வறண்ட சருமம்

குழந்தைக்கு வறண்ட சருமம் இருந்தால் என்ன உபயோகிக்கலாம்? என் குழந்தைக்கு ஜான்சன்&ஜான்சன் brand தான் உபயோகிக்கிறேன். இருந்தாலும் அவ்வப்போது பார்த்தால் தோல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. கடலை மாவு உபயோகிக்கலாமா?

னோ நோ கடலை மாவு வறண்ட சருமத்தில் போட்டால் இன்னும் வரண்டு ரேஷெஸ் வரும்.
ஹிமாலயாஸ் லோஷன் தேய்த்து விடுங்கள்...சோப் போடாதீர்கள்..பாத் வாஷ் இருந்தால் அதை போடுங்கள்..முடிந்தவரை சோப்பை குறைத்து வெறும் தண்ணீரில் அலசுங்கள்.எண்ணை தேய்த்து குளிக்க வைய்யுங்கள்....தண்ணீர் நிறைய குடிக்க செய்யுங்கள்

தாளிகா அக்கா உங்கள் குறிப்புக்கு மிகவும் நன்றி. குழந்தைக்கு baby oil தேய்த்து குளித்து விடலாமா? அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து குளித்து விடலாமா? ஜான்சன்&ஜான்சன் தான் நன்றாக இருக்கிறது என்று சிலரும், அவினோ தான் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனக்கு குழப்பமாக இருக்கிற்து எதை உபயோகிக்கிறது தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். குழந்தைக்கு மூன்று மாதங்களாகிறது.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

குழந்தைக்கு நலுங்கு மாவு தேய்த்து குளித்து விடலாமா? நலுங்கு மாவில் என்னென்ன பொருள்கள் கலந்துள்ளார்கள்?

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

மேலும் சில பதிவுகள்