ஜாதகம் என்பது வெறும் கணிப்பு தான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் இதுதான் நடக்கும் என்பதற்கு எந்த விதியும் இல்லை. ஜோசியம் சொல்பவர்கள் இதற்கு முன் நடந்த விஷயங்களை அடிப்படையாகக் கொண்டே சொல்கிறார்கள். நாம் பின்பற்றும் ஜோசிய விதிகள் முழுமையானவையல்ல. எனவே பலன்கள் பொய்ப்பது ஆச்சரியமே இல்லை.

என் பெற்றோருக்கு ஜாதக பொருத்தம் பார்க்கவில்லை. கடவுளிடம் சென்று பூ போட்டு பார்த்தார்களாம். அந்த காலத்தில் இதைக் கூட செய்யாமல் இருக்க அவர்களுக்கு தைரியமில்லை. என்றாலும் அவர்களை பாராட்டத்தான் வேண்டும். அவர்கள் வாழ்க்கை மிகவும் அழகாக அருமையாகத் தான் உள்ளது. என் சகோதரிக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கவேயில்லை. அவருக்கு பூ கூட போட்டு பார்க்கவில்லை. கடவுளை மட்டுமே நம்பி நடந்த திருமணம் அது. அவளும் ஓரளவு நிம்மதியாகத்தான் இருக்கிறாள். அவள் புகுந்த வீட்டு மனிதர்களின் குணங்களால் சில பிரச்சினைகள். நிச்சயமாக இதற்கு ஜாதகத்தை காரணம் சொல்ல முடியாது. அவளது ஜாதகப்படி அவளுக்கு திருமணமே ஆகாது என்று சொன்னார்கள். ஆனால் அந்த பலன் எங்கே போனது?

ஆனால் என் விஷயத்தில் எல்லாம் தலைகீழ். எனக்கு ஜாதகம் கணிக்கும்போது யாரோ முன்பின் தெரியாதவர் எனக்கு ஜாதகம் எழுதக்கூடாது என்று நான் கண்டிப்பாக கூறியதால் என் சகோதரர் தான் எழுதினார். எனக்கு ஒரு வரன் அமைவதைப் போலிருந்தது. எல்லோரும் அது செட்டில் ஆகிவிடும் என்றே நம்பினார்கள். ஆனால் என் சகோதரர் அந்த இடம் அமையாது என்றும் இன்னும் இரண்டு வருடம் கழித்துதான் எனக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறினார். அது அப்படியே நடந்தது. சில வருடங்கள் கழித்து என் கணவரின் ஜாதகம் வந்தது. என் அண்ணா பொருத்தம் பார்த்து நன்றாயிருக்கிறது அமையும் என்று கூறினார். என் மாமியார் பார்த்த ஜோசியரோ இந்த கல்யாணம் நடக்க வாய்ப்பு மிகவும் குறைவு வேறு பெண் பாருங்கள் என்று கூறினாராம். அதற்கு அவர் சொன்ன காரணங்களை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் என் மாமனார் அதை நம்பாமல் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது அவர்களுக்கே செய்யலாம் என்று தோணி எங்கள் திருமணம் நடந்தது. என் விஷயத்தில் இன்று வரை என் அண்ணா என் ஜாதகத்தைப் பார்த்து சொன்ன விஷயங்கள் ஒன்று கூட பொய்க்காமல் பலித்துக்கொண்டே வருகின்றன. எனக்கு ஜோசியத்தின் மேது துளியும் நம்பிக்கையே இல்லை. கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. ஜாதகம் என்பது கோள்களின் ஆட்சி. ஆனால் அந்த கோள்களையே கட்டுப்படுத்தக் கூடியவர் தான் கடவுள். எனவே வீணாக கவலலைப்பட்டு நேரத்தை வீணாக்காமல் பிரார்த்தனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சகோதரி அதிரா, நீங்கள் யூகித்த விதிகள்தான். கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால் தனிநபர், மதம், இனம் சம்பந்தமான தாக்குதல் கூடாது. பொதுவாக கருத்துக்கள் கூறவேண்டும்.

சகோதரி அன்னு,

உங்கள் சகோதரரின் முகவரி கிடைக்குமா? இங்கே நிறையப் பேர் கேட்கின்றார்கள் :-)

என் சகோதரர் முகவரியை யார் கேட்கிறார்கள்? எதற்காகக் கேட்கிறார்கள்?

ஆகா அன்னு அவரையா யாருன்னு கேட்டீங்க அவர் தான் இந்த அருசுவையின் தலைவர் //பாபு தம்பி//

Jaleela

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்