மங்களூர் கூட்டு

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - அரைக் கிலோ
வெங்காயம் - மூன்று
மிளகாய் - எட்டு
புளி - எலுமிச்சம்பழம் அளவு
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கினை வேக வைத்து, தோலை நீக்கி, மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய், புளி இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை பொன்நிறமாக வதக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுதைக் கலந்து வதக்கவும். மசித்த உருளைக்கிழங்கு துண்டுகளைச் சில நிமிடங்களுக்கு பிறகு போட்டு, உப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.
விரும்பினால் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டலாம்.


மேலும் சில குறிப்புகள்