காஸ்மெட்டிக்ஸ் உபயோகம்

காஸ்மெட்டிக்ஸ் உபயோகம்பற்றி சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கிறேன்.
1) முகத்திற்கு போடும் ஸ்க்ரப்பை அதிக பட்சம் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்தால் போதுமானது. அடிக்கடி உபயோகித்தால் சருமம் பாதிக்கப்படும். மிருதுவான சருமம் அதன் மென்மையை இழக்கக்கூடும். நமது முகத்தில் மேல் புறத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்கை நீக்கவே ஸ்க்ரப்பர் உபயோகப்படுத்துகிறோம். எனவே அடிக்கடி உபயோகப்படுத்தினால் சருமத்தின் லேயர் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

2) ப்ளீச்சிங் மாதம் ஒரு முறை செய்தால் போதும். முகத்தில் உள்ள முடியின் நிறம் மாறும்போது செய்தால் கூட போதும். முடிந்தவரை ஹெர்பல் ப்ளீச்சிங் செய்வது நல்லது. ப்ளீச்சிங், பேஷியல் போன்றவற்றை முடிந்தவரை சாயங்கால அல்லது இரவு வேளைகளில் செய்து கொள்வது நல்லது. ஏனெனில் அதற்கு பிறகு சருமத்தில் சோப், க்ரீம் போன்றவை உபயோகப்படுத்தாமலும், சூரிய ஒளி படாமல் வைத்திருப்பதும் அவசியம்.

3) க்ளென்சிங் மில்க்கை அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம். அதற்கு பதிலாக ஆயில் ப்ரீ அல்லது மற்ற தண்ணீரைப் போன்று நிறமற்ற க்ளீனிங் சொல்யூஷனை உபயோகிக்கலாம்.

4) இரவு உறங்கும் முன் முகம் கழுவிவிட்டு தூங்கினால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும். மிகவும் மைல்டான க்ரீமை வேண்டுமானால் இரவு உபயோகிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஸ்ட்ராங்கான க்ரீமை உபயோகிக்காதீர்கள்.

5) மேக்கப்பை அகற்ற பேபி ஆயில் அல்லது சிறந்த பிராண்டுகளில் கிடைக்கும் மேக்கப் ரிமூவரை உபயோகப்படுத்துங்கள். இப்போது கிடைக்கும் காஸ்மெட்டிக்ஸ் முக்கியமாக ஐலைனர், காஜல், லிப்ஸ்டிக் போன்றவை வெறும் சோப் மட்டும் கொண்டு கழுவினால் போகாது.

6) அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும் என்று நினைப்பவர்கள் சோப் மற்றும் பேஸ் வாஷ்க்கு பதிலாக மைல்டான பேபி லிக்விட் சோப்பை உபயோகிக்கலாம். முகம் வறண்டு போகாது.

7) கண் சம்பந்தப்பட்ட மேக்கப் அயிட்டங்களை 6 மாதத்திற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. காலாவதி ஆகும் தேதி பார்த்து உபயோகிப்பது மிகவும் அவசியம். இது லிப்ஸ்டிக் போன்ற மற்ற காஸ்மெட்டிக்ஸ்க்கும் பொருந்தும்.

8)கண்களுக்கு உபயோகப்படுத்தும் பன்னீரை தெரியாத பிராண்டுகளில் வாங்காமல் Dabur போன்ற தரமான பிராண்டுகளில் வாங்குவது நல்லது.

9) இரவு வாயைக் கொப்பளித்துவிட்டு அல்லது பல் விளக்கிவிட்டு தூங்குவது பல்லில் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கும். அதேபோல் வாரம் ஒரு முறை Colgate Professionl Clean Tooth Paste போன்றவை உபயோகித்து பற்கள், ஈறுகளை நாமே வீட்டில் சுத்தம் செய்துக் கொள்ளலாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உபயோகித்தால்கூட போதுமானது.

10) உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க ஹேர் ரிமூவிங் க்ரீமைவிட வேக்சிங், எபிலேட்டர் போன்றவை நல்ல பலன் தரும். Anne French, Veet போன்ற ஹேர் ரிமூவரில் ஒரு வித ஸ்மெல் வரும். நிறைய பேருக்கு அது பிடிக்காது. அதற்கு பதிலாக ஸ்மெல் இல்லாத ஹெர்பல் ஹேர் ரிமூவிங் க்ரீமை உபயோகப்படுத்தலாம். ரேசரை கை, கால்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. முடியின் வளர்ச்சியும் அதிகமாகி, கை, கால்களில் மென்மையும் போய்விடும். பிரெக்ணண்ட் ஆக இருப்பவர்கள் அல்லது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் முடிந்தவரை அந்தரங்க உறுப்புகளுக்கு ஹேர் ரிமூவிங் க்ரீமை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு பதிலாக எபிலேட்டர், வாக்சிங் ( அதிக வலி என்று நினைத்தால் அது கூட வேண்டாம்), ரேசரை உபயோகிக்கலாம்.

11) சில பெண்களுக்கு அவர்களின் வாய் துர்நாற்றத்தை பற்றியும், உடல் துர்நாற்றத்தைப் பற்றியும் எந்த வித விழிப்புணர்வும் இருக்காது. நம்மை நாமே இந்த விஷயத்தில் சோதித்துக் கொள்வது அவசியமாகிறது. வாய் துர்நாற்றத்திற்கு பல்லில் இருக்கும் பிரச்சனைகள் மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கும். அவர்கள் மவுத் வாஷ் போன்றவற்றை மட்டும் உபயோகிப்பதை விடுத்து டாக்டரிடம் சென்று தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது. உடல் துர்நாற்றத்திற்கு Roll On, Body Spray, Perfume என்று பல இருந்தாலும் நமது சருமத்திற்கு உகந்தததா என்று பார்த்து வாங்குவது நல்லது. சிலருக்கு Roll On ஒவ்வாமை ஏற்படுத்தும். முக்கியமாக Underarms ல் ஹேர் ரிமூவ் பண்ண நாட்களில் Roll On, Body Spray போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் அன்று பெர்பியூம், டால்கம் பவுடர் போன்றவை உபயோகப்படுத்துவது நலம். என் பிரெண்ட் ஒருத்திக்கு அப்படி ரோல் ஆன் உபயோகித்ததில் Under Arms முழுதும் அலர்ஜி வந்து மிகவும் கஷ்டப்பட்டாள். வாய் துர்நாற்றத்திற்கு மவுத் வாஷ் மட்டுமின்றி, Fresh Strips, Spray உபயோகிக்கலாம். Mentos, Tit bits பிடிக்காதவர்களும் மேலே குறிப்பிட்டவற்றை உபயோகிக்கலாம்.

12) நெயில் பாலீஷ் போடும் முன் பேஸ் கோட்டிங் என்று கடைகளில் கிடைக்கும். தண்ணீர் போன்று நிறமற்று இருக்கும். இதனை ஒரு கோட்டிங் கொடுத்து , பிறகு நெயில் பாலீஷ் போட்டு, அதன் மேல் மீண்டும் ஒரு முறை கோட்டிங் கொடுத்தால் மிகவும் அழகாக நீண்ட நாட்களுக்கு நெயில் பாலீஷ் உரியாமல் இருக்கும். மெனிக்யூர் அன்றுதான் செய்துக் கொண்டதைப் போல் புதிதாக இருக்கும். கால்களுக்கும் அவ்வாறே செய்யலாம்.

13) லிப் லைனர் இல்லாமல் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ் ஷேப் நன்றாக எடுப்பாக தெரியாது. லிப் லைனர் சிறிது டார்க்காகவும், அதைவிட ஒரு ஷேட் குறைத்து லிப்ஸ்டிக்கும் போட்டால் நன்றாக இருக்கும். முகம் டார்க்காக இருப்பவர்கள் லைட் ஷேடுகளை தவிர்ப்பது நலம்.

14) நகப்பாலிஷை எடுக்க செய்ய உதவும் நெயில் பாலீஷ் ரிமூவர் நல்ல தரமானதாக இல்லாவிடில் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே வாங்கும்போதே தரமானதாக வாங்கினால் பிறகு ஸ்கின் டாக்டர் கன்சல்டேஷனுக்கு பணம் செலவழிக்காமல் இருக்கலாம். இது எல்லாவித காஸ்மெட்டிக்ஸ்க்கும் பொருந்தும்.

15) முகத்தை க்ளீன் செய்யும்போதே தினமும் கழுத்து, Under Arms பகுதிகளையும் க்ளென்சிங் மில்க் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இதனால் அந்த இடங்கள் கறுத்துப் போகாமல், அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

ஹேர் மாஸ்க் என்றால் என்ன... அதனை எப்படி போடுவது

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நன்றி இலவீரா. நாம் தலை முடிக்கு தடவும் வெந்தயம் கூட ஒரு வகை ஹேர் மாஸ்க் தான். முகத்தில் நாம் தடவிக் கொள்ளும் கடலை மாவு, முல்தானி மட்டி போன்றவற்றை எப்படி நாம் பேஸ் மாஸ்க் என்கிறோமோ அதே போல் தலையில் தடவும் மருதாணி, தயிர், ஆலிவ் ஆயில் போன்றவற்றையும் ஹேர் மாஸ்க் என்று சொல்லலாம். எப்படி பேஸ் மாஸ்க் ரெடிமேடாகவும் கிடைக்கிறதோ அதேபோல் தலைக்கும் ஹேர் மாஸ்க் கிடைக்கிறது. ஹேர் மாஸ்க்கை தடவிக் கொண்டப் பிறகு ஷவர் கேப் போட்டுக் கொண்டால் வேறு எங்கேயும் பரவாமல் தலையில் ஊடுருவி நல்ல பலன் கிடைக்கும்.

பதிலுக்கு நன்றி....தேவா

இங்கே கடைகளில் கிடைக்கும் ஹேர் மாஸ்க் போட்டு பார்க்கிரேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் என்னுடைய பதிவுகளில் சில இடங்களில் Steeves ஸ்க்ரப்பர் என்று குறிப்பிட்டிருக்கிறேன். அப்படியே சொல்லி பழக்கப்பட்டதால் எழுதும்போதும் கவனிக்காமல் விட்டு விட்டேன்.அதனை St.Ives என்று எழுதியிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.

இலவீரா, தாங்கள் முடிந்தவரை வீட்டில் தயாரிக்கும் ஹேர் மாஸ்க்கை உபயோகியுங்கள். வெளியில் கிடைக்கும் பிராண்டுகள் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ளாது. ஒவ்வாமை இருக்கிறதா அல்லது உபயோகிக்கும்போது முடி கொட்டுதல் இருக்கிறதா என்று கவனித்து உபயோகியுங்கள்.

Thanks for letting me know abt the hairmask risk.
I hv a nearly normal skin.. But only sometimes I get a dry patch here and there. It wont go if i use regular face moisturizer. Can you please let me know how to get rid of that

Thanks
ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் இலவீரா, தங்களது ஸ்கின் என்னுடைய ஸ்கின்னைப் போன்றது என்று நினைக்கிறேன். நார்மலான் ஸ்கின்னைப் போன்றே இருக்கும். ஆனால் சில சமயங்களில் ட்ரையாக தோன்றும். அப்போது பேபி ஆயிலை இரவு உறங்கும் முன் அல்லது குளியலுக்கு முன் தடவுங்கள். சரியாகிவிடும். வெளியில் செல்வதாக இருந்தால் பேபி மாய்ச்சுரைசிங் லோஷன் தடவுங்கள். தினமும் தடவ வேண்டிய அவசியமில்லை. சீக்கிரம் சரியாகிவிடும். இதற்கு இன்னொரு மாற்றாக வாசலின் கூட உபயோகிக்கலாம்.

ஹாய் தேவா, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. அவை முகத்தில் வறண்ட சருமமா? அல்ல எண்ணை சரும்மமா? என்று எப்படி சோதிப்பது. அதே போல் முடி-யிலும் எப்படி சோதிப்பது. நன்றி. நூர்

ஹாய் தேவா உங்க எல்லா குரிப்புகளும் ரொம்ப பயன்யுள்ளது. நன்றி. நான் விஜி ரொம்ப நாளக்கு முன்பு உங்களிடம் கேள்வி கேட்டுருந்த்தேன். ஹேர் டை பற்றி, எனக்கு 2 வெள்ளய் முடி வந்துள்ளது. அதுவும் பாதி முடி மட்டும் தான் வெள்ளை. தெரிந்தால் சொல்லுங்க.

வீட்டிலேயே பெடிக்யுர்,மென்க்யுர் பற்றி சொன்னால் உபயோகமாக இருக்கும். என்னால் பார்லருக்கு ரெகுலராக போக முடிய்ல்லை. குழந்தைக்ளோடவே சரியாக நேரம் போதவில்லை. ஆதலால் தான் உங்குளுக்கு டைம் கிடைக்கும் போது சொல்லுங்க. என்னோட தோழியின் மக்ள் 9 வயது அவளுக்கு பொடுகு தொல்லை. அதற்க்கு வீட்டு வைத்தியம் எளிய முறையில் சொல்ல முடியுமா.

ஹாய் நூர்(உங்கள் முழு பெயர் நூர்ஜஹானா? எனது சிறு வயது தோழியின் பெயர்),நமது முகத்தில் ஒரு டிஷ்யூ வைத்து ஒற்றும்போது அது கொஞ்சம் ட்ரான்ஸ்பரண்டாக ஆகினால் ( எண்ணெய் டிஷ்யூவில் ஒட்டியிருப்பது நன்றாக தெரியும்) அது எண்ணெய் சருமம் என்று கொள்ளலாம். இந்த டெஸ்ட்டினை முகம் கழுவி விட்டுப் பார்க்காமல் இரவு உறங்கும் முன் முகம் கழுவாமல் அல்லது காலையில் எழுந்ததும் பார்த்தால் தெளிவாக அறிய முடியும். நார்மல் ஸ்கின்னிற்கு லேசாக எண்ணெயும், ட்ரை ஸ்கின்னிற்கு அப்படி எதுவும் இல்லாமலும் இருக்கும்.

தலை முடியைப் பொறுத்தவரை தலை குளித்த அடுத்த நாள் முடி எண்ணெய் வைக்காமலேயே மீண்டும் எண்ணெய் வைத்தது போல ஆகிவிட்டால் அது எண்ணெய்ப் பசை நிறைந்த தலை. இது பெரும்பாலும் குறைந்த முடி உள்ளவர்களுக்கு இருக்கும். தலை முடியின் தன்மையை ஸ்கால்ப்பை வைத்தே கணிக்க முடியும். மண்டை(ஸ்கால்ப்) மிகவும் வறண்டிருந்தால் பொடுகு வருவதை வைத்தே முடி வறண்டது என்று கணிக்க முடியும். இதற்கு இடைப்பட்ட முடியை நார்மல் முடி என்று சொல்லலாம். அதிக முடி இருந்து வறண்டும் இருந்தால் எண்ணெய் ஒரு நாள் வைத்து அடுத்த நாள் பார்த்தால் எண்ணெய் வைத்தது போன்றே தெரியாது. இவர்களுக்கு பொடுகுத் தொல்லை எளிதாக வரும்.

ஹாய் விஜி, எப்படி இருக்கீங்க? நீங்க கேட்டிருக்கும் கேள்விகளுக்கு என்னால் முடிந்த பதில்களை இங்கே தருகிறேன்.சந்தேகம் இருந்தால் கேளுங்கள். தலைக்கு ஹேர் டை தடவுவதுப் பற்றி என் அம்மாவுக்கு எல்லா ட்ரீட்மெண்ட்டும் ட்ரை செய்து ஒரு சில விஷயங்கள் நன்றாக தெரியும் ( என்ன செய்யறது என் அம்மாதான் பாவம். எப்பவும் என்கிட்ட மாட்டிப்பாங்க). தலைக்கு மருதாணி அரைத்துப் போடுவது, கய்யாந்தரை(கரிசலாங்கண்ணி), நெல்லிக்காய், கரு வேப்பிலை அரைத்துப் போடுவது போன்ற இயற்கை ட்ரீட்மெண்ட்டுகள் இனி வரப் போகும் நரையை வேண்டுமானால் கட்டுப் படுத்தும். ஆனால் ஏற்கனவே வந்த நரைக்கு அது தீர்வாகாது. மாற்றவும் முடியாது. நீங்கள் ஹெர்பல் ஹேர் டைகளை பயன்படுத்தலாம். கொஞ்சம் தான் நரை என்றால் Clairol, L'oreal போன்றவற்றில் Touch Up Dye கிடைக்கும். அது முன்புறம் காதோரம் மட்டும் உள்ள் நரை முடிக்கு எளிதாக அப்ளை செய்ய ஏற்றது. உட்பக்கம் மற்றும் பெரும்பாதி நரைக்கு பர்மணெண்ட் கலரிங், கலர் ஸ்டே போன்றவை உபயோகப்படுத்தலாம். L'oreal, Garnier, Godrej போன்ற பலவித பிராண்டுகளில் கிடைக்கும் டைகளை உபயோகப்படுத்தலாம். பிளாக் மட்டுமின்றி, டார்க் பிரவுன், பர்கண்டி போன்ற கலர்களும் இந்தியன் நிறத்திற்கு நன்றாக இருக்கும். இன்னும் எப்போதும் போடும் டையோடு டார்க் வயலெட் போன்ற நிறங்களை நடுவில் ஒரு இழை முடிக்கு மட்டும் அங்கங்கே அப்ளை செய்தால் மாடர்ன் லுக்காகவும் ஷைனிங்காவும் தெரியும். இந்த டிப்ஸ் அத்தனையும் உங்களுக்கு இப்போது தேவைப்படாது. இருந்தாலும் எழுதி இருக்கிறேன்.

பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவற்றை படங்களுடன் வெளியிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது முடியாவிட்டாலும் அதற்கு தேவைப்படும் சாதனங்களையாவது படத்துடன் விளக்க வேண்டும். அப்போதுதான் தெளிவாக புரியும். பொடுகுத் தொல்லைக்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும். தலையில் தடவி ஊறவைத்து பிறகு குளிக்க வேண்டும். ஆனால் அப்போது அரிப்பு, எரிச்சல் போன்றவை இருக்கும். சின்ன பெண்களுக்கு தாங்க முடியாது. அதனால் தயிருடன் மிளகு அரைத்து தடவலாம். அது ஓரளவுக்கு எரிச்சல் தராது. பலனும் கிடைக்கும். முக்கியமாக தலை குளித்தப் பிறகு போர்வை, தலையணை, துண்டு, சீப்பு என்று அனைத்தும் புதிதாக மாற்ற சொல்லுங்கள். அப்போதுதான் மீண்டும் பரவாது.

மேலும் சில பதிவுகள்