தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிய தமிழ் புத்தாண்டில் அறுசுவை மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம். அறுசுவை மேலும் மேலும் வளர வாழ்த்தும்

சரவணகுமார், மணிமேகலை, செல்வ இலக்கியா,

நான் எழுதி இருக்கும் தைத்திங்கள் கருத்துகள் உங்களுக்கு சரியாக இருக்கிறதா மனோகரி? ஓரளவுதான் விரிவாக எழுதி இருக்கிறேன். உங்கள் எண்ணங்களை. எழுதுங்கள். பிறகு விரிவாக பேசலாம். சுகர் கொஞ்சம் அதிகமாகி விட்டதால் கன்டினியூஸாக கம்பியூட்டரில் உட்கார்ந்தால் சோர்வாகி விடுகிறது. என்ன ரொம்ப பிஸியாக இருக்கீங்களா? அத்திபூத்தாற்போலத்தான் வருகிறீர்கள். பிறகு பேசலாமா?

தளிகா!...மெயில் கிடைத்தது. யூனிகோட் யூஸ் பண்ணி ஃபான்ட் ஃபாலோ பண்ணுவதற்குள்..........அதற்கு பதிலாக நீங்கள் பேசாமல் நம்ம அட்மின் சொன்ன 'விடுகதை' மாதிரி இரண்டு விடுகதை சொல்லி இருந்தால் விடைகூட கண்டுபிடித்திருப்பேன். எனக்கு எப்படி யூஸ் பண்ணி படிப்பது என்று தெரியலையே தளிகா!...... வேலையெல்லாம் முடித்துவிட்டு பொருமையாக படித்து பார்க்கனும்.

குறிஞ்சிப்பூ அல்ல மனோரஞ்ஜிதம் அது அம்மாவிற்கு மிகவும் பிடித்த மலரும்கூட, பிறகு எப்படி மனோகரி ஆனாய் என்று நினைக்கின்றீர்களா அது அம்மாவின் தோழி ருக்மணி ஆன்ட்டி செய்த மாற்றம். ஆமாம் மாலதி ரொம்ப பிஸியாகிவிட்டேன் ஆகவே மன்றத்தில்கூட இனி என்னை பார்க்கமுடியாது நேரம் கிடைத்தால் யாரும் சமைக்கலாமில் மட்டும் வருவேன் எனது எல்லாக் குறிப்பையும் படங்களாக கொடுக்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தேன். உங்களுக்கு சுகர் இருப்பதாக கூறியுள்ளீர்கள் உடம்பை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அதைக் கொண்டே சுகரைக் கட்டுக்குள் வைக்கலாம். அறுக்கம்புல் ஜூஸை தினமும் குடிக்கலாம் நல்ல பலன் கிட்டும். என்னை மறக்கமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன் ஞாபகம் வந்தால் என்னைநோக்கி ஒரு பதிவு போடுங்கள் நீச்சயம் பதிலளிக்கின்றேன் நன்றி.

மனோகரி!.. உங்களை மறக்க முடியாது. என்ன? வேலையில் ஏதாவது ஜாயின்ட் பண்ணி இருக்கிறீர்களா? அல்லது மன்றத்திற்கு வர ப்ரியமில்லையா? மன்றத்தில் கான்ட்ரவர்ஷியலாக பேச வேண்டிவருமோ என்று தயங்குகிறீர்களா? அந்த மாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம் மனோகரி. சரி பரவாயில்லை. ரெசிப்பீஸ் மூலம் உங்களை சந்தித்துக்கொள்கிறோம். நிறைய விஷயங்களில் உங்கள் கருத்துக்கள் என்னுடன் ஒத்து போகிறது. இப்ப இந்த தமிழ் புத்தாண்டு விஷயத்தில் கூட......

அன்பு தோழி மனோகரி,
நலமா? நாங்க நலமே.
நேற்றே உங்கள் பதிவுக்கு பதில் போட்டேன். இப்ப அதை பார்த்தா காணவில்லை. என்ன ஆச்சுன்னு புரியலை.
எங்க வீட்டு செல்லம் பையன் தான். இப்ப 50 நாட்கள் ஆகிறது. வீட்டுக்கு வரும் போது 40 நாள். வெட்னரி கிளீனிக் பக்கமாத்தான் இருக்கு, ஒன்றும் பிரச்னை இல்லை. லசாப்சோ & டெரியர் கிராஸ் பிரீட். வந்ததும் டிவார்மிங் பண்ணிட்டோம். இந்த வாரத்தில் வேக்ஸிங் போடணும். வந்தவுடன் இடம் ஒத்துக்காம டயரியா, ஃபீவர், மூணு ஊசி போட்டோம். இப்ப நல்லா இருக்கான். வெளியில் இருந்து வந்ததும் அவனை கொஞ்சிட்டு தான் வேறே வேலை பார்க்கணும்.

அதல்லாம இன்னும் இரண்டு செல்லங்களும் இருக்கு. லவ்பேர்ட்ஸ்:-)அதுல பெண் குட்டி என் மடியிலும், தோளிலுமே வளர்ந்தது. அது இப்ப மூணு முட்டை வச்சிருக்கு. அது முதல் முட்டை வச்சதும் என்னை கூப்பிட்டு காண்பிச்சது. ரெண்டோ. மூணோ அறிவுள்ள பறவைகளுக்கு இவ்வளவு பாசமான்னு நினனச்சா ஆச்சரியமா இருக்கு. முடியும் போது போட்டோ போடறேன். பிறகு பேசுவோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

hai,wish u a very haapy and prsperous tamil new year i dont know where to introduce myself. this is kothai.i saw this site from morning itself only. what a site is this? all the informations and the topics discussed are very interesting and useful. i want to bea part of it.i read the site from morning. i couldnt disconnect myself from this site. hereafter i am going share my opinion with u all. all are very experienced members. i like the way of answering the questions. anyone of u pls help me to type in tamil.

தளிகா! நீங்க அனுப்பிய மெய்லை படிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது செய்யுங்கள். பிக்னிக் எப்படி இருந்தது?

தமிழ் கடவுள் வள்ளுவர் பிறந்த மாதமான தை திங்களின் முதல் நாளான தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துக்களை உங்கள் எல்லோருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்...!!

அறுசுவையின் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஆஹா.. புத்தாண்டு கொண்டாடும் இன்னுமொரு சகோதரி.. :-) வாழ்த்துக்கள்.

இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால், சட்டம் இயற்றியவர்கள் தொலைக்காட்சிகளில் இருந்து அனைத்து தொலைக்காட்சிகளும் பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகளைத்தான் வழங்கிக்கொண்டிருக்கின்றன. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், பிரதமர் கலந்துகொள்ளும் விழாவில் மேடையில் இருக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ வுக்கு கொடுக்கப்படும் மரியாதைதான் இப்போது தமிழ்புத்தாண்டிற்கு. பெயர்மட்டும் நினைவு கூறப்படும். அது ஒரு தனி நாளாக இருந்தபோது அதற்கென ஒரு தனிக்கொண்டாட்டம் இருந்தது. படையல் இருந்தது. இப்போது பொங்கலுக்காக எல்லாம் செய்துவிட்டு, "பொங்கலோ பொங்கல்" கூவும்போது கூடவே கொசுறாக "புத்தாண்டோ புத்தாண்டு.." எனக் கூவிக்கொள்ளலாம்.

இந்த நிலை மாற அரசுக்கு ஒரு யோசனை. பொங்கலை தை இரண்டாம் தேதிக்கும், மாட்டுப்பொங்கலை மூன்றாம் தேதிக்கு நகர்த்தி வைத்து, வரிசையாக மூன்று நாட்கள் விடுப்பு கொடுத்தால் மக்கள் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடுவார்கள். இல்லையென்றால், மனிதர்களும் அவர்களுக்காக உழைக்கும் மாடுகளும் இணையானதுதான் என்று பொங்கல், மாட்டுப்பொங்கல் இரண்டையும் ஒரே நாளில் கொண்டாடினால், மாடுகளும் மனம் மகிழும். உழவர்கள் இல்லங்களில் பாலும் தேனும் ஆறாய் பெருகி ஓடும்..

"தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு" என்று குறள் பாடிய தமிழ் கடவுள் வள்ளுவரும் உச்சி குளிர்ந்து போவார்.

மேலும் சில பதிவுகள்