ஆங்கிலத்தில் பேச உதவி செய்யவும

ஆங்கிலத்தில் பேச உதவி செய்யவும்
நான் அறுசவைக்கு புதுசு என்ன பற்றி சொல்லனும் என்றாள் என்க்கு படிப்பு அறிவு கொஞ்சம் கம்மி. இப்ப நான் இருப்பது ஹைதராபாத்தில். 10 பாதியில் திருமாணம் ஆகிவிட்டது, ஆங்கிலம் என்க்கு பேச வராது. என் கணவர் இங்கு ஒரு கம்பேணியில் வேளை செய்கிறார். நான் அவங்க தோழர்கள் யாரும் வந்தால் எனக்கு ஆகிலத்தில் பேச தெரியவில்லை. அவங்க பேசுவது எஅன்க்கு புரியுது ஆனால் பதி சொல்ல தெரியவில்லை. கல்யானம் அகி 6 மாசம் ஆவதல் எனக்கு ஆங்கில்ம் பேச தெரியாது என்று சொல்ல ஒரு மாதிரியாக இருக்கு. ப்ளீஸ் யாரவது எஅக்கு சில ஆங்கில வார்த்தைகள் சொல்லி தரவும்.
போன் வந்தால் என் கண்வர் வீட்டில் இல்லை கொஞ நேரம் கழித்து கால் பண்னுங்க என்று எப்படி சொல்லனும்?
வந்தவ்ர்களிடம் எப்படி பேசனும் என்று சொல்லவும

கவலை படாதீங்க.... உங்களுக்கு ஆர்வம் இருக்கு.... முயற்சி செய்ய தயாரா இருக்கீங்க.... நல்லது,... பாராட்டுக்கள்...

முதல் படி: 30 நாட்களில் ஆங்கிலம் புக் வாங்கிக்கொள்ளுங்கள்...
படி 2: ஒரு 80 பக்க நோட் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்க...

உங்களுக்கு நன்கு தெரிந்த உரையாடல்களை தங்கிலீஸில் எழுதி வையுங்கள்

ஒரு நாளைக்கு 1 மணி நேரம்மாவது இதற்க்கு செலவு பண்ண வேண்டும்.

கீழ்கண்ட இணையதளதில்
http://www.learn-english-online.org/

தினமும் ஒரு பாடம் படித்துவிட்டு உங்கள் நோட்டில் எழுதிக்கொள்ளுங்கள்...

வேறு கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரொம்ப நன்றி நான் இப்ப வீட்டில் சும்ம தான் இருக்கேன் நீங்கள் தந்த முகவரி மூலம் என் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்வேன். எதாவது சந்தேகம் வந்தாள் நிச்சயம் உங்களுடன் பகிர்ந்துக் கொள்வேன்.
(இந்த கேள்வி கேக்கவே நான் ரொம்ப வெக்கபட்டேன், பல விசயங்களை இங்க பகிர்ந்து கொள்வதால் தான் நான் கேட்டேன்)

sangeeram

நான் 8 ம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. நானோ வகுப்பு தலைவி. எனக்கு பிடித்த சந்திரலேகா மிஸ் .. ஆங்கில மீடியம் வகுப்பு எடுப்பார்கள்... எதாவது கேட்க வேண்டும் என்றால்... தமிழ் வாக்கியத்தை,... அப்படியே ஆங்கிலதில் சொல்லுவேன். ஆனால் முயற்சி செய்து இப்பொழுது என் சக பணியாளர் என்னை இன்டர்வியு செய்து நான் வேலைக்கு சேர்ந்த பொழுது... சொன்னது " நீ சொன்ன பிறகு தான் நீ இந்தியன் என்று தெரியும் " என்றார்....

பழக பழக தான் மொழி.

"பிராக்டிஸ் மேக்ஸ் பெர்பெக்ட்"

Good Luck
ila

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்புள்ள சங்கீதாராம்...
இதில் வெட்கப்பட ஒன்னும் இல்லை...
உங்கள் ஆங்கில அறிவை வள்ர்த்துக்கனும்னு நினைத்து ஆர்வத்துடன் கேட்பது உங்கள் வெற்றியின் முதல் படி....நிச்சயம் உங்களுக்கு முழு வெற்ரி கிட்டும் அதற்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
இளவீரா அருமையான சைட் தந்து இருக்காங்க..அதன்படி முயற்ச்சி பன்னுங்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சங்கீதாராம்..இதில் வெட்கப்பட எதுவும் இல்லை தமிழ் போல் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவு தான்.
பிறந்த இரண்டு குழந்தைகளை வெளி உலகம் காட்டாமல் தனியாக ஒரு அறையில் அடைத்து வைத்து 10 வருடம் கழித்து பார்த்தால் அவர்களும் நம்மைப் போலவே உரையாடுவார்களாம்..ஆனால் ஒரு மொழியை அவர்களாகவே உருவாக்கி இருப்பார்களாம்..இவ்வளவு தான் மொழி..ஒருவர் அடுத்தவருடன் உரையாட உதவுவது மொழி...அதில் இலக்கணம் பின்னே தான் வரும்..முதலில் தப்பு தப்பாக இருந்தாலும் அதனை சரளமாக பேச மனசு இருந்தால் போதும்.
முதலில் நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.அதில் உங்களை அறியாமல் நீங்கள் ஆங்கிலம்கற்றுக் கொள்வீர்கள்
இரண்டாவது வீட்டில் இருப்பதாக இருந்தால் தினம் ஏதாவது ஜோக்கேர்ஸ் பார்க்கில் நடக்க செல்லுங்கள்..மெல்ல யாராவது ஒருவருடன் ஒட்டுங்கள்...அதுவும் ஆங்கிலம் பேசுபவருடன் சேருங்கள்...2 பேரிடம் மானம் போனாலும் பின்னாளில் 200 பேருக்கு முன் நாமும் சரளமாக ஆங்கிலம் பேசலாம் என்பதை நினைவில் கொண்டு வாயில் என்னென வருதோ அதெல்லாம் பேசுங்கள்..க்ராமர் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம்.
இது இரண்டும் செய்தால் அடுத்த 09 ஏப்ரிலுக்குள் சரளமாக பேசுவீர்கள் என உறுதியாக சொல்கிறேன்.

பி.கு: நான் படித்தது ஒரு சாதாரண பள்ளியில்...என்னுடன் படித்த தோழியர் ஒருவருக்கும் ஆங்கிலத்தில் பேசவராது..ஆனால் நான் சுயமாக புத்தகங்கள் படித்தும்,தானாக மனதுக்குள் எல்லா தமிழ் வார்த்தைகளையும் மனதுக்குள் ஆங்கிலத்தில் சொல்லிப் பார்ப்பேன்..இப்பொழுது என்னால் நன்றாக பேசவும் முடியும் எழுதவும் முடியும்.
என்னால் முடிந்தால் உங்களால் முடியாமல் இருக்காதில்லையா..இதற்கு படிப்பு தேவையில்லை முயற்சி போதும்

சங்கீதா அவர்களுக்கு இதே போன்று கேள்வியை ஏற்கனவே ஒருவர் மனோகரி அவர்களிடம் கேட்டிருந்தார். அதற்கு மனோகரி அவர்கள் மிக அழகாக விளக்கியிருந்தார். அதை அப்படியே இங்கு கீழே பேஸ்ட் செய்துள்ளேன். இங்கு பல சகோதரிகள் சொல்லியுள்ளது போல் உங்கள் முயற்சியில் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்

இதோ மனோகரி அவர்களுடைய பதில் :

குடும்பம், உறவினர்கள், பள்ளிக்கூட தோழிகள் என்று சிறிய வட்டத்திற்குள் இருந்து விட்டு திடீரென கல்யாணம், வேற்று மனுஷர்கள், அதிலும் வேற்று மாநிலம் என்ற சூழ்நிலை வந்த போது மொழிப் பிரச்சனை எனக்கும் இருந்தது.

ஆனால் பிறகு தான் தெரிந்தது பிரச்சனை மொழியில் அல்ல எனக்கு தான் என்று. அதை இனங் கண்டுக் கொண்ட பிறகு அந்த பிரச்சனை நாளடைவில் சரியாகிப் போனது.

சரி இனி உங்க பிரச்சனையை பார்க்கலாம். ஆங்கிலத்தில் இவ்வளவு நன்றாக எழுத படிக்க தெரிந்த உங்களுக்கு அதில் பேசுவதில் தான் பிரச்சனை என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையிலேயே நமக்கு இருக்கும் தயக்கமும், கூச்சமும், தான்.

பொதுவாக எல்லோருக்குமே ஆங்கிலத்தில் தவறில்லாமல் பேசுவது அவ்வளவு சுலபம் அல்ல தான். ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியையும் எழுத படிக்க சுலபமாக இருக்கும். ஆனால் அதில் பேசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.அதற்கு முதல் எதிரியான தயக்கத்தைப் போக்கி விட்டால் பிறகு மற்ற மொழிகளில் உரையாடுதல் சுலபமாகிவிடும்.

தாய் மொழியில் சரியாக பேச தெரியாமல் போனால் தான் கவலைப்பட வேண்டும். ஆகவே ஆங்கிலத்தில் தவறாக பேசிவிடுவோமோ என்ற தயக்கத்தை விட்டுவிட்டு நீங்கள் எப்படி பேசுகின்றீர்கள் என்பதை விட என்ன பேசுகின்றீர்கள் என்பதில் தான் கவனம் செலுத்துவது நல்லது என்பது என் கருத்து.

மேலும் ஆங்கிலத்தை ஏதோ பிழையில்லாமல் பேசவேண்டும் என்ற சிந்தனையோடு பேசக்கூடாது. தவறாக பேசுவதை யாரும் கண்டுக்கொள்வதில்லை, ஆனால் உரை நடையில், வார்த்தைகளின் உச்சரிப்பை அதாவது pronunciation அழகாக இருந்தால் நிச்சயம் எல்லோரையும் கவர்ந்து விடமுடியும்.

அதை வளர்த்துக் கொள்ள:
1.ஆங்கில கதை புத்தகங்கள் நிறைய படியுங்கள்.
2.ஆங்கில சினிமாக்கள் நிறைய பாருங்கள்.
3.ஆங்கில டீவி நிகழ்ச்சிகளில் முக்கியமாக உரையாடல்கள் போன்ற டாக் ஷோக்களை உன்னிப்பாக கவனியுங்கள்.
4.அதைப் போல் டிவியில் செய்தியாளர் செய்திகளை வாசிப்பதுப் போல் நீங்களும் செய்தி தாள்களை சத்தமாக வாசித்து பிராக்டீஸ் செய்யுங்கள்.
5.வீட்டிற்கு வரும் விருந்தினரிடத்திலும் ஆங்கிலத்தில் முதலில் சிறு சிறு உரையாடல்களாக பேசி பழகிக் கொள்ளுங்கள்.
6.எப்பொழுதும் உங்களுடன் ஆங்கில சூழ்நிலையும் இருக்குமாரு அதாவது வேறு நாட்டினரின் அல்லது வேற்று மொழியினரின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

7.முக்கியமாக நாம் பேச நினைப்பதை அப்படியே மொழி பெயற்பதில் கவனம்செய்யாமல் சாதாரண உரைநடையில் பேசுங்கள். காரணம் மொழிப் பெயற்க்கும் பொழுது ஆங்கில மொழிக்கு இருக்கும் ஆக்ஸன்டை வளர்த்துக்கொள்ள முடியாது. எந்த மொழிக்குமே அந்தந்த ஒரு பாவம்/ஸ்டையில் இருக்கும் தானே.

8.எல்லாத்தையும் விட முக்கியம், மற்றவர்களைப் போல் நம்மால் ஆங்கிலம் பேசமுடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையை முதலில் போக்கிக் கொள்ளுங்கள்.

சங்கீதா

முதலில் உங்கள் தாழ்வு மணப்பாண்மையை விட்டு தள்ளுங்கள்.
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்.இதே உங்கள் பாதி உற்சாகம் வந்து விடும். யாரும் இங்கிலீஸ் காரன் பரம்பரையில் வந்தவர்கள் அல்ல.

முதலில் ஒரு நோட்டு போடுங்கள் , முப்பது நாட்களில் ஆங்கிலம் கற்க அதை வாங்குங்கள், ஏனேன்றால் அதில் தான் பேசீகிலிருந்து நீங்கள் எதிர் பர்ப்பது கிடக்க்கும்,

தினமும் உங்களுக்கு டைம் இருந்தால் ஒரு மணி நேரம், (அ) அரை மணிநேரம் ஒன்ரு ஒன்றா எடுத்து எழுதி வையுங்கள்.
நல்ல பத்து முறை படித்து பாருங்கள். பிறகு எழுதியும் பாருங்கள்.
இது ஒரு மாதத்திற்கு செய்யுங்கள்.

டீவி யில் சீரியல், படம், எல்லாம் கொஞ்ச நாளைக்கு மூட்டை கட்டுங்கள்.

BBC சேனல் மட்டும் (அ) கார்டோன் அது கூட ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள் ஒன்றும் இல்லை அவர்கள் பேசுவது உச்சரிப்பதை நன்கு கவனியுங்கள் அதை பலமுறை சொல்லி பாருங்கள்.
இது ஒரு மாததிற்கு முற்கொண்டு பிறகு

மற்ற தோழிகள் சொன்ன் மாதிரி ஆங்கில நாவல்கள்,சின்ன சின்ன குழந்தைகள் பொடிக்க கூடிய கதை புத்தகங்கள் இருக்கும் அதை வாங்கை படிங்கள்.

எனக்கு ஒன்றுமே தெரியாது ஆனல் நமக்கு நம் மேல் நம்ம்பிகையும் ,இன்டெரெஸ்ட்டும் இருந்தால் சிகிரம் கத்து கொள்ளலாம்.

நான் பல வேலைகள் படிக டைம்கூட கிடையாது நைட் 10.30 மணிக்கு மேல் அரை மணி நேரம் படிப்பேன் இது 15 வருடங்களுக்கு முன்.
பிறகு ஹிந்தி கத்துக்கனும் என்று ஆர்வம், அதே மாதிரி தையலும் எல்லாமே வீட்டு வேலை யெல்லம் முடித்து எல்லாம் துங்கியபின் உட்கார்ந்து தனியா ஒரு வெறி எப்படியும் கத்தே ஆகனும் என்று, அப்படி கத்து கொண்டது தான்.

நான் ஹிந்தி கத்து கொண்டதை இப்ப நினைத்தால் கூட நானே ஆச்சிரிய படுவேன்.

நன் ஹிந்தி கற்று கொண்ட போது என் பெரிய பையனுக்கு இரண்டு வயது, அவன் என்னிடம், என் மாமனார் தவிர யாரிடமும் போக மட்டான்.

மாமானார் வீட்டில் எல்லா வேலையும் முடித்து விட்டு மதிய சாப்பாடுக்கு பிறகு டீயும் போட்டு வைத்து விட்டு, பையனை தூக்கி கொண்டு அம்மா வீட்டுக்கு வந்து அவனை தூங்க போட்டு விட்டு பக்கத்தில் நன் படுத்துள்ளது போலவே தலையனைகளை வைத்து என் சேலையை பெருசா மூடிவைத்து விட்டு போவேன்.

ஒரு மணி நேரம் கிளாஸ் முடித்து விட்டு வரவழியில் என் பாட்டி என்னை பார்க்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள் அவர்கலையும் ஒரு விசிட் பார்த்து விட்டு வந்து அவனை துக்கி கொண்டு மாமியார் வீட்டுக்கு செல்வேன்.

ஹிந்தி படம் பார்ப்பேன் கதையை அல்ல அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை மட்டும் அதை மறு படியும் சொல்லி பார்ப்பேன்,

நீங்கள் அந்த மாதிரி ஆங்கில படங்கள் பார்த்து கொண்டே இருங்கள்.

கண்டிபா நீங்கள் பல பேருக்கு அட்வைஸ் செய்வீர்கள்.உங்கள் கணவரிடமும், இரண்டு முன்று வார்த்தைகள் சொல்லி தெரிந்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் கடினம் தான் பிற்கு பலன் தெரியும்.

நாமே நம்மை நொந்து கொள்ள கூடாது சரியா சங்கீதா.
எங்க சிரிங்க பர்க்கலாம்
அட நல்ல வாய்விட்டு சிரிங்க.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா அப்படியே ஆட்டோகிராப் பக்கம் போயி ஒரு பதிவு போடுங்க...எஸ்கேப் ஆகனும்னு நினைக்காதீங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா அஸ்ஸலாமு அலைக்கும்
என்ன பந்த பொண்ணு நலமா?

ஸ்கூல் எப்ப சேர்க்கனும்.
அவளுக்கு கை எழுத பழக , நிறைய பழைய நியுஸ் பேப்பர், மெல்லிய கவர் கொடுத்து சின்ன சின்ன துண்டாகா பிச்சி பிச்சி கூடவே ஒரு கவரையும் கொடுத்து போட சொல்லுங்கல் பென்சில் பிடித்து எழுத கை வலுவடையும், அப்படியே தளிக்காவுக்கும் ரீமாவை செய்ய் சொல்லுங்கள். மற்றவர்கள் யார் ஸ்கூல் சேர்க்க இருக்கும் குழந்தைகள் இருந்தால்லம் செய்ய வையுங்கள்.

மர்லியா பார்தேன் ஆட்டோ கிராஃப் நான் எழுத ஆரம்பித்தால் நிறைய எழுத வேண்டி இருக்கு அதற்கென தனியா நேரம் ஒதுக்கனும். ஆகையால் வேலைகளுக்கு இடயில் இந்த பதிவு மெதுவா போடுகிறேன், அதற்கு முன் உம்ரா, ஜம் ஜம் பாதியிலேயே நிற்குது அதை எழுதி முடிகலா, அதிரா கேட்டு கொண்டாதாலும் , மற்ற தோழிகள் கேட்டு கொண்டதாலும் ,
அதை பற்றி நிறைய தகவல் சேகரித்து வைத்துள்ளேன் அதை முடித்து வீட்டு பிறகு நான் என் ஆட்டோ கிராஃப் பதிவை போடுகிறேன்,

அந்த உம்ரா பகுதியுல் இரண்டு பேஜ் ஆகி விட்டது மறுபடியும் முன்றாவது பேஜ் அடித்தால் அழிந்து விடும் என்றார்களே என்று தான் தொடராமல் இருக்கிறேன், கழ்டபட்டு டைப் பண்னி எல்லம் போய் விட்டால் ரொமப் மனசு கழ்டமாகிவிடும்
ஆகையா உம்ரா பாகம் இரண்டு என்று தான் ஆரம்பிகனும் போல இருக்கு
ஒவ்வொருவரும் ஆட்டோகிராஃபில் என்னை ரொம்பவே புகழு கிறீர்கள் நான் ஒரு சாதாராண பொண்னுதான்,
இந்த அருசுவை நடத்துபவருக்கு தான் ரொம்ப நன்றி சொல்லனும்.

ஜலீலா

Jaleelakamal

அன்பு தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றி சொல்லுகிறேன்.
எனக்கக நீங்க இவ்வளவு டைப் பண்ணி உங்கள் பதிலை எனக்கு தந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு, கண்களில் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.
என்க்கு உங்கள் பதிலை படித்த பின்பு புது தெம்பு வந்த்து இருக்கு, நான் நிச்சயம் முயர்ச்சி செய்வேன்.
மீண்டும் ஒரு முறை நன்றி...நன்றி...நன்றி

sangeeram

மேலும் சில பதிவுகள்