முட்டை ஆம்லேட் இனிப்பு (குழந்தைகளுக்கு)

தேதி: April 17, 2008

பரிமாறும் அளவு: ஒரு குழந்தைக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (அ) நெய் - இரண்டு தேக்கரண்டி


 

முட்டையில் சர்க்கரையையும், உப்பையும் போட்டு நல்லா ஃபோர்கால் அடித்துக் கொள்ளவும். தோசை தவா சூடுவந்ததும் தீயை குறைத்து விட்டு நெய் (அ) வெண்ணெய் ஊற்றி தோசை போல் வார்த்து எடுக்க வேண்டும்.


சதை வைக்காத குழந்தைகளுக்கு டெய்லி ஒன்று இந்த ஆம்லெட் கொடுங்கள். குழந்தை பெற்றவர்களுக்கு அவித்த முட்டை பிடிக்காது. சில பேருக்கு அவர்கள் கூட இது மாதிரி மூன்று முட்டை ஒன்றாக அடித்து சர்க்கரை சேர்த்து காலை (அ) மாலை டிபனுக்கு சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்