எனக்கும் உதவுங்களேன்! :)

அறுசுவையின் எனதன்பு தோழிகள் மற்றும் சகோதரிகளுக்கு,

மருவை நீக்க 'அப்பளக்காரம்' கொண்டு செய்யும் ட்ரீட்மெண்ட் நம்முடைய இதே அறுசுவையில் எங்கோ யாரோ சொல்லியிருந்தார்கள். நோட் பண்ணிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். உங்கள் யாருக்கும் தொல்லைக் கொடுக்கக்கூடாது என்று :) என்னால் முடிந்தவரை தேடிப்பார்த்துவிட்டேன். இப்போது அது அவசியம் தேவைப்படுகிறது. அது எந்த லிங்க்கில் உள்ளது என்பதை யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ் வந்து உதவுங்கப்பா...!

ஹாய் அஸ்மா நலமா?நீங்கள் கேட்ட மருவை பற்றிய குறிப்பு இந்த லிங்கில் இருக்கு பாருங்க
http://www.arusuvai.com/tamil/forum/no/7576
அன்புடன் தீபா

டியர் தீபா! நான் நலமே! நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? எனக்காக பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் அதில் 'அப்பளக்காரம்' கொண்டு செய்யும் ட்ரீட்மெண்ட் இல்லை. நான் தேடியது அதுவே! அந்த குறிப்புக்கு கீழே, அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சகோதரி கூட, மருவுக்கான ஆயின்மென்ட் பெயரை (Compound W என்று)சொல்லி, அது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும் என்றும் சொல்லியிருந்தார்கள். ஒருவேளை அந்த த்ரெட்டையே நீக்கிவிட்டார்களோ என்று தெரியவில்லை. சப்போஸ் இதற்கு பிறகு உங்க கண்ணில் பட்டாலும் சொல்லுங்கள். அதற்காக கஷ்டப்படவேண்டாம்! :) ஓ.கே. மீண்டும் உங்களுக்கு நன்றி டியர்!

பாபு அண்ணா...! உங்களுக்காவது தெரியுமா அந்த த்ரெட்டை நீக்கிவிட்டார்களா என்று? என்னப்பா....வேறு யாருக்குமே தெரியவில்லையா? :(

அஸ்மா நானும் தேடுகிறேன் கிடைக்க மட்ட்ங்கிறது , அண்ணு தான் சொன்னார்கள் அவர்களை அழிய்ங்கள்
உங்களுக்கு பதில் கிடக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி ஜலீலாக்கா! கிடைத்தால் சொல்லுங்கள், ரொம்ப கஷ்டப்படவேண்டாம். பாபு அண்ணனுக்கு அந்த த்ரெட் நீக்கப்பட்டுவிட்டதா என்பதை சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. எதற்கும் கேட்டிருக்கிறேன். எப்போது இதைப் பார்ப்பார்கள் என்று தெரியலயே :-/

இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன். நேற்று முழுவதும் இணையம் பக்கம் வர இயலவில்லை.

மரு, அப்பளக்காரம் என்ற இரு வார்த்தைகளை மேலே உள்ள தேடுதல் பெட்டியில் கொடுத்தீர்கள் என்றால் அவை இடம்பெற்றுள்ள பதிவுகள் எல்லாம் பட்டியிலடப்படும். நானும் கொடுத்துப்பார்த்தேன். எதுவும் வரவில்லை. ஒருவேளை அந்த த்ரெட் நீக்கப்பட்டிருக்கலாம். த்ரெட் நீக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது கடினம். மிக சமீபத்தில் நடந்திருந்தால் கண்டறிவது எளிது. நீண்ட நாட்களுக்கு முன்பு என்றால் மிகவும் கடினம்.

உதவமுடியாமைக்கு வருந்துகின்றேன். உங்களின் இந்த பதிவைப் பார்த்து, அந்த குறிப்பை கொடுத்தவர் மீண்டும் கொடுப்பார் என்று நம்புவோம்.

நன்றிண்ணா... ! நீங்கள் சொல்வதுபோல் பொறுத்து பார்ப்போம்! அப்பளக்காரமும் சேர்ந்து பொறுமைக்காக்கிறது :)

நீங்கள் எது பற்றிக் கதைக்கிறீங்கள் என்றே எனக்குத் தெரியவில்லை, மருவு என்றால் என்ன? அப்பளக்காரம் எதுவுமே எனக்குத் தெரியாது.
ஏதும் உடல் சுகயீனமாக இருக்கிறீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா! உங்க தமிழுக்கு நாங்கள் மீனிங் கேட்கிறோம்...நீங்க எங்க தமிழுக்கு மீனிங் கேட்கிறீர்கள்... நல்ல வேடிக்கைதான் போங்க அதிரா! இறைவன் புண்ணியத்தில் ( ஒரு 90% ) நான் நல்லாதான் இருக்கேன் :) 'மரு' என்றால் சிலருக்கு முகம், கழுத்து பாகங்களில் சிறு சிறு முடிச்சுகள் போன்று ஆங்காங்கே தோன்றும். தோல் நிபுணர்கள் (dermatologists), அவற்றை சிறு ஆபரேஷன் மாதிரி செய்து சுலபமாக எடுத்துவிடுகிறார்கள். ஆனால் மீண்டும் வந்துவிடுகிறது. ஹோமியோவில் தொடர்ந்து மருந்து எடுத்து, அதற்குரிய ஆயின்மென்ட்டும் போட்டு வந்தால் குணமாகுவதோடு மீண்டும் வராது என்று சொல்கிறார்கள். ஆனால் எந்த மருந்து என்று இன்னும் சரியான பெயர் தெரியல. அதற்குள் அறுசுவையில் பார்த்த 'அப்பளக்காரம்' வைத்து செய்யும் ட்ரீட்மெண்ட் செய்து பார்க்கலாமே என்று முயற்சி செய்கிறோம். இது இங்கு 6 - 7 பேருக்கு உள்ளது. 'அப்பளக்காரம்' என்றால், அப்பளம், பப்படம் செய்வதற்கு பயன்படுத்தும் ஒரு பொருள். அதையும் இந்தியாவிலிருந்து வரவழைத்தாச்சு.....இங்கு வந்து பார்த்தால் அந்த த்ரெட்டையே காணோம்.. :) ஏற்கனவே கொடுத்தவர்கள் இந்த தவிப்பைப் பார்ப்பார்களா.. மீண்டும் கொடுப்பார்களா... :-/ அதிரா... இப்போ புரிந்ததா 'மரு' & 'அப்பளக்காரம்' னா என்னான்னு? :)

நல்லது அஸ்மா,
இங்கே பதிவு போட்டவர்கள் உங்கள் பதிவைப் பார்த்தால் நிட்சயம் உதவுவார்கள் என நினைக்கிறேன். யாராவது புதியவர்கள் தெரிந்தால்கூட சொல்லலாம்.

இங்கு பிரச்சனை என்னவென்றால். நான் உட்பட எல்லோரும், முகப்பில் இடது பக்கத்திற்கு வருவதை அல்லது சமீபத்திய பதிவுகளை மட்டுமே அடிக்கடி பார்க்கிறோம். ஏனையவற்றை தேடிப் பார்ப்பதில்லை. அதனால் பதில் தெரிந்தாலும்.. கேள்வி கண்ணுக்குத் தெரியாமல் போகலாம். எனவே இடையிடையே இந்த தலைப்பை வெளியே கொண்டுவாருங்கள். விளக்கமாக எழுதி புரியவைத்தமைக்கு நன்றி. எனக்கு இதுபற்றி ஏதாவது தெரிந்தால் சொல்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்