அறுசுவையின் அட்டன்டன்ஸ்- 2

அட்டன்டன்ஸ் பகுதி-2

அன்புள்ள அறுசுவை குடும்பமே/நேயர்களே,நாம் எல்லோருமே விடுமுறைக்கோ,அல்லது மற்ற காரணங்களுக்காக ஒரு சில நாட்களிலிருந்து ஒரு சில மாதங்கள் வரையில் கூட அறுசுவைக்கு லீவ் போட்டு விடுகின்றோம். அதில் ஒரு வருத்தம் என்னவென்றால் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் (என்னையும் சேர்த்து தான்) யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போய்விட்டு திடீர் என்று ஆஜராவது. எனக்கும் அவ்வாறு நேரிட்ட போது உதித்தது தான் இந்த தலைப்பு அதை இப்பொழுது தான் எழுத சந்தர்ப்பம் கிடைத்தது. இனி அறுசுவைக்கு லீவ் போடுகின்றவர்களும், திரும்பி வந்தவர்களும் இங்கு அட்டன்டன்ஸ் கொடுத்து விட்டால் இதனால் இனிமேலாவது யாரையும் காணவில்லை என்ற நிலை அறுசுவையில் இருக்காது என்பது என் கருத்து. ஒரே குடும்பமாக கருதும் நேயர்களுக்குள் இதுப் போன்ற இணைப்பு இருப்பதில் தவறொன்றுமில்லயே? இதில் நேயர்களின் கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி.

ஹலோ அஸ்மா எப்படி இருக்க? அட்டன்டன்ஸில் உனது பதிவைப் பார்த்தேன்.மீண்டும் அறுசுவையில் உன்னை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது, உடல் நலம் நன்கு தேறிவிட்டதா?ஆனால் உன்னை வரவேற்கத்தான் என்னால் முடியாமல் போய்விட்டதில் எனக்கு மிகுந்த வருத்தம்.வேலைப் பளுவும் அதிகமாக சூழ்ந்து இருந்தது. இன்னும் ஒருசில வாரங்கள் அவை நீடிக்கும் என்று நினைக்கின்றேன் அதன் பிறகு பழையபடி உங்களுடன் வந்து கலந்துக்கொள்கின்றேன் ஒகேவா நன்றி.

மை டியர் மனோகரி..! 'அஸ்மாவிற்கு கடிதம்'னு பார்த்தவுடனே இது நம்ம மனோகரியாகத்தான் இருக்கும் என்று ஆவலோடு உள்ளே நுழைந்தேன். என் ஆவல் வீண் போகவில்லை :-) ரொம்ப சந்தோஷமாக உள்ளது மனோகரி...! இறைவன் உதவியாலும் உன்னுடைய மற்றும் நம் தோழிகள் அனைவரின் பிரார்த்தனையாலும் இப்போது நான் நல்லவிதமாகவே இருக்கிறேன். நீ நல்லா இருக்கியாப்பா? பிள்ளைகள் மற்றும் உன் டைகர் செல்லம் நலமா? நாளைக்கு எப்படியும் ஒரு பதிவு போட்டு உன்னை தேடிவிடணும் என்றிருந்தேன். 'கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி'ன்னு தமிழில் ஒரு பழமொழி சொல்ற மாதிரி, நீயே வந்துட்டபா! :-) இனி அறுசுவைக்கு ஒரு கலகலப்புதான்..! செல்விக்காவிடம் கூட மெயில் பண்ணும்போது உன்னைப் பற்றி கேட்டேன். அவங்களை அறுசுவையில தவிர வேற எங்கேயும் பிடிக்கமுடியாதுன்னு சொன்னாங்க. ஓ.கே.மனோகரி, நாளை கொஞ்சம் வெளிவேலைகள். வந்தவுடன் பேசுகிறேன். உன் பதிவிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

ஹலோ அஸ்மா டியர் ரொம்ப சந்தோசம் உனது பூரண சுகத்திற்க்கு உனது குடும்பத்திற்க்குதான் நாங்களும் நீயும் நன்றி கூறவேண்டும்.அவங்க கொடுத்த ஒத்துழைப்பால் தான் உன்னால் இந்த அளவிற்கு சுகமடையமுடிந்தது என்றுதான் கூறுவேன். இங்கு நானும் எனது அன்புச் செல்லம் உட்பட அனைவரும் நல்ல சுகம். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தாலும், அதற்கு கூடஆடத் தான் முடியவில்லை நேர நெருக்கடி அப்படி.நேயர்களுக்கு பதில் போட நிறைய பதிவுகள் இருக்கின்றது ஒரு நாளைக்கு அனைத்து பதிவுகளுக்கும் பதில் எழுத வேண்டும். பார்த்தாயா புதியவர்கள் அறுசுவையை என்னமா கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்று. உனது சாமர்த்தியத்தை கூட விடுகதை திரட்டில் பார்த்தேன், கணக்கில் கூட நீ கெட்டிக்காரி தான் பாராட்டுக்கள். செல்வி கூறியது சரிதான் நான் தனிப்பட்ட முறையில் யாருடனும் நான் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை எல்லாத் தொடர்பும் அறுசுவையில் மட்டும் தான். ஏனெனில் எந்த விசயத்தைப் பற்றியும் வெளிப்படையாக பேசுவது எனது வாடிக்கை (என் அப்பாவைப்போல்)மற்றபடி வேறு காரணம் எதுவுமில்லை, இதுப் போலவே நாம் எப்போதும் போசுவோம் இப்போதைக்கு ஜூட்

டியர் ப்ரண்ட்ஸ்,
முன்பு போல அறுசுவைக்கு வர முடியவில்லை... காரணம் லேப்டாப் மக்கர் பண்ணுது... இன்னொன்ரு 2 நாட்களாக குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை...
கண்டிப்பாக ஆக்டிவாக அறுசுவையில் செயல்பட நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன்...
நன்றி

எல்லாரும் நல்லா இருக்கீங்களா. 10 நாளா பிசி ஒர்க் ஆகலை அதனால அறுசுவை பக்கமே வரமுடியலை இன்றுதான் உங்கள் எல்லோருடனும் பேச முடிகிறது.

அன்புடன் கதீஜா.

ஹாய் ஹாய் ஹாய், எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாட்களுக்கு பிறகு இப்பதான் அறுசுவை பக்கம் வரேன் அதிக வேலையின் காரணாமாக வர முடியவில்லை. என்ன கதீஜா மேடம் நீங்களும் இப்பதான் வரீங்களா? இன்சாப் எப்படி இருக்கான்?

எல்லோரும் எப்படி இருக்கீங்க?என்னை ஞாபகம் இருக்கா? சில காரணங்களால் அருசுவையில் கலந்துகொள்ளமுடியவில்லை.ஆனாலும் அருசுவையை படித்து விடுவேன். வேறு எங்கும் நுழைய முடியவில்லை, அதனால் இங்கேயெ எல்லொருக்கும் ஹாய் சொல்லிவிட்கிறேன். ஜலீலாக்கா என்னை தெரிந்த சில பேருள் நீங்களும் ஒருத்தர், நீங்கள் தொடர்ந்து அருசுவைக்கு வரவும்.

மை டியர் மனோகரி! நல்ல சுகமா? பிள்ளைகள் மற்றும் டைகர் நலமா? ஏம்ப்பா மன்றத்திற்கே வருவதில்லை :( ....? பிஸியா அல்லது ஏதும் மன உளைச்சலா? நான் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாத காலத்திற்குதான் அறுசுவைக்கு வர இயலும். ஜூன் மாதம் இந்தியா செல்கிறோம், புதுமனை புகுவிழா பண்ண! சுமார் 4 மாதங்கள் இந்தியாவில் டேரா :) இந்த வருஷம் இந்தியா வர உனக்கு ஏதும் ப்ளான் உள்ளதா? அப்படியிருந்தால் கண்டிப்பாக எனக்கு தெரிவிக்கவும். உன் பதிலை மன்றத்தில் எதிர்ப்பார்க்கிறேன், ப்ளீஸ்!

டியர் அஸ்மா உனது பதிவு மகிழ்ச்சியைத் தந்தது நன்றி.புதுமனைப் புகு விழா உங்களுடையதா உங்க உறவினருடையதா? எதுவானாலும் விழா சிறப்பாக நடைப் பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் . ஜாலியாக ஊருக்கு போய் வாருங்கள், நான் வரும் பிளான் தற்போதைக்கு இல்லை,போகும் போது நிச்சயம் தெரியப்படுத்துவேன். உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள் சரியா.

அன்பின் மனோகரி! உன்னுடைய உடனடி பதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. :) புதுமனை புகுவிழா எங்களுடையதுதான்! உன் அன்பான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். சென்றமுறை (2007 - ல்) இந்தியா சென்றபோது அஸ்திவாரம் போட்டு வந்தோம். இன்னும் வேலைகள் கொஞ்சம் உள்ளது, நாங்கள் போனபிறகு முடிப்பதற்காக. உடம்பை கவனித்துக்கொள்கிறேன். ஒரு குழந்தையின் மீது காட்டும் ஆர்வம் கொண்ட தோழிபா நீ... :-) இந்தியா புறப்பட உள்ள இந்த ஒரு மாத இடைவெளியில் நாம் பேசினால்தான். இல்லாவிட்டால் மீண்டும் நாம் பேச சில மாதங்கள் ஆகும். அதனால் அடிக்கடி அறுசுவைக்கு வர முயற்சி செய்பா! மற்றவை மீண்டும் பேசுவோம்.

மேலும் சில பதிவுகள்