மாங்காய் வெங்காய தொக்கு

தேதி: April 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மேங்கோ பவுடர் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிது


 

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
முதலில் வெங்காயம், இஞ்சி, சிறிது கருவேப்பிலை ஆகியவற்றை அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும். பின் அதை ஆற வைத்து, மேங்கோ பவுடர், மல்லித்தூள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய, இஞ்சி விழுதை சேர்த்துக் கிளறவும்.
பிறகு அதில் மேலே கொடுத்துள்ள எல்லா தூள்களையும் போடவும். உப்பையும் சேர்க்கவும்.
இதனை நன்கு கிளறி விட்டு சுமார் 6 ல் இருந்து 8 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
அவ்வப்போது கிளறி விட்டு எண்ணெய் பிரிந்து திரண்டு வரும் போது இறக்கி விடவும்.
இப்போது சுவையான மாங்காய் வெங்காய தொக்கு ரெடி.
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் தயாரிப்பு இந்த மாங்காய் வெங்காய தொக்கு. இதனை சூடான இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.

இதில் மேங்கோ பவுடருக்கு பதிலாக ஃபிரஷ் மாங்காய் சேர்த்து செய்யலாம்.புளிப்பிற்கு ஏற்றவாறு சேர்க்கவும்.மாங்காய் சேர்க்கும் போது துருவி வேக வைத்த வெங்காயத்துடன் அரைக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டியர் மஹிஸ்ரீ ரொம்ப அழகா இருக்கீங்க..குறிப்பும் அருமை..நன்றி

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் மஹிஷிறி,
மாங்காய் பவுடர் என்று கடைகளில் கிடைக்கிறதா? எங்கு வாங்கலாம் என்று தெரிந்தால் சொல்லவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் மார்ழியா
வாழ்த்துக்களுக்கு நன்றி................

உங்களுடைய ஒரு குறிப்பில் உங்கள் குழந்தையின் ஃபோட்டோ பார்த்தேன்.மிகவும் கியூட் டாக இருந்தார்கள்.அவருடைய பெயர் என்ன??

ஹாய் அதிரா

மேங்கோ பவுடர் என்பது எல்ல டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் கிடைக்கும். EVEREST,MTR போன்ற பிரபலமான பிராண்டுகளில் மேங்கோ பவுடர் என்ற பெயரிலேயே கிடைக்கிறது.

இதை சாம்பார் செய்யும் போது புளி ஊற வைத்து செய்ய நேரம் இல்லை அல்லது ஊற வைக்க மறந்து விட்ட சமயங்களில் சேர்த்து செய்யலாம். வித்தியாசமான சுவையாகவும்,நன்றாகவும் இருக்கும். வெளிநாட்டில்,மாங்காய் கிடைக்காத இடங்களில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும்.அனைத்து INDIAN ஸ்டோர்களிலும் கிடைக்கும்.இதை பயன்படுத்தி மாங்காய் சாதம் கூட செய்யலாம்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஹாய் ஸ்ரீகீதா உங்களுடைய இந்த குறிப்பை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. செய்வதற்கும் எளிதாக இருந்தது. நன்றி உங்களுக்கு.

ஹாய் மஹி, நல்லா இருக்கீங்களா? இன்னக்கி மதியம் உங்க மாங்காய் வெங்காய தொக்கு தான் செய்தேன் ஆஹா வாய் சப்புக் கொட்டி ரசித்து சாப்பிட்டது அட என்ன ஒரு டேஸ்ட் . இந்த குறிப்பை முன்பே பார்த்தேன் ஆனால் நல்ல மாங்காய்காக வெயிட் பன்னிகிட்டு இருந்தேன் இப்பாதான் நல்ல ஸ்வீட் மாங்காய் கிடைத்தது. அதான் செய்தேன் ரொம்ப ஸ்பிலான செய்முறியும் கூட தாங்ஸ் கீதா ரொம்ப ரொம்ப சூப்பர் ரெசிபி தந்ததற்க்கு என்ன அதற்கு பிறகு குறிப்புக் கொடுக்கறது இல்லையா நீங்க?

நான் நன்றாக இருக்கிறேன்.நீங்கள் எப்படி இருக்கிறீங்க? செய்து பார்த்து பின்னூட்டம் எழுதியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.நீங்கள் இதை செய்து, ரசித்து சப்பிட்டதை கேட்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கூட்டஞ்சோறு & யாரும் சமைக்கலாம் பகுதியில் கொஞ்சம் ரெசிபிஸ் சேர்த்திருக்கிறேன். நேரம் கிடைக்காததால் கொஞ்சமா தான் சேர்க்க முடிஞ்சது.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

இப்பதாம்ப்பா இதை படித்தேன் சாரிமா லேட்டா பதில் கொட்த்ததற்க்கு என் பொண்ணு பெயர் மர்யம் நர்மதா தேங்ஸ்மா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு