அடுத்து என் குறிக்கோள்....100 குறிப்பு

இங்கே பலரும் நூற்றுக்கும் மேலான சமையல் குறிப்புகள் கொடுத்து இருக்கிறீர்கள்.... ஆனா .... நான் உங்களுடைய குறிப்புகளில் குறைந்த பட்சம்.. 100 செய்து பார்க்க போகிறேன்....

யாராவது என்னுடன் சேர விருப்பமா...

விருப்பம் எனில்... இங்கே உள்ள குறிப்புகளை செய்து விட்டு.. பின்னூட்டம் அனுப்புங்கள்.

குறிப்பு அளித்தவர் எண்ணிக்கை வைத்துக்கொண்டு.. வார இறுதியில் எனக்கு அல்லது அட்மினுக்கு அனுப்புங்கள்.

அறுசுவையில் இருக்கும் குறிப்புகளை செய்தாலே.. என் வாழ்நாள் முழுவதும் repeatஏ இருக்காது.
I dont beleive in reinventing the wheel. I feel that this will also encourage the members who have given recipes anywhere from 1 and close to 500.

Please join in this project.
By July 4th atleast 50 recipes new and to a maximum of 100 recipes will be cooked in my home.

ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்டி இருக்கீங்க இலா? அது 100 குறிப்புகள் நீங்கள் சொல்வதை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. கொஞ்சம் tubelight நான் விளக்கமா சொல்றீங்களா? நானும் இதில் பங்கெடுத்துப்பேன்ல.

This means. I will be cooking 100 recipes from the கூட்டாஞ்சோறு and give feedback to the people who gave the recipes.

It is hard to give the recipes and it is even harder to try all those.

Please let me know if i explained myself right

I am doing good... been awake since 4 am... i hope you are doing good

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ya i am doing good, thank u ila. ok ila i understood what u said. i am also try to follow ur idea. this idea is very good. if we gave the feedback of their recipe they will happy.

இலா 100 இல்லாட்டியும் தினம் 1 என்ற அளவில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்..வாரம் கூட்டாஞ்சோறு என்றால் கூட பிறகு ஆவட்டும் என்று அப்படியே போய் விடும்..தினம் 1 அல்லது 2 குறிப்பு என்று கொடுத்தால் பலரும் செய்து பார்ப்பார்கள்..மாதம் 30 குறிப்புக்கு பின்னூட்டம் கிடைக்கும்...நான் சொல்வது ஓ கெ வா

என் ஐடியாவும் அதுவே... 3 மாத்தில் 100 நிச்சயமாக என்னால் முடியும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உங்கள் விடா முயற்சிக்கு நானும் துணை வருகிறேன். ரேக் எவே வேண்டாம் வீட்டில் சமைக்க சொல்லுறீங்கள். ஆனால் என்னால் தினம் ஒரு குறிப்பு முடியாது. ஏனெனில் நாங்கள் சனி, ஞாயிறு , விடுமுறை தினங்களில் பெரும்பாலும் வெளியில்தான். அல்லது நண்பர்களுடன் மாறி மாறி விருந்து. அதனால் என்னால் முடிந்தது வாரத்தில் 3 அல்லது நான்கு குறிப்புகள்தான். முடிந்தால் அதிகம் செய்கிறேன்.

ஆனால் இந்தவாரம் இன்னாருடைய குறிப்பிலிருந்து மட்டும் செய்யுங்கள் அப்படி ஒரு முறை வைத்தால் இன்னும் நல்லதே. ஏனெனில் எல்லோருடைய குறிப்புகளையும் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

இன்றே ஆரம்பித்து விட்டீங்களா?
நாங்கள் வெளியே போய் இப்போதான் வீட்டுக்கு வந்தோம். இன்று என் ஹஸ்.. கேட்க கேட்க நான் வெளியில் எடுக்க விடவில்லை, வீட்டில் சமைக்கிறேன் என்று சொல்லி இப்போதான் குழைசாதம் & கத்.பொரிகறி & பொரியல் செய்தேன்.
எதுவென்றாலும் தெரியப்படுத்துங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அறுசுவைக்கு பங்களிப்பவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் நீங்கள் கொடுத்துள்ள இந்த பதிவிற்கு மிக்க நன்றி. இது சம்பந்தமாக நீண்ட நாட்களுக்கு முன்பு நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். அதனை மீண்டும் இங்கே தெரிவிக்கின்றேன்.

அறுசுவையை பார்த்து நீங்கள் செய்யும் எந்த ஒரு உணவினையும், உங்களிடம் டிஜிட்டல் கேமரா இருப்பின், படம் எடுத்து அனுப்புங்கள். இயன்றால் ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுங்கள். இயலாத பட்சத்தில் தயாரான உணவின் இறுதி படம் எடுத்து அனுப்புங்கள். அதனை அந்த குறிப்பின் கீழ் வெளியிடலாம். இது மற்றவர்களுக்கும் பயன்படும். அதுமட்டுமன்றி, குறிப்புகள் கொடுத்தவர்களுக்கும் நீங்கள் உண்மையிலேயே முயற்சி செய்திருக்கின்றீர்கள் என்பது தெரியவரும். படத்தினை பார்த்து அவர் குறிப்பில் கொடுத்துள்ளபடி செய்துள்ளீர்களா, அல்லது ஏதேனும் தவறுகள் உள்ளனவா என்பதையும் தெரிவிக்க வசதியாக இருக்கும்.

அடடே அப்படியா..எனக்கு நேற்று கூட படம் எடுத்து அனுப்பலாமா என்று தோன்றியது உங்களுக்கு அனுப்பி சிரமமாகுமே என்று எடுக்கவில்லை.
இனி எடுத்து அனுப்பிவிடலாம்.

நீங்கள் சொல்வது உண்மையிலேயே நல்ல முறைதான். நிட்சயம் செய்திருக்கிறார்கள் என்ற திருப்தி, குறிப்புக் கொடுத்தவருக்கு ஏற்படும். என்னால் முடிந்தவரை இனிமேல் அப்படிச் செய்கிறேன்.

பதிலை இங்கே கொடுத்துவிட்டு, படத்தை உங்களுக்கு அனுப்ப வேண்டுமா? அல்லது எல்லாமே உங்களுக்கே அனுப்புவதா? விளக்கமாகச் சொன்னால் அனைவருக்கும் பயன் படும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்