அருசுவையின் ஆட்டோகிராப்

அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..

அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,
சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எனக்குத்தெரிந்து அருசுவையில் என்னுடைய சந்தோஷமான நிகழ்வு அந்த 'விடுகதை' எபிஸோடுதான். அதன் கதாநாயகியர்களான அஸ்மாவும், அதிராவும் பண்ணிய சேட்டைகளை இப்போது நினத்தாலும்.......அதுவும் பாவம் அதிரா இன்னும் 'விடுகதைக்கு' விடை யோசித்துக்கொண்டிருப்பதாக ' கேள்விப்படுகிறேன்.' என்னால் மறக்கமுடியாத சகோதரி என்றால் அது அதிராதான். நல்ல ஸ்போர்டிவ்னெஸ்.

அன்புள்ள மர்ழியாங்கோ.......
நல்ல தலைப்பெல்லாம் சொல்லுறீங்களே? இதை எல்லாம் எந்த எக்கவுண்டில் சேவ் பண்ணி வச்சிருக்கீங்க.... ஆட்டோகிராப் என்றெல்லாம் கதைத்து கலக்குறீங்க... நானும் கொஞ்சம் பொறுத்து வாறேனுங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உதட்டால சொல்லுறீங்களா? இல்லை உள்ளத்தாலதான் சொல்லுறீங்களா என்று தெரியவில்லை... உண்மையாவா சொல்லுறீங்க? ஒருவர் சொன்னாலே 100 பேர் சொன்னதற்கு சமம்(சுப்பர் ஸ்டார் வசனம் மாதிரி) என எடுத்துக்கொள்கிறேன். என்னாலயும் அந்த பொன்னான நாட்களையும் அத்தனை அன்புச் சகோதரிகளையும் மறக்கவே முடியாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னை பற்றி....

அட்மின் பணி தான்... அலுவலகம்: நியுயார்க்... வசிப்பது பாஸ்டன் ( வந்து சில மாதம் ஆகிரது)... வீரா... என் கணவர்....

எப்படி அருசுவை அறிமுகம்:

வித்யாசமான சமையல் குறிப்பு தேடி கூகுளித்துக் ( athaangaa GOOGLE)கொண்டு இருக்கும் போது ஒரு நண்பி அருசுவை பற்றி சொல்ல... நானும் அருசுவை ஜோதியில் கலந்து விட்டேன்... தொடர்ந்து அருசுவையில் வர மிக முக்கியமான காரணம்.....

1) தமிழில் இருப்பது

தாய் மொழியில் வாசிக்கும் வேகம் இன்னும் எனக்கு பிற மொழிகளில் வரவில்லை....பின்னர் இங்கு உறுப்பினர்களின் பங்களிப்பு மீண்டும் மீண்டும் வர தூண்டியது.
அருசுவையின் அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது....

மெல்ல தொடங்கிய பழக்கம்.. விரைவில் இன்றியமையாததாக மாறி விட்டது...
அட்மின் அவர்களின் திருமணம்.... மற்றும் மன்றதில் ஒரு குடும்பமாக பழகியது... எனக்கு... ஒரு இனிமையான புத்த்கம் போல அமைந்தது.

உங்கள் அனைவரையும் மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினர் போல உணர்கிரேன்....
அருசுவை வெறும் உணவு சுவை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...
வாடிய காலங்களில் உங்கள் த்ரெட் என்னை புன்னகை செய்ய வைத்தன...

எனக்கு செல்விமா/ஜலீலாக்கா/மனோ ஆன்டி/ மனோஹரி மேடம்/தளிகா ( இன்னும் உன் சிக்கனை என் ரெசிபி என்று சொல்லி அலைகிறேன்)/மர்லியா ( இந்த த்ரெட்க்கு நன்றி)../அதிரா... மற்றும் மறந்துவிட்ட பலரும்... என் தினசரி வாழ்வில் ஒரு அங்கம்.....
ஓ!!! சொல்ல மறந்து விட்டேன்.. அருசுவை பார்த்து.. என் அண்ணன் செய்த கிறிஸ்மஸ் டின்னர்.. மறக்க முடியாதது...

என் வேலை பளு காரணமாக.. சில சமயம் வரவில்லை... ஆனாலும்.. ஒரு நிமிடம் எட்டி பார்த்துவிடுவேன்....
என்னை போல பலர் இருக்கிறார்கள்... உங்கள் நேரத்தில் சில நிமிடங்கள் செலவிட்டு உங்கள் முத்திரை பதித்துவிட்டு செல்லுங்கள்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தோழிகளே

மிகவும் நல்ல பதிவி இது நன்றி மர்ழியா எனக்கும் அந்த விடுகதை த்ரெட்டை மறக்கமுடியாது இன்னும் யாரிடமும் அதிகம் பேசி பழக்கம் இல்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக பதிவு போடுகிறேன் ..

அறுசுவையில் இன்னுமொன்று மறக்கமுடியாதது , அன்று சிரித்ததில் வயிறு வலியே எடுத்துவிட்டது.

இந்தியாவில் இரவு 1 மணியிருக்கும்... எங்கள் அட்மின் கொம்பியூட்டர் சம்பந்தமான சொற்களுக்கு விளக்கம் கொடுத்து ஒரு பதிவு போட்டார். அதைப் பார்த்த அமெரிக்கா- வின்னி சொன்னார் நான் போட நினைதேன் .. நீங்க போட்டிட்டீங்க(அப்படி ஏதோ), உடனே அட்மினின் பதில் -- தூக்கம் வரவில்லை அதுதான்.....
உடனே வின்னி... சொன்னார்.. முன்பென்றால் பறவாயில்லை இப்போ ?? இதைப்பார்த்துக்கொண்டு யூகே யில் இருந்த என் வாய் சொல்லுக் கேட்கவில்லை, நான் சொன்னேன்,,, வின்னி சூப்பர் பதில் என்று.... உடனே ,, அட்மின் --" எப்பவுமே முன்னுரிமை முதல்மனைவிக்குதான்... இது 2 வது மனைவிக்கும் தெரியும்... என்றார்.
எங்கள் சகோதரி யூ. ஏ. ஈ இல் ஒருவர் இருக்கிறார். அவர் தூக்கத்திலும் எழுந்து ஒரு தடவை அறுசுவையைத் தட்டுவார்... அப்படி செய்தவேளை... இதைப்பார்த்ததும்...

அவசரமாக, என்னப்பா 2 மனைவியா... என்னோட தூக்கமே போச்சே என்றார்.... அவ்வளவுதான் 2 நாட்கள் நினைத்து நினத்துச் சிரித்தேன்..... இங்குதான் எங்கோ அரட்டையில் அது உள்ளது... மிஸ் பண்ணினவர்கள் பாருங்கள்... என்ன எனக்கு சிரிப்பே வரவில்லை என்றும் சிலர் சொல்லலாம்... வந்தால் சிரியுங்கள்....

எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கு அறுசுவையில் உசாராக சொல்லிவிட்டார் ஆனால் வீட்டில் (அண்ணி கொடுத்த) நடந்த பூசையில் , இப்போ அடிக்கடி புது சர்வர் வரப் போகிறது, அதில் இங்குள்ள தேவையற்றவைகள் இருக்காது என்று சொல்வது காதில் கேட்கிறது... அழிந்து போவதற்கிடையில் எல்லோரும் பாருங்கள். இது எனது ஆட்டோகிராப் தானே அதனால் தவறிருந்தாலும் யாரும் கோபப்பட வேண்டாம்.... மர்ழியா இது உங்கள் பகுதி... என்னைக் காப்பாற்றிடுவீங்கதானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா என் கையை புடிச்சுட்டு வாங்க காப்பாத்துறேன்,..அனைவருக்கும் நன்றி...எனக்கு நிறைய போடா வேண்டி இருக்கு..வேலை செய்யவும்,அப்பப்ப ஈ ஈ அருசுவக்கு பல் இலிக்கவும்தான் டைம் இருக்கு...எப்ப இதில் பதிவு போப்போறேன்னோ தெரியல..ஆனா அனைவரோடதும் படிக்க சுவாரஷ்யமா இருக்கு..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா நல்ல த்ரெட்..ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்கன்னு படிச்சதும் கொல்லுன்னு சிரிச்சுட்டேன்;-D
எழுத நிறைய இருக்கு ஆனால் எதுவும் கிட்டவில்லை...இங்கே வந்தப்ப இருந்த நானும் இப்ப இருக்கற எனக்கும் நிறைய வித்யாசம் இருக்கு..யார் எது எனக்கு சொல்லித் தங்களோ இல்லையோ நானா எதெதுலயோ ரொம்ப முன்னேறி இருக்கேன்னு எனக்கா தோனுது.
இப்ப எப்படி மற்றவர்களிடம் பேசுவது என்று தெரிந்து கொண்டேன் அதற்கு காரணம் தேவா,செல்வீ,மனோஹரி,மனோ,மாலதிக்கா போன்ற அனுபவசாலிகள் ...அதில் என்னை மிகவும் கவர்ந்தது தேவா.ஏன்னா நான் எழுத்தை பார்த்ததும் ஒரு நடுத்தர வயது பெண் ஒரு குடும்பத்தலைவி,கட் அன்ட் ரைட்டா பேசும் ஒரு கண்டிப்பாண பெண்ணு மனசுக்குள்ள ஒரு கற்பனை இருந்தது...ஆனால் எனக்கு ஆச்சரியம் தேவா என்பவர் ஒரு சின்ன பெண்,ரொம்ப எளிமையான இன்னைக்கி புதுசா பழகினாலும் எவ்வளவோ நாள் பழகின மாதிரியான பேச்சு..அது எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது.
பிறகு செல்வீக்கா..என் அம்மாட்டா சொல்வது போல கதையளப்பேன்..என்ன ரீல் விட்டாலும் கேட்டுட்டு சலிக்காம பதிலும் சொல்வாங்க.என்ன வேலை இருந்தாலும் அதற்கிடையி வந்து நம்ம வயதுக்கேத்த மாதிரி பேசும் திறமை படைத்தவர்.
ஹர்ஷினி ,ஹேமாவை மறக்க முடியாது ஏனோ இந்த ரெண்டு பேரும் ஓடியே போயிட்டாங்க சொல்லாம கொள்ளாம.
பின் சமீபகாலமாக இன்னவர் என்று சொல்லமுடியாத மாதிரி மர்ழியா,ஜலீலாக்கா,அதிரா,கதீ,ரசியா,அஸ்மா,ஹிபா,ரீஹா,பர்வீன் என இன்னும் பலரும் அன்றாடம் எனது குடும்பத்தில் ஒருவர் போல ஆகிவிட்டார்கள்..
இதில் நான் அதிகம் பேசாத இரண்டு சகோதரிகள் வானதி,மாலி..ஆனால் இருவரும் நல்ல குணமுடையவர்கள்..ரெண்டு பேர்ருடைய எதார்த்தமும் எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது..அறுசுவையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஆள் என்றால் அது வானதி தான்.
இங்கே பல வருத்தமான நிகழ்விகளும் நடந்திருந்தாலும் அதற்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும் ஏன்னா அதனால் என்னை தைரியமா வச்சுக்க அதுவும் உதவி செய்தது..அதற்கு முக்கியமான காரணம் அட்மின் பாபுண்ணா..எப்ப நான் திட்ராங்க,ஒதக்கிராங்கன்னு பொலம்பினாலும் என்னை திருப்பி திட்டாம பொறுமியா தைரியம் கொடுப்பார்..அவருடைய தைரியமும் வாய் சாமர்த்தியமும் எனக்கு பிடித்திருக்கிறது...
பின் இங்கே மறக்க முடியாத சில சம்பவங்கள் என்றால் அது பிறந்த நாளுக்கு எனக்கு கிடைத்த வாழ்த்துக்கள்..வாழ்க்கையில் முதல் முறையாக கிடைத்தது..பின் காது குத்துவது சம்மந்தமான ஒரு விவாதம் முன்பு நடந்தது..அதன் பிறகு சுபா என்றால் எனக்கு கம்மல் நியாபகம் வந்து எப்ப நினைத்தாலும் சிரிப்பு வந்து விடும்.
அதன் பிறகு பலபல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்து விட்டது..
4 வருடமாக தமிழுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் பேசினால் கூட திக்கும் நிலமை வந்து விட்டது...அறுசுவைக்கு வந்தபின் மறந்து போன தமிழை திரும்ப கொண்டு வந்து விட்டேன் இப்பொழுது கணவில் கூட தமிழ் தான்.
பிறகு எனக்கு மிகவும் பிடித்தமான குழந்தை வளர்ப்பு&குழந்தையின் மனநலம் பற்றியவைகளை படிப்பதோடு நிறுத்தாமல் மற்றவர்களிடம் பைர்ந்து கொள்ளவும் மிகவும் உதவியது அறுசுவை.
என்ன மர்ழியா இதைத் தானே கேட்டீங்க??நான் சரியாத் தானே சொன்னேன்??

மர்ழியா,
என்னோட ஓட்டோகிராப்தானே... நான் ஏன் எழுதவேணும் என்றெல்லாம் சொல்லி "ஈ" காட்டினால் போதாது.... சிரித்தது அழுதது எல்லாவற்றையும் எழுதுங்க... நாளைக்கு எழுதிடுவீங்க இல்ல?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்