dry cough

how to cure dry cough with home remedies.its for my mum in law age 63.please help me..i cant see her in painfull cough.she tried some medicine from gp but its not work for her.help me

அன்புள்ள ஷிவ்யா! வறட்டு இருமலுக்கு செல்வி மேடம் அவர்கள் கொடுத்துள்ள ஒரு குறிப்பை இந்த லிங்க்கில் பாருங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/3506

மேலும், மன்றத்தில் "உடல் ஆரோக்கியம்" » "வீட்டு வைத்தியம்" என்ற தலைப்பில் வறட்டு இருமலுக்கு சிறுவர் முதல் பெரியவர் வரை செய்யக்கூடிய எனக்குத் தெரிந்த எளிய வைத்திய முறை ஒன்றை கூறியுள்ளேன். அது கீழுள்ள லிங்க்கில் உள்ளது.

http://www.arusuvai.com/tamil/forum/no/119

உங்களின் சிரமத்தைத் தவிர்க்க அதை அப்படியே காப்பி பண்ணி கீழே உங்களுக்கு கொடுத்துள்ளேன். உங்க அம்மாவுக்கு உடனே செய்து கொடுங்கள். நிச்சயம் பலன் தெரியும்.

//வெற்றிலை - 2
மஞ்சள் - 1 இன்ச் அளவு துண்டு
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்

சீரகத்தை ஒரு சட்டியில் போட்டு வாசம் வரும்வரை வறுத்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். வெற்றிலையை கழுவி, கிழித்து அதனுடன் போடுங்கள். மஞ்சளை நரபுரவென்று பொடியாக்கி அத்துடன் சேருங்கள். இவற்றை நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் ஒரு டம்ளர் அளவு வற்றியவுடன் பனங்கற்கண்டு சேர்த்து கரைத்து இறக்கவும். பதமான சூட்டில் அருந்தவும். இப்படியே குணமாகும்வரை செய்யலாம். 2 நாட்களில் இறைவன் உதவியால் குணம் தெரியும்.//

இன்னும் சில சுலப வைத்தியங்கள்:

- 1 டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து, 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் விரைவில் குணமாகும்.

- 1 டம்ளர் வடித்த அரிசி கஞ்சியில் சிறிது பனங்கற்கண்டும் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகையும் கலந்து இதமான சூடாக குடிக்கவும்.

மேலே சொன்ன எல்லா முறைகளையும் மாற்றி மாற்றி கூட செய்யலாம்.

ஷிவ்யா வரட்டு இருமலுக்கு நல்ல அதிகளவு ஜூஸ் தண்ணீர் ,குடிச்சால் மாறும் என்றார்கள்..நான் குடிச்சேன் 1 வாரத்தில் மாறிடுச்சு.

வறட்டு இருமல் பெரும்பாலும் உஸ்ணத்தால் ஏற்படலாம். இதற்கு நற்சீரகம்(சிறிய சீரகம்) 1/2 டம்ளராவது போட்டு நன்கு அவித்து வடித்து கற்கண்டும் சேர்த்து அடிக்கடி குடித்தால் போயே போய்விடும். கடும் சாயமாக குடிக்கவேண்டாம். மெல்லிய சாயமாக இருந்தால்தான் குடிக்கலாம். நிறைய ஒறேன்ஸ் யூஸ் கரைத்துக் குடிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Thanks for givin your tips for dry cough.its really helpfull for me.she is perfect now.thank again for ur wonderfull home remedies.cheers.

மேலும் சில பதிவுகள்