கீரை பிரட்டல் ( மலேஷிய முறை)

தேதி: April 24, 2008

பரிமாறும் அளவு: 1 - 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - Bak Choi அல்லது Choi Sum அல்லது முளைக்கீரை - ஒரு கட்டு
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 1/4 ஸ்பூன்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்


 

கீரையை பெரியதாக நறுக்கவும். பூண்டை பொடிதாக நறுக்கவும்.
வாணலியை காய வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பூண்டை போட்டு 30 விநாடிகள் வதக்கவும்.
கீரையை கழுவி சேர்த்து அதோடு சோயா சாஸையும் ஊற்றி ஒரு தட்டு போட்டு மூடி 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
மலேஷியா கீரை பிரட்டல் ரெடி.


இந்த முறையில் கீரை செய்வது மிகவும் எளிது. மேலும் எண்ணெய் 1/4 ஸ்பூன் போதுமானது.
சோயா சாஸ் சேர்ப்பதால் உப்பு தேவையில்லை. அதிக உப்பு வேண்டுமானால் ஒரு சிட்டிகை போட்டுக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றவர்கள் கீரையை இந்த முறையில் செய்தால் ஒரு கட்டு கீரையைக்கூட எளிதாக சாப்பிட்டு விடலாம். முடி கொட்டும் பிரச்சனையும் இருக்காது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தேவா
உங்களின் இந்த குறிப்பினை படித்ததும் பிடித்து விட்டது. இந்த முறையில் செய்தால் கீரையின் வேகும் பதம் எப்படி இருக்க வேண்டும்..? கண்டிப்பாக சோயா சாஸ் சேர்க்க வேண்டுமா?

சிம்ப்ளி சுப்பர்ப் தேவா. இன்று இந்தச் சமையலை ஸ்பினாச்ல ட்ரை பண்ணேன். எல்லா விதத்துலயும் எனக்குப் பிடித்த வகையில் இருந்தது. குறிப்புக்கு மிக்க நன்றி. அவசர நேரத்திற்கு, தனியாக இருக்கும் நாட்களுக்கெல்லாம் உகந்ததாக இருக்கும். சுவையும் நன்றாக இருந்தது.

‍- இமா க்றிஸ்

உங்க பதிலுக்கு நன்றி. கீரை நன்றாக வெந்தால்தானே செரிக்கும்னு சொல்லுவாங்க. அரைப்பதம் பரவாயில்லையா?

ஹாய் யமுனா, தேவா எப்போ வருவாங்கன்னு தெரியலை. அதனால் நான் பதில் சொல்கிறேனே
இந்தவகையில் கீரை செய்யும் போது அரைப் பதம் வெந்தால் போதுமானது. கீரை க்ரஞ்சியாக இருந்தால் சுவையாக இருக்கும். சோயா சாசும் பூண்டும்தான் இதன் சுவையே! உங்களுக்கு கீரை அரை வேக்காடாக இருந்தால் பிடிக்காது என்றால் முழுமையாக வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆஹ்!!! இவ்வளவு நாளா பாக் சாய் வைத்து என்ன செய்வதென்று யோசித்திருக்கிறேன்....

அடுத்த வார காய்கறி லிஸ்ட்ல் சேர்த்துவிட்டேன்....

செய்து விட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதில் வெங்காயம் கொஞ்சம் சேர்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் நெத்திலி சேர்து கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

நன்றி..
பிரேமிதா... மலேசியா

ஹாய் தேவா
கீரை பிரட்டலில் சோயா சாஸ் தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஓய்ச்ட்டர் சாஸ் பயன்படுத்தலாமா? இல்லை எனில் வேறு என்ன சாஸ் பயன்படுத்தலாம்......

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

பிஷ் சாஸ், சோயா சாஸ் சேர்த்தும் பயன்படுத்தலாம். ஆய்ஸ்டர் சாஸ் மட்டும் சேர்த்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. வேண்டுமானால் பிஷ் சாஸுடன் சிறிதளவு சேர்த்து செய்யலாம்.

ஹாய் தேவா
கீரை பிரட்டலில் சோயா சாஸ் தான் பயன்படுத்த வேண்டுமா? அல்லது ஓய்ச்ட்டர் சாஸ் பயன்படுத்தலாமா? இல்லை எனில் வேறு என்ன சாஸ் பயன்படுத்தலாம்......

உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்