கறி பணிஸ் / கறி பன் & பிரெட் ஸ்டிக்

தேதி: April 26, 2008

பரிமாறும் அளவு: 3 or 4 நபர்களுக்கு)

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மா - 2 1/2 கப்
ஈஸ்ட் - 1 பக்கட் (0.25oz or 7g)
சீனி - 2 1/2மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பட்டர் - 1 மேசைக்கரண்டி
சீனிச்சம்பல் அல்லது உருளைக்கிழங்கு கறி அல்லது ஏதாவது பிடித்தமான கறி - 1 கப்
காய்ந்த பார்ஸ்லி/பேசில்/எள்ளு - 1 மேசைக்கரண்டி


 

1/4 கப் மிதமான சூடுள்ள தண்ணீரில் 1/2 மேசைக்கரண்டி சீனி, ஈஸ்ட்டைப்போட்டு கரைத்து 10 நிமிடங்களுக்கு விடவும்.
பின்னர் இந்த கரைசலினுள் மைதாமா, உப்பு, ஒலிவ் எண்ணெய், மீதி சீனி சேர்த்து சப்பாத்திக்கு குழைப்பது போல தண்ணீர் அல்லது பால் விட்டு மிருதுவாக வரும்வரை குழைக்கவும்.
பின்னர் ஒரு எண்ணெய் பூசிய பாத்திரத்தில் போட்டு மூடி 1 1/2 மணித்தியாலங்களுக்கு விடவும்.
இப்போது மா ஊதி இரு மடங்காகி இருக்கும். இதனை மீண்டும் 3 / 4 நிமிடங்களுக்கும் குழைக்கவும்.
கறி பணிஸ் :- பின்னர் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல தட்டி நடுவில் கறியை வைத்து மூடி ஒட்டி ஒரு பேக்கிங் தட்டில் நன்கு இடைவெளி விட்டு அடுக்கவும்.
பின்னர் உருக்கிய பட்டரை ஒரு பிரஷின் உதவியால் பணிஸ்களின் மீது பூசவும்.
பிரெட் ஸ்டிக்:- மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் போட்டு நீளமாக கோல் போல உருட்டி ஒரு பேக்கிங் தட்டில் அடுக்கவும்
பின்னர் உருக்கிய பட்டரை ஒரு பிரஷின் உதவியால் பிரெட் ஸ்டிக்குகளின் மேல் பூசவும்.
பின்னர் காய்ந்த பார்ஸ்லி/பேசில்/எள்ளு (ஏதாவது ஒன்றை) இதன் மேல் தூவவும்
பணிஸ்/பிரெட் ஸ்டிக் இரண்டையுமே மூடி மீண்டும் 1 மணித்தியாலம் வைக்கவும்.
அவனை 350 F இல் முற்சூடு பண்ணவும்.
பின்னர் பணிஸ், பிரெட் ஸ்டிக்கை 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான கறி பணிஸ், பிரெட் ஸ்டிக் தயார். மாலை அல்லது இரவு உணவாக கெட்சப் / சட்னியுடன் சாப்பிடலாம்.


கறி பணிஸிற்கு வைக்கும் கறி தண்ணியாக இல்லாமல் தடிப்பானதாக இருக்க வேண்டும். குழைத்த மாவை பிற்ஸா செய்வதற்கு பிற்ஸா க்ரஸ்டாகவும் (pizza crust)பயன்படுத்தலாம். பணிஸ்/பிரெட் ஸ்டிக் சிறிது இனிப்பு சுவையுடன் இருக்க வேண்டுமானால் மாவுடன் சிறிது அதிகமாக சீனி சேர்த்தும் குழைக்கலாம். பிரெட் ஸ்டிக் தனியே செய்வது என்றால் மாவுடன் சேர்த்து உள்ளி பேஸ்ட் அல்லது காய்ந்த பேஸில்/எள்ளு சேர்த்தும் குழைத்து வைக்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி பிரெட் ஸ்டிக்கை விரும்பிய வடிவங்களிலும் செய்யலாம். உ+ம்: பாம்பு, பின்னல், இதயம், பிரெட்ஸில் shape etc.

மேலும் சில குறிப்புகள்


Comments

நர்மதா, இது எனக்கு மிகப் பிடித்தமான சிற்றுண்டி.
இந்தக் குறிப்பைப் படிப்பவர்களுக்கு ஒரு மேலதிக தகவல்- கறிக்குப் பதில் சீனிச்சம்பல் (விசாவின் குறிப்பு 'node9735'பார்க்கவும்)/ சீனிச்சம்பல்+அவித்த முட்டை பாதி வைத்துச் செய்தால் சுவையாக இருக்கும்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எனக்கு மிகவும் பிடித்த சுவையான உணவு. குறிப்புக்கு நன்றி..

அன்பின் இமா & செபா, பாராட்டுக்கு நன்றி. இதன் செய்முறை விளக்க படம் இந்த தொடுப்பில் உள்ளது. அத்தோடு சீனி சம்பல் செய்முறையும் உண்டு. பாருங்கள்.
-நர்மதா :)
http://www.arusuvai.com/tamil/node/9292
http://www.arusuvai.com/tamil/node/4624

ஹாய் நர்மதா,
நலமா? மேலே உள்ள பதிவு நான் போடவில்லை. :)) செபாவும் பதிவு போட்டிருக்கிறாங்களா? :))
மேலே கொடுத்துள்ள பதிலுக்கு நன்றி.

நேற்று இரவு கறிபண் (கிழங்குக் கறி) செய்தேன். ஈஸ்ட் ஒரு பக்கட் என்று மட்டும் சொல்லாமல் எத்தனை கிராம் என்றும் சொன்னது உபயோகமாக இருந்தது. பண் நன்றாக வந்தது. குறிப்பு தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்