ஆட்டுக்கால் சூப்

தேதி: April 16, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கால் -- 4 என்னம் (நன்றாக சுத்தம் செய்தது)
மஞ்சள் பொடி -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -- 20 என்னம்
பூண்டு -- 3 என்னம்
பச்சைமிளகாய் -- 2 என்னம்
விளக்கெண்ணைய் -- 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -- தேவையான அளவு
உப்பு -- தே.அ


 

சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.
20 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.
தேவையெனில் மிளகுத்தூள் போட்டுக்கொள்ளலாம்...


மேலும் சில குறிப்புகள்


Comments

என்னை விகுர வெலைல எந்த என்னைய இருந்த என்ன