பேச்சுலர்ஸ் துவரம்பருப்பு தோசை

தேதி: April 24, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - ஒரு கோப்பை
பச்சரிசி - அரைக்கோப்பை
பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
துருவிய கேரட் - அரைக்கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
ஆப்பச்சோடா - கால் தேக்கரண்டி
எண்ணெய் தோசை சுட - கால் கோப்பை


 

பருப்பு மற்றும் அரிசியை சுத்தம் செய்து வெந்நீரைச் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
பிறகு அதில் இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லியை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு எல்லாத்தூளையும் போட்டு சோடாவையும் சேர்த்து நன்கு கலக்கி அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
பிறகு கடைசியில் கேரட் துருவலைச் சேர்த்து கலக்கி மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.


தோசை வார்ப்பதில் பிரச்சனை இருந்தால் ஒரு மேசைக்கரண்டி மைதா அல்லது கடலை மாவைச் சேர்த்து கலக்கி சுடவும்.

மேலும் சில குறிப்புகள்