புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

வாழ்த்துகள். நானும் உங்களை போல் இப்பதான் புது மனை விழா முடித்தேன். ரொம்ப களைப்பா இருந்தது 3 நாடக்ளுக்கு பிறகு நம்ம ரொட்டின் வேலைகள் துடங்கிவிட்டன். பாவம் நிங்க வேலைக்கும் போய் கொண்டு வீட்டையும், நம்ம அருசுவையும் பார்த்து கொண்டிருக்கிங்க ரொம்ப களைப்பா தான் இருக்கும்.

வாழ்வில் எல்ல லஷ்மி கடாஷ்மும் பெற்று வாழ்வில் எல்லா சந்தோஷம் பெற்று நல்லபடியா பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறேன்.

எமது மனமார்ந்த வாழ்த்துகள் செல்வி அக்கா.
-நர்மதா :)

செல்விமாவுக்கு புதுமனை புகுவிழா வாழ்த்துக்கள். புது இல்லத்தில் எல்லா செல்வங்களும் பெற்று பேரன் பேத்திகளுடன் சந்தோசமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

அன்புடன்
மணிமேகலை.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

செல்வி அம்மா வீடு முடிந்து விட்டது என்று கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இனி தான் சிறு சிறு வேலைகள் ரொம்ப இருக்கும். வேலையின் மத்தியிலும் உடம்பையும் கொஞ்சம் பார்த்துங்கோ! எங்களை எல்லாம் அழைத்தற்கு நன்றி. கண்டிப்பாக நான் வந்து பார்ப்பேன் என்று நினைக்கிறேன். நான் மே 24ந்தேதி இந்தியா வருகிறேன். கண்டிப்பாக முடிந்தால் வருகிறேன். அந்த வீட்டில் எல்லா சந்தோஷங்களும் பெற்று, நோய் நொடின்றி வாழ வாழ்த்துக்கள்.

ஜானகி

இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் :) உங்களுக்கு பிறகு ஈமெயில் அனுப்புகிறேன். நிச்சயம் உங்கள் புது வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் உங்கள் தங்கை
உமா

செல்விமா எப்படி இருக்கீங்க அப்பா நலமா? உங்க வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு எங்கள் வாழ்த்துகள்.உங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு வேலைகளுக்கு நடுவில் உடம்பையும் பாத்துக்குங்க
அன்புடன் தீபா

செல்விக்கா புதிய வீட்டில் எல்லா வளங்கள் பெற்று மகிழ்சியாக வாழ வாழ்த்துகிறேன். இனிமே அறுசுவையில் அடிக்கடி உங்களை பார்க்கலாம்.அடுத்து உங்கள் கைவண்ணத்தால் வீட்டை அழகு படுத்துங்கள்.

மாலி

அன்பு மாலி,
நலமா? என்னை வாழ்த்தவே அறுசுவைக்கு வந்தது போல் இருக்கிறது(ரொம்ப நாள் கழித்து).

இப்போதே அப்படித்தான். ஹை சீலிங்கில் மேலே உள்ள ஜன்னலுக்கு பெயிண்டிங் செய்த கண்ணாடி வேண்டும். பாண்டியில் நல்லாவே இல்லை. விலையும் ரொம்ப கூட. அதற்கு இப்ப என்னோட கைவண்ணம் தான்(எவ்வளவு மோசமாக இருந்தாலும்). கண்டிப்பாக போட்டோ வரும்.

இல்லை, இன்னும் கொஞ்ச நாள் அறுசுவைக்கு சுத்தமாக வரவே மாட்டேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ரஸியா,
ஆங், பேசி ரொம்ப நாள் தான் ஆச்சு. இன்னும் வேலைகள் பாக்கி இருக்கு. வாழ்த்துக்கு நன்றி.

அன்பு சகோதரர் ஜோயல்,
என்னை வாழ்த்துவற்காக நீங்கள் மன்றத்திற்கு வந்தது சந்தோஷமாக இருக்கு. மிக்க நன்றி.

அன்பு வின்னி,
ஆமாம், உனக்கு போகும் வழியில் தான் வீடு உள்ளது. கண்டிப்பாக வரணும். முடிந்தால் இடையில் பேசுவோம். வாழ்த்துக்கு நன்றி.

விஜி,
ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வீடே கதின்னு இருக்கோம். இன்னும் இன்விடேஷன் அடிக்கலை. டிரஸ் எடுக்கலை. ஹெல்புக்கும் ஆள் இல்லை. ஒண்னும் புரியலை. 20 நாட்களில் எது முடியுமோ, அதுதான். ரொம்ப நன்றிப்பா.

மிக்க நன்றி நர்மதா. நலம்தானே?

மணிமேகலை,
அதிகம் பேசியதில்லைன்னாலும் பாராட்டியதற்கு மிக்க நன்றி. உங்களுக்கு ஒரு பதிலும் கொடுத்டுள்ளேன்.

ஜானு,
ஆஸ்திரேலியாவில் இருக்கிறவங்க எல்லாரும் ஏமாத்தறவங்கன்னு பேர் வாங்காம ஒழுங்கா வர்ற வழியப் பார். மெயில் அனுப்பினேன். அப்பா நம்பரில் கூப்பிடு. உடம்பை பார்த்துக்க சொன்ன அன்புக்கு மகிழ்கிறேன்.

சகோ. குலசை சிலதான் அவர்களே,
மிக்க நன்றி.. இது ஒன்றும் லேட் இல்லை. நான் தான் ரொம்ப முன்பாக சொல்லி விட்டேன். லோகல் அழைப்பு உண்டு. அட்ரஸ் தாருங்கள்.

அன்பு உமா,
ரொம்ப பிசியோ? வாழ்த்துக்கு நன்றி. போட்டோ கண்டிப்பாக வரும். மெயிலில் பேசுவோம்.

அன்பு தீபு,
நலமா? எல்லோரும் நலமே. ரொம்ப நாளாச்சு பேசி. ஏன்? வாழ்த்துக்கும், உடம்பை பார்த்துக்க சொன்னத்ற்கும் நன்றி.
அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

தங்கள் புது மனை புகு விழாவிற்கு எங்களை எல்லாம் அழைத்தமைக்கு நன்றி. புதிய வீட்டில் எல்லா வளங்கள் பெற்று மகிழ்ச்சியாக வாழ, உங்களின் ஒவ்வொரு கனவும் மெய்பட வாழ்த்துக்கள்.
தங்களின் புது மனையில் எல்லா வளங்களையும் தந்து ஆசிர்வதிக்க கடவுளை பிராத்திக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்