கறி மிளகு பிரட்டல்

தேதி: May 3, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கறி - 1/4 கிலோ
கொத்தமல்லித்தழை - 1/2 கப் (பொடியாக அரிந்தது)
உப்பு - தேவைக்கேற்ப
அரைக்க தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - ஒரு கப்
நல்ல மிளகு - 25 கிராம்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2 என்னம்


 

ஆட்டுக்கறியை நன்றாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், நல்ல மிளகு, சோம்பு இவற்றை மையாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் அகன்ற பாத்திரத்தை வைத்து, அதில் நல்லெண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து பின் வேகவைத்த ஆட்டுக்கறியை சேர்த்து பிரட்டவும்.
2 நிமிடம் கழித்து அரைத்த விழுதை சேர்த்து, குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கலவை கொதித்து வற்றி வரும் போது பொடியாக அரிந்து வைத்துள்ள கொத்தமல்லித் தழை தூவி அடி பிடிக்காமல் பிரட்டி விடவும், கெட்டியான(dry) உடன் இறக்கவும்.
இப்பொழுது சுவையான கறி மிளகு பிரட்டல் தயார்.


பிள்ளை பெற்ற பெண்களுக்கு ஒரு மாதத்திற்குள் இந்த கறியை கொடுப்பார்கள் இது வயிற்று புண் ஆற்றும், ஒரு மருந்து கறி. (கவனிக்க செய்முறை 1,4)கறியை உப்பு போட்டு வேகவைத்துள்ளோம் பின் எதற்கு ஒரு சிட்டிகை உப்பு என்றால் அரைத்த கலவைக்கு தேவை அதனால் தான். அல்லது தேவைக்கேற்ப உப்பு போட்டுக் கொள்ளவும்

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த முறையில் செய்து சப்பாத்திக்கு சைட் டிஷ் மிகவும் பொருத்தமாக இருந்தது.நல்ல சைட் டிஷ்.
ஸாதிகா

arusuvai is a wonderful website