குழந்தைக்கு

குழந்தைக்கு baby oil தேய்த்து குளித்து விடலாமா? அல்லது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், olive oil தேய்த்து குளித்து விடலாமா? ஜான்சன்&ஜான்சன் தான் நன்றாக இருக்கிறது என்று சிலரும், அவினோ தான் நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனக்கு குழப்பமாக இருக்கிற்து எதை உபயோகிக்கிறது தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். குழந்தைக்கு மூன்று மாதங்களாகிறது

சுத்தமான தேங்காய் எண்ணையில் தான் எண்ணை குளிக்க வைத்ததாக அம்மா சொல்வாங்க..
என் தோழி சொல்லி ஆல்மன்ட் ஆயில் போட்டு விடுவேன்...பொன்னு 1 மாசத்தில் மினுமினுன்னு ஆயிடுவா...ஆனால் அதிகம் ஆல்மன்ட் ஆயில் இல்ல ஹிமாலயாஸ் போட்டிருக்கேன்..அதுவும் நல்ல இருக்கு.
ஆனால் இப்ப எதுவும் போடரதில்ல..அதன் வித்யாசம் தெரியுது எண்ணை தேய்க்கிரப்ப இருந்த நல்ல மினு மினு ஸ்கின் இப்ப இல்ல..போட்டு விடுங்க குழந்தை நல்ல தூங்கும்,சாப்பிடும்,எலும்பு வலுப்படும்.
தேய்ச்சு 20 நிமிதம் கூட போதும்..ரப்பெர் ஷீட்டில் போடாதீங்க...ரப்பெர் ஷீட்டுக்கு மேல ஒரு துணி விரிச்சு குழந்தையை படுக்க வச்சு தேய்ச்சு கைய்யை லேசா நீவி..காலை நீவி(மெதுவாக) முதுகு நீவி..வயிறு பாகத்தில் க்லாக்வைஸா சுற்றி விரல்களால் நீவி விடுங்க.அப்படியே வட்ட வட்டமா போடாம...வயிற்றில் குழந்தையின் வலது புறத்தில் தொடங்கி இடது பிறத்துக்கு வந்ததும் காலுக்கு விரலைக் கொண்டு வரும்படியான மூவ்மென்ட்....இன்னும் நல்ல தெளிவா செஞ்சுட்டி இருந்தேன்..இப்ப எனக்கு மறந்து போச்சு..லின்க் இருந்தால் அனுப்பறேன்.
சில குழந்தைக்கு பிடிக்காது அப்ப விட்டுடுங்க..மசாஜ் ரிலாக்ஸ்ட் ஆக வேண்டி செய்ரது அழுக வச்சு செய்தால் பலன் இல்லை..

சிறுகுழந்தைகளுக்கு(2- 4) Jelly / Jelly சேர்ந்த பொருட்கள் அதிகமாக பாவிக்க கூடாது என்று அறிந்தேன்.இது யாராவது எனக்கு அடித்து விட்ட கதையா? அல்லது உண்மை இருக்கிறதா? தெரிந்தவர்கள் வந்து விளக்கம் அளித்தால் கோடி புண்ணியமாக போகும்.
அடுத்த என்னுடைய லூசு கேள்வி கர்ப்பமாக இருப்பவர்களும் கர்ப்பமாக போறவர்களும் Chocolate அதிகம் சாப்பிடக்கூடாதா? ஏன்?
இவ்வளவற்றையும் வாசித்து விட்டு என்னை எப்படியெல்லாம் கற்பனை பண்ணுவீங்கள் என நினைத்து பார்க்கிறேன்...........

மேலும் சில பதிவுகள்