Heavy Periods

என்னகு Bleeding Heavy இருக்கு, Dr. Appt monday than iruku. enna உணவு sapdianum? so that bleeding controls? Please advice me.

ஜெய்ஸ்ரீ எப்படி இருக்கீங்க? இப்ப உடம்பு பரவாயில்லையா? எனக்கு bleeding control பண்ண என்ன உணவு சாப்பிடலாம்னு தெரியவில்லை. ஆனால் இந்த சமயத்தில் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். நீங்க vegeterian என்பதால் iron சத்துள்ள உணவுகளான ஸ்பினாச், பீன்ஸ், பீஸ், டேட்ஸ்,nuts போன்றவற்றை சாப்பிடுங்க. அப்படி சாப்பிடும்போது கூட ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டா ரொம்ப நல்லது.(orange juice helps to absorb the iron) கோக், சோடா போன்றவற்றை அறவே தவிர்க்கனும். உடம்ப பாத்துக்கோங்க.

Thanks vinnie for u r info.

hi,
eat chutney kadalai lot,and dont drink coffee or tea when its hot.

ஜெயஸ்ரீ
3 பாயில்ட் முட்டை அதை நாலா கட் பன்னி அதில் உப்பு, மிளகு தூள் தூவி காலை வெரும் வயிற்றி சாப்பிட்டு கருங்காப்பி குடித்து விட்டு நீட்டி படுத்து ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுங்கள்.

3 பாயில்ட் முட்டை

தேன் ஒரு குழி கரண்டி அளவு குடிங்கள்.

கிரேப் ஜூஸ் குடிங்க

ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள ஜெய்ஸ்ரீ! எனக்கு தெரிந்த சில வைத்திய முறைகள் நல்ல பலன் கொடுக்கும். ஆனால், அதற்கு தேவையான பொருட்கள் உங்களுக்கு அங்கு USA வில் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். முடிந்தால் ட்ரை பண்ணி பாருங்கள்.

- நன்கு முற்றிய வாழைக்காயை எடுத்து அடுப்பில் காட்டி கருகும் அளவுக்கு சுட்டு, தோலை நீக்கிவிடவும். அதன் மீதமுள்ள சதைப்பகுதியை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, தயிரில் கலக்கி காலை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் ஓரிரு நாட்களில் அதிகப்போக்கு கட்டுப்படும்.

அல்லது,

- ஐந்து இதழ்கள் உடைய செம்பருத்தி பூவின் உள்ளே உள்ள தண்டை நீக்கிவிட்டு இதழ்களை மட்டும், காலை பல் துலக்கியவுடன் 3 அல்லது 4 பூக்களை மென்று சாப்பிட்டுவிட்டு சிறிது தண்ணீர் குடிக்கவேண்டும். அதிலிருந்து 1 மணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடக்கூடாது. உங்கள் பிரச்சனை கட்டுப்படும்வரை இதுபோல் செய்து வரவும்.

உங்களுக்கு ஹோமியோ மருந்துகள் கிடைக்கும் வாய்ப்பு இருந்தால், Cimicifuga 200 என்ற மாத்திரைகளில் 2 எடுத்து, 50 மில்லி தண்ணீருடன் ஒரு பாட்டில் போட்டு, மாத்திரை கரையும் வரை நன்கு குலுக்கி, நான்கு மணிக்கொருமுறை சாப்பிட பலன் தெரியும்.மற்றவை நினைவு வந்தால் சொல்கிறேன்.

USA வில் கிடைக்காது.

அக்கா நன்றி என்னால பதிவு போடமுடியல, நீங்க சொன்ன அட்வைஸ் படி சில விசயங்களை செஞ்சு பார்த்தேன் ஒருஅளவுக்கு பலன் இருந்துச்சு.
நான் anemic இருக்கேன் அதனால் iron tablets சாப்பிடறேன், இதற்கு இயற்கை வைதீஇம் இருக்கா? நான் எர்கனவி anemic theardil ketuirken, வேற எதவுது இருக்கா?

அன்புள்ள ஜெய்ஸ்ரீ! அனிமிக் பற்றி நீங்கள் யாரிடம் கேட்டீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நான் சொல்கிறேன்.

- பழ வகைகள், கீரை வகைகள், அசைவம் சாப்பிடுபவராக இருந்தால் கோழி ஈரல் போன்றவை சாப்பிடுங்கள்.(பழங்களில் ரெட் கலர் பழங்களில் ‘லைக்கோடின்’ என்ற ஒரு சத்து நிறைந்துள்ளதால், அதுபோன்ற பழங்களை அதிகம் சாப்பிடும்படி டாக்டர்கள் கூறுவார்கள்.)

உங்களுக்கு இருக்கும் ஓவர் ப்லீடிங்தான் உங்களின் அனிமிக் ப்ராப்ளத்திற்கு காரணமாக இருந்திருக்கும். அதனால் இரும்புச் சத்துகள், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளாக அதிகம் சாப்பிடவும்.

- கீரை வகைகள் என்றால், முருங்கைக் கீரை, அரைக்கீரை, முளைக்கீரை, கொத்தமல்லி, குப்பைமேனிக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக்கீரை போன்ற கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், எது உங்களுக்கு கிடைக்குமோ அதை வாங்கி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

- காரட், ஆப்பிள், அத்திப்பழம் நிறைய சாப்பிடுங்கள்.

- வெள்ளை பூசணியை கூட்டு செய்தோ,சாம்பாரிலோ எப்படியாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

- இளநீர் கிடைத்தாலும் தொடர்ந்து சாப்பிடுங்கள்.

- ஒரு கைப்பிடி கிஸ்மிஸ், 2 பேரீத்தம்பழம், 2 முந்திரிப்பருப்பு இம்மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு, அந்த தண்ணீரையும் குடிக்கவும்.

- 4 பாதாம் பருப்பை தனியே 1/2 டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு, அதேபோல் உணவுக்கு முன் சாப்பிட்டு வாருங்கள்.

இவையனைத்தும் நான் செய்து பலன் கண்டவை. நீங்களும் செய்து பாருங்கள். ஓ.கே.வா?

நன்றி Asma அக்கா, நீங்க சொன்னபடி செஞ்சுபர்கேறேன். 10 days களிசு பலன் பற்றி சொல்லறேன்?

Ragi Kulu செய்வது எப்படி?

அன்புள்ள ஜெய்ஸ்ரீ! நல்லது, பலன் தெரிந்ததா என்பதை பிறகு சொல்லுங்கள். கேழ்வரகு கூழ் பற்றி 3 லிங்க்ஸ் கொடுத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான முறையில் செய்து பாருங்கள்.

(1) http://www.arusuvai.com/tamil/node/2156

(2) http://www.arusuvai.com/tamil/node/2711

(3) http://www.arusuvai.com/tamil/node/2188

மேலும் சில பதிவுகள்