புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் செல்வி தங்களின் புதுமனை புகு விழா நிகழ்வு சிறப்பாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விழாவிற்கு எங்களில் பல பேரால் வந்து கலந்துக் கொள்ள முடியாது என்று தெரிந்திருந்தாலும் எங்களை மறக்காமல் அழைத்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது மிக்க நன்றி. உனது கனவு இல்லம் நினைவானதுப் போல், அதில் நீயும் உனது குடும்பமும் இன்று போல் என்றென்றும் ஆனந்தமாய் வாழ வாழ்த்தும் அன்பு தோழி மனோகரி.

செல்வி!..... வீடு கட்டுவது நல்லபடியாக நிறைவடைந்துவிட்டதா? என்னுடைய மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டிற்கு பெயர் ஏதாவது செலக்ட் பண்ணி இருக்கிறீர்களா? புதுமனை புகு விழாவிற்கு எல்லோரையும் அழைத்ததற்கு நன்றி. விழா நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் நடைபெற வாழ்த்துக்கள்!

செல்வி மேடம் நலமா?

ஒருவழியாக வீட்டு வேலையை முடித்து விட்டீர்கள்.வீட்டை கட்டுவதென்ன லேஸ் பட்ட விஷியமா ?

அப்பா நிறைய வேலை இருக்கும் இல்லையா?

இனி நல்ல படியாக நீங்கள் நினைத்தவிதம் இன்பமாக அங்கு வாழ வாழ்த்துகிறேன்.

வீட்டை கட்டுவதும், ஒரு பெண்ணை கலாயானம்
கட்டி கொடுப்பதும் ஒன்று என் கிரான் மா அடிக்கடி சொல்வார்கள்.

நல்ல படியா பேரன் பேத்தியோடு சந்தோஷமா நீங்கள் நினைத்த படி சந்தோஷமாக உங்கள் எண்ணம் போல் வாழ என் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

ம்ம் சீக்கிரம் விருந்து ரெடி பண்ணுங்க வரேன்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் செல்விக்கா எப்படி இருக்கீங்க?நானும் அருசுவை இல் சில பிரட்சனையினால் கொஞ்சநாள் வராமல் போஇ விட்டேன்...அது போகட்டும்..வீட்டு வேலை முடிஞ்சு விட்டதா?ரொம்ப சந்தோஷம்..சென்னைக்குலாம் வரபோறதா சொன்னீங்களே?அங்கேயே பட்ஷ்ஸ்லாம் முடிச்சாச்சா?
நல்லபடியாக இருக்க என் வாழ்த்துக்கள்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் இப்போதான் பார்த்தேன். செல்வியக்கா வீட்டு வேலை முடிந்து விட்டதா? குடிபுகுதலை விட வீட்டை ஒழுங்கு பண்ணி முடிக்க வேண்டுமே அதுதானே பெரிய வேலை. நல்லது, சந்தோசம். புது மனையில் சகல சந்தோஷங்களுடன் வாழ வாழ்த்துகிறோம். முடிந்தால் பிறகு படம் அனுப்புங்கள்.

ஆ.... மர்ழியா நீங்க இங்கதான் இருக்கிறீங்களா? நான் தேடினேனே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா நலமா?
உங்களுக்கு இரட்டை குழந்தையா?இப்பதான் பதிவை பார்த்தேன்..வயது என்ன இருக்கும்?ரொம்ப சந்தோஷம்ப்பா..பாவம்ப்பா அந்த மாலதிக்க இப்படி கேள்விகேட்டு கொல்லுறீங்களே?இது நியாயமா?உங்க இலங்கை தமிழை கொட்டுங்க...
:-)
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள செல்வியக்கா! வீட்டு வேலைகள் முடிந்தாலும் குடிபுகுந்து சிலநாட்கள் வரை வேலைகள் அதிகமாகதான் இருக்கும். இப்போது இன்னும் டென்ஷனாக இருப்பீர்கள். எல்லாம் நல்லபடி நடந்தேற என் வாழ்த்துக்கள்!

உங்கள் வீட்டின் ஃப்ரென்ட் விவ் (Front View) கிட்டத்தட்ட எங்க வீடு மாதிரி தெரிந்தது ஃபோட்டோவில்! :) எத்தனை ஸ்கொயர் ஃபீட்ஸ் மொத்தம்? 1 ஸ்கொயர் ஃபீட் ரேட் எவ்வளவு? மொட்டை மாடியா அல்லது ஃபஸ்ட் ஃப்ளோர் உண்டா? உங்கள் வேலைகளுக்கிடையில் உடனே பதில் தரவேண்டாம். பொறுமையாக பதில் தந்தால் போதும்.

அன்புள்ள செல்வி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாங்கள் புதுமனைப் புகுவிழாவை சிறப்பாக நடத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் வீட்டில் இன்றுபோல என்றும் சந்தோஷம் நிறைந்திருக்க அறுசுவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம். வாழ்த்துக்களோடு, தங்களிடம் புறப்படும்போது பேச முடியாமல் போனதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.

எப்படி என்று தெரியவில்லை. ஒரே பதிவு இரண்டு முறை பதிவாகி விட்டது. எனவே அதனை நீக்கி இதனை எழுதியிருக்கிறேன். மர்ழியா எனக்கு அனுப்பிய பதிவும் கூட இப்படி இரண்டு முறை வந்தது. ஏனென்று தெரியவில்லை. அப்படி இரண்டாவது முறை வந்த பதிவை நீக்க முடியுமா இல்லையா என்பதை அட்மின் அவர்கள் நேரம் கிடைக்கும்போழுது சொல்ல வேண்டும்.

மேலும் சில பதிவுகள்