கோக்கோ ரோல் சாக்லெட்

தேதி: April 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோக்கோ பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
பொடி செய்த சீனி - 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் - கால் கப்+ஒரு மேசைக்கரண்டி
மேரி பிஸ்கெட் - 13
பால் - அரை கப்


 

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். ஐசிங் சுகர் இருந்தால் அதனை பயன்படுத்தலாம். இல்லையெனில் சாதாரண சீனியை எடுத்து மாவாகப் பொடித்துக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் மேரி பிஸ்கெட்டை உடைத்துப் போட்டு, ஓடவிட்டு மாவாக பொடி செய்துக் கொள்ளவும்.
பொடி செய்த பிஸ்கெட்டுடன் கோக்கோ பவுடர், 2 மேசைக்கரண்டி பொடி செய்த சீனி சேர்த்து கலந்துகொள்ளவும்.
அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். இந்த கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும். இளகிவிடக்கூடாது. அதனால் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் 3 மேசைக்கரண்டி சீனி சேர்க்கவும்.
இதனை கட்டியில்லாமல் 5 நிமிடம் கரண்டியால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். நன்கு இளகி கிரீம் போன்று வரும். அதுவரை கலக்கவும்.
பின்னர் சப்பாத்தி கட்டையில் ஒரு வெண்ணெய் பேப்பரை(butter paper) வைத்து அதன் மேல்புறம் முழுவதும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். கோக்கோ கலந்து உருட்டி வைத்திருக்கும் உருண்டையை சப்பாத்தி கட்டையின் நடுவில் வைத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.
நான்கு பக்கமும் சமமாக இழுத்து தேய்க்கவும். தேய்க்கும் போது மிகவும் மெல்லியதாக இல்லாமலும், தடிமனாக இல்லாமலும் பார்த்து தேய்க்கவும். பின்னர் அதன் மேலே கலந்து வைத்திருக்கும் கிரீமை பரவலாக பூசி விடவும்.
அதை அப்படியே ரோல் போல சுற்றவும். பின்னர் அதன்மேலே அந்த வெண்ணெய் பேப்பரையும் சுற்றி, ப்ரீஸரில் வைத்துவிடவும்.
சில மணி நேரங்களுக்கு பின்னர் சாக்லேட் கெட்டியாகிவிடும். அதன்பின்னர் அதை எடுத்து துண்டுகளாக வெட்டவும்.
இப்போது சுவையான கோக்கோ ரோல் சாக்லேட் தயார். இது செய்வதற்கு மிகவும் எளிமையானது.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் அருமை. நாங்கள் அடிக்கடி கடையில் "றோல் கேக்"என்று வாங்குவோம் அதுதானா இது. மிகவும் இலகுவான முறையாக இருக்கிறது. எனக்கு கொஞ்சம் விளக்கம் தேவை.... வெண்ணெய் என்றால்... margarine, butter இவைதானா அல்லது பசு நெய்யா? பால் என்றால் பசுப்பால் தானே, தயவு செய்து சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆஹா அருமை..இவரது குறிப்பை நீண்டநாட்களுக்குப் பிறகு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி

பைரோஜா அக்கா அஸ்ஸலாக்கும் எப்படி இருக்கீங்க இவ்வளவு நாள் எங்கே போனீங்க இன்னும்சுவையனா குறிப்புகள் செய்து காண்பிங்க.

மேரி பிஸ்கேட்டில் இப்படி ஒரு ரெஸிபிய.

ஜலீலா

Jaleelakamal

சகோதரி அதிரா அவர்களுக்கு,

தேவையானப் பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள வெண்ணெய் என்பது Butter ஐ குறிக்கும். இங்கே பசும்பால்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் உடன் பதிலுக்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நான் உங்கள் கொகோறோல் செய்தேன். என்னிடம் கொகோ இருக்கவில்லை. ஏனைய அனைத்தும் இருந்தது. கோகோ வாங்கி வரும் வரை பொறுமையும் இருக்கவில்லை. அதனால் அதனை மட்டும் தவிர்த்து, ஏனையவற்றை உங்கள் முறையிலேயே செய்தேன். 1 1/2 மணித்தியாலங்கள் பிரீசலில் வைத்து எடுத்தேன். ஆனால் சாப்பிடும்போது களித்தன்மையாக இருந்தது. நான் ஐசிங் சுகர்தான் சேர்த்தேன். அதனாலோ அல்லது இதன் சுவை அப்படித்தான் இருக்குமோ? இதில் நான் என்ன தவறு செய்திருக்கலாம்?
மற்றபடி சுவை நன்றாக இருந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோதரி அதிரா அவர்கள் இந்த சாக்லேட் ரோல் குறிப்பை பார்த்து தான் தயாரித்ததை படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதை இத்துடன் இணைத்துள்ளேன். எங்கே எதனால் தவறு நடந்திருக்கக்கூடும் என்பதை திருமதி. பைரோஜா ஜமால் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெற்று தருகின்றோம்.

<img src="files/chocolate_roll.jpg" alt="chocolate" />

சகோதரி அதிரா அவர்களுக்கு, கொகோ ரொலில் முக்கியம் கொகோ பவுடர் தான். ஐசிங் சுகர் இல்லை என்றால் சுகர்-ஐ பொடி செய்தும் சேர்க்கலாம். நீங்கள் சப்பாத்தி போல் வளர்க்கும் போது தடிமனாக இல்லாமல் திட்டமாக வளர்க்கவும். வெண்ணெய் தடவும் போது சப்பாத்தி முழுவதும் சமமாக தடவவும். நீங்கள் கொகோ பவுடர் சேர்க்காதது தான் களித்தன்மைக்கு காரணம். இதில் முக்கியமான பொருளும் (கொகோ) இதுவே. நீங்கள் சந்தேகம் கேட்டதற்கு நன்றி.

மிக்க நன்றி, கொகோ பவுடர் சேர்க்காதது என்னுடைய தப்புதான். நான் நினைத்தேன், நிறத்திற்காகத்தான் கொகோ சேர்த்திருக்கிறீங்கள் என்று. இனி முயற்சிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பைரோஜா மேடம்
உங்க கோக்கோ ரோல் சாக்லேட் செய்துப்பார்த்தேன் ரொம்ப சூப்பரா வந்தது என்னாலயே நம்ப முடியல நாம்லா இதை செய்தோமென்ரு, வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தாங்க அவர்களிடம் இந்த ஸ்வீட்டை கொடுத்தேன் அவர்கள் இதை கடையிலிருந்து வாங்கி வந்ததுன்னு நெனச்சுட்டங்கன்னா பத்துக்கோங்களேன்.ரொம்ப சூப்பரா இருந்தது. ரொம்ப தேங்ஸ். அப்புறம் இந்த ஸ்வீட்டை ப்ரீசரில்தான் வைக்கனுமா? ஏன்னா நான் ப்ரீசரில் வைக்கம ப்ரிஜ்ஜில்தான் வைத்தேன் கொஞ்சம் மெல்டானமாதிரி இருந்தது.