அரிசி பருப்பு சாதம் (குழந்தைகளுக்கு)

தேதி: April 3, 2008

பரிமாறும் அளவு: ஒரு குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்த சாதம் - ஒரு குழிக்கரண்டி
வெந்த துவரம் பருப்பு - கால் கப்
தாளிக்க:
நெய் (அ) பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - ஒரு பல்
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது பொடியாக அரிந்து கொள்ளவும்


 

குழந்தைகளுக்கு என்று தனியாக தயாரிக்க முடியவில்லை என்றால் சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதிலிருந்து கால் கப் எடுத்து கொள்ள வேண்டும்.
முதலில் பாதி நெய் விட்டு, அதில் காய்ந்த மிளகாய், கடுகு, பூண்டு பொடியாக நறுக்கி போட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து முதலில் பருப்பை போட்டு கிளறி விட்டு சாதத்தை போட்டு நல்ல மசித்து மசித்து கிளறவும்.
கடைசியில் மீதி நெய்யையும் ஊற்றி கிளறவும். கிளறி முடித்ததும் காய்ந்த மிளகாயை எடுத்து விட வேண்டும். இல்லை என்றால் அதில் காரமாகி விடும்.


இது ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை கொடுக்கலாம், பிறகு பல் முளைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வெங்காயம், தக்காளி எல்லாம் சேர்த்து கொடுக்கலாம். இது என் பெரிய பையனுக்கு இப்படி தான் கொடுத்தேன். குழந்தைகளும் விரும்பி சப்பு கொட்டி கொண்டு சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்களுடைய அரிசி பருப்பு சாதம் செய்து அதிரா சொன்னது போல் பாத்திரத்தில் தண்ணீரும்,குட்டி பாத்திரங்களும் வைத்து ஊட்டினேன்...என்ன ஒரு ஆச்ச்ரியம் ஜலீலாக்கா சொன்னது போல் அவளுக்கு இது மிகவும் பிடித்துப் போனது.எடுத்த சாதம் முழுவதையும் சாப்பிட்டாள்..எனக்கு அளவில்லா மகிழ்ச்சி நேற்றே சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை...குழந்தைகள் என்ன பெரியவர்களுக்கே பிடிக்கும்.
கட்டாயம் எல்லோரும் உங்கள் குழந்தைக்கு செய்து கொடுத்து பாருங்கள்

தளிக்கா அஸ்ஸ்லாமு அலைக்கும்
மிக்க நன்றி அரிசி பருப்பு சாதம் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பி எல்லோரையும் செய்து பார்க்க சொன்னதற்கு.

இது சாப்பாடு கட்டி கொன்டு போக நல்ல இருகும்.
ஜலீலா

Jaleelakamal

இது குழந்தைகளுக்கு நல்லதொரு குறிப்புத்தான். மைசூர் பருப்பை விட பிள்ளைகளுக்கு துவரம் பருப்புதான் நல்லது. இதில் சத்தும் அதிகம் அதேவேளை பூச்சிகளையும் கொல்லும் என்கிறார்கள்.

தளிகா... நெடுகவும் எமது ரேஸ்ட்டில் சமைத்துக் கொடுப்பதைவிட இடையிடை இப்படி வேறு ஆட்களின் குறிப்பின்படி செய்து கொடுத்தால் யாருக்குமே பிடிக்கும். ஆனால் நன்றாக சாப்பிட்டா என்று, அடுத்து ஒரே விதமாக கொடுத்தாலும் வெறுத்துவிடும். தீத்துகிறபோது அவர்கள் மெய்மறக்ககூடிய விளையாட்டுக்களைக் கொடுத்தால் சாப்பிடுவது தெரியாமல் சாப்பிடுவார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா..ஆமாம் நீங்க சொன்னது ரொம்ப சரி அதுக்கு ஏத்தது போல் என் பிள்ளைக்கு இன்று கொடுத்தது நாளை ஃப்ரிட்ஜில் வைத்து கொடுத்தால் பிடிக்காது.சுட சுட புது சாதம் குழம்பு தான் வேண்டும் என்பாள்.
நேற்று காலை அவளுக்கு கார்ன் ஃப்லேக்ஸ்,மதியம் பருப்பு,இரவு ரவை
இன்று காலை ப்ரேன் ஃப்லேக்ஸ்,மதியம் தக்காளி சாதம் இரவு இறால் செய்து கொடுக்கலாமா என்று யோசிக்கிறேன்.
உங்களுடைய நர்சரி பற்றிய பதிவிற்கு பல(ரொம்ப பல)முறை முயற்சித்தும் பதில் போட முடியாமல் நொந்துவிட்டேன்..எனக்கு அழுகை வந்தது.
இப்பொழுதும் யோசனையில் இருக்கிறேன்..இங்கே கேட்டுப் பார்த்தேன் ரொம்ப ஃபீஸ் கேட்கிரார்களே??
ரொம்ப பிள்ளை குரும்பு செய்தால் அடித்து விட மாட்டார்களா?இவள் வேறு யாராவது திட்டினால் அடிக்க கைய்யை ஓங்குவாள்..அது போல் செய்தால் அடித்து விடுவார்களா?
மைசூர் பருப்பை விட நல்லது துவரம் பருப்பா நல்ல வேளை சொன்னீங்க..நேற்று மைசூர் பருப்பில் தான் செய்தேன்...இனி துவரம் பருப்பில் செய்கிறேன்

ஹாய் ஜலிலா மேடம்

இன்று நான் உங்களுடைய அரிசி பருப்பு சாதம் செய்து என் குழந்தைக்கு கொடுத்தேன். எப்போதும் அவள் நான்கு அல்லது ஐந்து வாய் தான் சாப்பிடுவாள். இன்று அவள் வ்ழக்கதிற்கமாக சாப்பிட்டாள். I had 8 month girl baby. i don't know what type of foods to give to her. If you know, pls advice me.

லீலா நந்தகுமார்

Leela Nandakumar

Leela Nandakumar

அரிசி பருப்பு சாதம் டியர் லீலா உங்கள் குழந்தை விரும்பி சாப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

உங்கள் பதிலுக்கும் நன்றி.
ஜலீலா

Jaleelakamal

அரிசி பருப்பு சாதம் தவிர வேற ஏதாவது சாதம் (குழந்தைக்கு)உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.

மிக்க நன்றி.

லீலா நந்தகுமார்.

Leela Nandakumar

லீலா
கிச்சிடி (குழந்தைகளுக்கு என்று இருக்கும் பாருஙக்ள் என் குறிப்பில் நிறைய இருக்கு இல்லை பிறகு தேடி தருகிறேன்.
ஜலீலா

Jaleelakamal