சாம்பார் சாதம்

தேதி: April 24, 2008

பரிமாறும் அளவு: ஆறு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

வேக வைக்க:
அரிசி - அரை கிலோ
துவரம் பருப்பு - 200 கிராம்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - பத்து
உப்பு - இரண்டு தேக்கரண்டி
காய் வேக வைக்க:
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 200 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - பத்து
முள்ளங்கி - 1
முருங்கைக்காய் - ஒன்று (ஒரு இன்ச் அளவு வெட்டி கொள்ளவேன்டும்)
பச்சை மிளகாய் - முன்று
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஆறு தேக்கரண்டி
வெல்லம் - ஒரு பிட்டு
புளி - இரண்டு எலுமிச்சை அளவு
தாளிக்க:
எண்ணெய் - 50 கிராம்
கடுகு - 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
கறிவேப்பிலை - ஒரு கைப் பிடி
வெந்தயம் - ஐந்து
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
நெய் - 25 கிராம்
கொத்தமல்லி தழை - அரை கைப் பிடி


 

முதலில் பருப்பு அரிசி இரண்டையும் நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதில் மஞ்சள் பொடி, சின்ன வெங்காயம் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு குக்கரில் அரிசி பருப்பு சேர்த்து 4 1/2 டம்ளர் வரும் அப்படியே இரண்டு மடங்காக தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முள்ளங்கி, கேரட், பீன்ஸ் சேர்த்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பாதி வெந்து கொண்டிருக்கும் போது சாம்பார் பொடியை சேர்க்கவும்.
பிறகு புளியை கரைத்து ஊற்றவும். முருங்கைக்காயை தனியாக வேக வைத்து சேர்க்கவும்.
இப்போது வெந்த பருப்பு சாதத்தில் வேக வைத்துள்ள காயை ஊற்றி பாதி நெய்யும் சேர்த்து கிளற வேண்டும்.
கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிந்து கொட்டி மூடி நெய், கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அப்பளத்துடன் சாப்பிடவும்.
கமகமன்னு நெய் மணத்தோடு மணக்கும் சாம்பார் சாதம் ரெடி


வெளியில் ரூர் செல்லும் போது, விசேஷங்களுக்கு இதை செய்யலாம்.
முருங்கைக்காயை முதலே போட்டால் குழைந்து விடும். தனியே கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு பின்ச் உப்பு, மஞ்சள் பொடி ஒரு பின்ச் போட்டு வேக வைத்து அதை சேர்க்கனும். அப்ப அது முழுசாக இருக்கும். காய் கொஞ்சம் கல்லு மாதிரி உள்ள காய் போடனும், குழைந்து போகிற காய்கள் போட கூடாது, தனியாக செய்கிற சாம்பாருக்கு ஒகே. தேவைப்பட்டால் உப்பு கூட சேர்த்து கொள்ளுங்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பருப்போடு உப்பு சேர்த்தால் பருப்பு வெந்து விடுமா? பருப்பு வேக வைக்கும் போது உப்பு சேர்க்க கூடாதுன்னு சொல்லுவாங்கள அதான் கேட்டேன்..தெரிந்தவர்கள் கூறுங்கள்...

How r U? I had perpared sambar rice. It was really good.

Thank U.

சாம்பார் சாதம் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி பிரபா.

என்னப்பா வழங்கியர் என்ற பகுதியில் அழக உங்கள் பெயரை பொடுங்கள் பிரபா// ப்ரொபைல் போய் பார்த்து விட்டு உங்களுக்கு பதில் அளிக்க வேண்டி இருக்கு, சில நேரம் ப்ரொபைல் கிளிக் பண்னால் அடுத்து எரர் வந்து நிற்கும்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா மேடம்
இன்று உங்களின் சாம்பார் சாதம் செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.நாளை என்ன செய்யலாம் என தேடிக்கொண்டிருக்கேன்.

டியர் தனு சாம்பார் சாதம் செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
ஜலீலா

Jaleelakamal

i tried this recipe its very excellent to eat.thanks for a super recipe.my brother said it taste like hotel sambar rice

டியர் காயத்திரி சாம்பார் சாதம் செய்து பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.உங்கள் பிரதர் வாழ்த்தியதற்கும் மிக்க சந்தோஷம். இது என் அம்மாஇப்படிதான் ஸ்கூலுக்கு லன்ச்சுக்கு கொடுப்பார்கள்.

Jaleelakamal

இன்று உங்கலொட சம்பார் சாதம் பன்னினேன் ரும்ப நெல்ல இருந்தது.என் husband ரும்ப நுல்ல இருந்ததாக கூறினார்.நன்றி.

eric
சாம்பார் சாதம் செய்து பார்த்து மறக்கமால் பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal