அருசுவையின் ஆட்டோகிராப்

அன்புள்ள அனைவருக்கும்,நாம் பல் வேறு நாடுகளில் இருந்தாலும்,ஊர்களில் இருந்தாலும் அருசுவை என்னும் அருமையான தலத்தில் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து இருக்கின்றோம்,நமக்குள் ஆலோசனைகள்,அரட்டைகள்,கஸ்டங்கள்,சந்தேகங்கள் என என அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்...ஒன்றை தவிர்த்து அதுதான் ஆட்டோகிராப்...(ஏற்கனவே இருந்தால் சொல்லிடுங்க)

1.சிலர் நம் அருசுவையில் மறக்கமுடியாதவர்களாக இருக்கலாம்...
2.சிலர் நம் மனதை கவர்ந்தவர்களாக இருக்கலாம்...
3.சிலரின் கஸ்டங்கள் நம் மனதில் வடுக்கலாக இருக்கலாம்...
4.சிலரின் சந்தோசமான நிகழ்வுகள் என்றென்றும் மறக்கமுடியாத மகிழ்ச்சியாக அமைந்து இருக்கலாம்..
5.நம்மில் சிலரை யாராவது மிஸ் பண்ணி இருக்கலாம்...
6.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்(அது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கும்)அது மற்றவர்களுக்கு தெரிந்து இருக்கும் தெரிந்தவர்கள் அதை வெளிப்படுத்தலாம்..

இப்படிப்பட்டவைகளை மனசு விட்டு பேசிட்டு போங்க...மனதில் வைத்து எதுக்குங்க?நம்ம சேவிங்ஸா கூட போகுது...பேசினாலாவது நமக்குள் இன்னும் நெறுக்கம் அதிகரிக்கும்...அடுதவர்கள் புரிந்து கொள்ள முடியும்...கெட் ஸ்டாட் நவ்...யார் ஆரம்பிக்க போறது?எனக்கு இப்ப கொஞ்சம் டைம் இல்லை..வேலை பளு..டைம் கிடைத்ததும் நான் பதிவி போடுகிறேன்..

மர்ழியா முதலில் உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் நல்ல த்ரெட் ஆரம்பித்து அதன் மூலம் நம் அறுசுவை சகோதரிகளின் நினைவுகளை அசை போட வைத்து இருக்கிறாய்.

முதலில் எனக்கு அறுசுவையை அறிமுகம் செய்த எனது கணவருக்கு நன்றி சொல்லனும் இதன் மூலம் நான் எவ்வளவு அக்கா,தங்கை,தோழிகளை பெற முடிந்தது.

நான் அறுசுவையை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வந்தாலும் நான் பெயர் பதிவு செய்து 1 வருடம் மேல் ஆகிறது. இங்கு எனக்கு முதலில் அறிமுகமானவர் மனோஹரி மேடம் தான் நான் முதலில் அவர்களிடம் மட்டும் தான் பேசியது உண்டு.தனியாக இருக்கும் நான் முன்னாடி எல்லாம் ரெம்பவும் பயந்தசுபாவம் உடையவள் மனோஹரி மேடம் உடைய பதில் எல்லாம் நல்ல தைரியம் தரக்கூடியதாக இருக்கும். அவர்கள் என்ன பதிவு போட்டாலும் அதற்க்கு பதில் போடுவது முதலில் நான்தான் தினமும் அறுசுவையை பார்த்துவிட்டு அவர்கள் எது எழுதி இருந்தாலும் அதை என் கணவரிடம் சொல்லாத நாள் இல்லை அந்த அளவுக்கு அவர்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும். யாருக்கும் ஏதாவது ஒன்று என்றால் ஒரு தாயாக,தோழியாக,சகோதரியாக அவர்கள் பதில் தரும் விதம் ரெம்பவும் அருமை என்னை கவர்ந்த அன்பான,அழகான,அறிவான ஒரு பெண். அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் இந்த த்ரெட் முடிந்துவிடும்.

அடுத்தது நம்ம பாபு அண்ணன்.என்னுடைய குறிப்புகளை கூட்டாஞ்சோறு பகுதியில் சேர்த்ததை மறக்கமுடியாது.அதன் பிறகு யாரும் சமைக்கலாமில் என்னுடைய முதல் ரெசிபி வந்தது.இன்று வரை எல்லாருடனும் ஒரு சகோதர பாசத்துடன் பழகி வருவது பிடித்து இருக்கிறது எந்த வெப்சைட்டிலும் இந்த அளவுக்கு எல்லாரும் சகோதரத்துவத்துடன் பழகுவாங்களா என்று தெரியாது.அறுசுவைக்கு குறிப்பு கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து இதுவரை அறுசுவையே கதி என்று கிடக்கும் அளவுக்கு அறுசுவை ஒரு அங்கமாகிவிட்டது. எப்ப பிரவுஸ் பண்ண வந்தாலும் முதலில் ஓபன் பண்ணுவது அறுசுவையை மட்டும் தான். என் பையன் 2 வயசுல இருந்தே சொல்வான் மம்மி எந்த வெப்சைட்டுக்கு போவாங்க என்று என் ஹஸ் கேட்டால் அறுசுவை.காம் என்று சொல்லுவான்.அவனுக்கு தமிழ் எழுத்தை எதிலாவது பார்த்தால் கூட மம்மி அறுசுவை என்பான்.இப்பதான் தமிழ் எழுத்து என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறான்.அறுசுவை என் குடும்பம் போல ஆகிவிட்டதால் நான் அறுசுவைக்கு வராத நாட்களில் ரெம்பவும் அறுசுவையை மிஸ் பண்ணுகிறேன்.

அப்புறம் நம்ம செல்வி அக்கா முதலில் அவங்க அறுசுவையில் கொடுத்த குறிப்பை செய்து பின்னூட்டம் தந்த நாளில் இருந்து பழக்கம் இன்றுவரை என் அம்மா சொல்வதை போல தான் எனக்கு அட்வைஸ் சொல்லுவாங்க. எனக்கு ரெம்பவும் பிடிக்கும். அவங்களோட தைரியம்,என்றும் இளமை,அவங்களுடைய அனுபவம் எல்லாம் பிடிக்கும்.அவங்க கிட்ட இருந்து நான் நிறை கத்து இருக்கிறேன்.

அப்புறம் என் உயிர் தோழி மர்ழியா அவளை நான் முதலில் அடையாளம் கண்டு செல்வி அக்கா அவளை கலாய்ச்சியது மறக்க முடியாது.

அப்புறம் மனோ மேடம் இவங்களை எனக்கு ரெம்ப பிடிக்கும். இவங்க ரெசிபி அப்புறம் வெளிநாடா,இந்தியாவா த்ரெட்ல இவங்க கருத்து எனக்கு பிடித்து இருந்தது.

அதன் பிறகு அறுசுவையின் மூலம் எனக்கு அறிமுகம் ஆன தோழிகள் ஹவ்வா, பாயிஜா,அஸ்மா,ரஸியா,ஜுலைஹா, இவர்களையும் மறக்கமுடியாது.

அதன் பிறகு நம்ம தளிகா இவங்களை எனக்கு ரெம்பவும் பிடிக்கும் நல்ல மெச்சூர்டா பேசுவாங்க சின்னவயசு என்று போட்டோ பார்த்ததும் ஆச்சர்யம்.

அதன் பிறகு தேவா பிடிக்கும் இவங்களையும் ஏதோ பெரிய ஆள் என்று நின்னைக்கும் அளவுக்கு நல்ல திறமை வாய்ந்தவர். மேக்கம் டிப்ஸில் தொல தொல நைட்டி பற்றி எழுதியது மறக்கமுடியாது.

பின் ஜலீலா அக்கா இவங்களை அறுசுவை குடும்பத்தில் பிடிக்காதவங்களே இருக்கமாட்டார்கள். யாருக்கு ஒரு உதவி என்று கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் குணம் பிடிக்கும். மனசுல எதுவுமே இல்லாத ஆள்.

அப்புறம் ஜெயந்திமாமி,மாலதி மேடம்,அதிரா,இவங்க தமிழ் பேசுறதே ஒரு அழகுதான். அதிராவின் விடுகதை த்ரெட் மறக்கமுடியாது. நானும் இதில் புலம்பி இருப்பேன்.

அப்புறம் தங்கை செம்பருத்தி, ஜானகி,பானுகனி,வின்னி,ஹிபா,இப்ப புதுசா வந்ததுல இலா,விஜி,அஞ்சலி இவங்களையும் பிடிக்கும்.

அடேங்கப்பா இவ்வளவு பெரிய பதிவான்னு பார்த்து திட்டாதீங்கப்பா எனக்கு பிடித்த யாரையும் விட்டுடக்கூடாதே அதனால் தான்.

ஹேமா,ஹர்ஷினி,வாணிரமேஷ்,ஓவியா,சிந்து இந்த 5 பேரும் எங்க போனாங்க.

யார் பெயராவது விட்டு போய் இருந்தால் மன்னிக்கனும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா என்னப்பா என்னை விட்டுட்டீங்க. பிடிக்காதா உங்களுக்கு என்னை
அன்புடன் தீபா

உங்க பெயரை தீபா என்று டைப்பண்ணினேன் எப்படியோ விட்டு போய்டிச்சி உங்களை பிடிக்காமல் போகுமா சாரிப்பா. நான் சாப்பிட்டு வருகிறேன் பை.

அன்புடன் கதீஜா.

கதீஜா சும்மா தாம்ப வம்பு பண்ணினேன் உங்ககிட்ட.எனக்கு தெரியும் உங்களுக்கு என்னை பிடிக்கும் என்று
அன்புடன் தீபா

ஆ இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன்.
என்னபா தளிகா, கதிஜா, மாலதி யக்காவ், மர்லியா, கே.ஆர். எல்லாம் என்னை ரொம்பவே புகழ்ந்து இருக்கிறீர்கள் உங்கள் அனைவருடைய உள்ளத்தில் நீங்காதா இடம் பெற்றுள்ளேன் என்று நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.

நான் முதலில் முட்டை கீமா பரோட்டா, கட்லெட்,எல்ல பிரியாணியும், கிரீம் ஆப் சிக்கன் சூப் இதேல்லாம் நல்ல செய்வேன், தக்க்டி ஆ , கால் பாய.(மசால் வடை, பகோடா, பஜ்ஜி, சிக்கன் பகோடா)
அப்போது துபாய் வந்து புதிதில் எந்த கடையிலாவது கேளுங்கள்
செய்து தருகிறேன் என்பேன் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார்.
கடைசியில் வீட்டி இருந்த படி எட்டு வருடம் வீட்டில் இருந்த படி சம்பாதித்தேன்,
பிறகு இப்போது ஆபிஸ் வேலை 7 வருடம்
இந்தியாவில் இருந்த போதும் எதையாவது கற்று கொண்டும் ,மற்றவர்கலுக்கு கற்று கொடுத்து கொண்டும், சம்பாதித்து கொண்டும் தான் இருந்தேன்.

பிறகு இஸ்லாம் கல்வி அந்த சைட்டை பார்த்து கொண்டிருக்கும் போது அருசுவை அறிமுகமானது.
ஆனால் பார்வை யிட முடியல வேறு இடத்தில் போய் பொய்ய் பார்ப்பேன், எப்படி கூட்டங்சோறு கிளிக் செய்வது, எப்படி யாரும் சமைக்கலாம் கிளிக் செய்வது என்று கூட தெரியாது,

பிறகு ஒவ்வொருநாள் ஓவ்வொரு ரெஸிபி வரும் போதும் ஆ எனக்கு தெரிந்தாவே இருக்கே எப்படி அனுப்புவது என்று தெரியலையே என்று ஒன்னறை வருடமா பார்வையிட்டு மட்டுமே வந்தேன்,

கடைசியில் எப்படியோ கண்டு பிடித்தேன், அதில் சேர்ந்தது நோன்பி, அப்போது ஆபிஸ் அரை நாள் ரொம்ப சுலமா போயிற்று

நோன்பி 30நாளும் 30 வித விதமாக செய்வேன்,
டெய்லி கஞ்சி, வடை (அ) பகோடா , சிக்கன் பஜ்ஜி, சூ , இரவு சாப்பாடு, மாலை நோன்பு திறக்க ஜூஸ், சுண்டல், பூரூட் சேலட், டிபன் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று வேறு பட்டு தான் செய்வேன்,
அப்ப 30 நாளில் ஒரு நாளைக்கு 12 ரெஸிபி என்றால் பார்த்த்க்கொள்ளுங்கள்.

அன்று அன்று செய்வதை அப்படியே கொடுத்து வந்தேன், அதே சமையம் வெஜ் (நான் வெஜ் ) எல்லோரும் பார்வையிட்வதால் இடை இடையே வெஜ்ஜும் கொடுத்து வந்தேன்,
இப்பை கொடுக்க ஆரம்பித்தது தான் மற்றவர்களை பார்த்து தான் நான் வியந்து இருந்தேன்,

நான் முதல் முதல் கொடுக்க ஆரம்பித்ததும் செய்து பார்த்து சட்பி கேட் கொடுத்தது செல்வி மேடமும், தளிக்காவும் பிறகு ஒகே மற்றவர்கல் செய்யும் அளவ்க்கு இருக்கு என்ரு கொடுக்க ஆரம்பித்தேன்,

///நான் ரெஸிபி கொடுப்பது பட்டம் வாங்கவோ, பாராட்டை பெறவோ, கிடையாது.//

நிறைய பேர் சமையலில் டீ கூட போட தெரியாமல், ஹாஸ்டலிலேயே தங்கி படித்து அப்படியே கல்யாணம் ஆகி வெளியூர் வந்து தத்தளிக்கிறார்கள்,
அந்த மாதிரி நிறைய பேருக்கு நான் போன் முலம் உதவி இர்யுக்கிறேன்.

அதே போல் இங்கு உள்ள சகோதரிகலுக்கும் உதவட்டும் என்ற நல்ல எண்ணம் தான்
சரியாக சமைக்க தெரியாமல் குப்பையில் போடுபவர்கல் நிறைய பேர் இருக்கிறார்கள்.
சாப்பாடு வேஸ்ட் பண்ண எனக்கு பிடிக்காது.

//எவ்வளவோ சகோதரிகள் செய்ய தெரியாமல் கணவன் மணைவி தகாறாறு, நிம்மதியின்னை இந்த மதிரி சகோதரிகளுக்கு பயன் படட்டும் என்பது தான் என் ஆசை.
//
நிறைய பேருக்கு ஞாபக மறதி என் அம்மாவே இப்போது என்னிடம் அளவு கேட்கிறார்கள்.
என் குறிப்பு இதில் இருந்தா ஒரு காலத்தில் எனக்கே மறந்து போனாலும் இதிலிருந்து டக்குன்னு பார்த்து கொள்ளலாம்.

எனக்கும் சுலபம், நமக்கு தெரிந்த நல்லதை உடனே நாலு பேருக்கு சொல்லிடனும்.

இதான் அருசுவை கதை அப்ப டைப்பண்ணி கை வலிக்குது.

என்றும் உங்கள்

ஜலீலா

Jaleelakamal

யா அல்லாஹ் என்னால் முடிலய இப்போதான் வந்தேன் ஆட்டோகிராப் யாரு கொடுத்து இருக்கானு பார்கலாம்னு பார்த்தா நீங்க ஏங்கா பிக்னிக் போனாலுதான் அடுப்பை தூக்கிட்டு போறீங்க இப்பா ஆட்டோகிராபிலுமா?ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆ ஆரம்பத்தை பார்த்ததும் எனக்கு ஒரே சிரிப்பு .இதிலும் முதல் இடம் சமையலுக்குதான் நல்ல அக்கா போங்க ஹா ஹா..அடுத்ததைலாம் இன்னும் பார்கல இருங்க பார்த்துட்டு வாறேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யக்கா இது ஆட்டோ கிராப்..நல்ல பிள்ளையாட்டம் அதை பற்றி சொல்லுங்க யாரை பற்ர்ரியும் சொல்லல எல்லாம் ரெஸிபிஸ்,அனுபவம் இப்படிதான் போங்கக்க எனக்கு ஏமாற்றம்தாம்..பிளீஸ் கொஞ்ச நேரம் கையில் இருக்கும் அடுப்பை ஒரு ஓராமா வைத்துட்டு இந்த தலைப்புக்கு ஏற்ற பதிலை போடுங்க..இல்லை நாங்கலாம் சட்டியை தூக்க வேண்டியது வரும் ஆமா...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜலீலக்கா எனக்கு கொஞ்சம் சங்கடமா கூட ஆகிடுச்சு..எதை அமுக்கன்னே தெரியாம இருந்த நீங்க இப்ப எப்படிமுன்னேறியாச்சு.
இந்த வார்த்தைகள் உங்கள் மனசிலிருந்து வருவதை நல்ல புரிந்து கொள்ள முடிகிறது.உங்கள் முன்னால் நாங்கல்லாம் ஒன்னுமே இல்லை.

அது கண்டிப்பாக தளிகா உண்மையில் ஜலிலக்கா மனதளவிலும் சரி,சமையல் இப்படி எதிலுமே கிரேட் தான்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜ்லீலா அக்கா / கதீஜா உங்க ரெண்டு பேரோட ஆட்டோகிராப் ரொம்ப சூப்பர்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்