புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

செல்விமா,

தங்களின் குறிப்புகளை அனைத்தையும் படித்துப் பார்ப்பேன். எப்படி பதிவுகளை அனுப்புவது என்று தெரியாமல் இருந்தேன். ஒருவழியா கண்டுபிடித்து விட்டேன். அனுப்பலாம் என்றிருந்தபோது எனது மாமனார் இங்கு இருந்தார். அவை 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் கம்ப்யூட்டரில் தான் இருந்தார். அவர் ஊருக்கு வந்தவுடன் தான் என்னால் முன்னாடி உட்கார முடிந்தது. எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களாகிறது. பெண் குழந்தை பெயர் செல்வ இலக்கியா.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

செல்விமா,

தங்களின் குறிப்புகளை அனைத்தையும் படித்துப் பார்ப்பேன். எப்படி பதிவுகளை அனுப்புவது என்று தெரியாமல் இருந்தேன். ஒருவழியா கண்டுபிடித்து விட்டேன். அனுப்பலாம் என்றிருந்தபோது எனது மாமனார் இங்கு இருந்தார். அவை 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் கம்ப்யூட்டரில் தான் இருந்தார். அவர் ஊருக்கு வந்தவுடன் தான் என்னால் computer முன்னாடி உட்கார முடிந்தது. எனக்கு குழந்தை பிறந்து 4 மாதங்களாகிறது. பெண் குழந்தை பெயர் செல்வ இலக்கியா.

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

அன்புள்ள செல்வி அக்காவிற்கு,

நான் அறுசுவை-க்கு புதுசு! ஆனால் ரொம்ப நாட்களாக படித்து வருகிறேன். உங்கள் குறிப்புகள் அனைத்தும் அருமை!! நீண்ட நாட்களாக நினைத்திருந்து 2 நாட்கள் முன்னால் தான் வந்து சேர்ந்தேன்.

புதிய வீட்டில் எல்லா வளங்கள் பெற்று மகிழ்சியாக வாழ கடவுளை வேண்டுகிறேன்.

p.s. தமிழ் எழுத, படிக்க ரொம்ப பிடிக்கும். இன்னும் நிறைய எழுத ஆசை!. இந்த டைப்பிங் தான் கொஞ்சம் கஷ்டமாக இருகிறது. போகபோக பழகிவிடும் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி! வணக்கம்!!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு வித்யா,
வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

அன்பு மணி,
குழந்தைக்கும், உனக்கும் ஆசிர்வாதம். நல்ல அழகான பெயர். இனி அடிக்கடி பேசுவோம்.

அன்பு சுஸ்ரீ27 (இவ்வளவு சொன்ன நீங்கள் உங்க பெயரையும் சொல்லியிருக்கலாம்:-)).
அறுசுவைக்கு அனைவர் சார்பாகவும் வரவேற்கிறேன்.
குறிப்புகளை பாராட்டியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கும் நன்றி.
ஆரம்பத்தில் அப்படித்தான் கஷ்டமாக இருக்கும். போகப்போக தமிழில் டைப் செய்வது பழகி விடும். மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்விமா,
புதுமனை புகுவிழா சிறப்பாக நடக்க என்னுடைய வாழ்த்துக்கள். உங்க புதிய இல்லத்தில் அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
சுஜிபாலாஜி.

ஹலோ செல்வி அம்மா,
உங்க புதுமனை புகுவிழாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா நலங்களும் பொங்க துன்பங்கள் எல்லாம் மங்கி மறைய இனிமையான இல்லமாக அமையட்டும்.
Rajini

புதிய இல்லத்திற்கான அழைப்பிதழை அறுசுவையில் தற்போது கண்டேன். வீடு கட்டும் விஷயத்தில் ஆலோசனைகளை நீங்கள் இப்போதுதான் அறுசுவை மன்றத்தில் கேட்டது போல இருக்கிறது. அதற்குள் நாட்கள் வேகமாக க்க்டந்து சென்று விட்டன!!!

புதிய இல்லம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் அனைத்து வளங்களையும், எல்லயில்லாத மகிழ்ச்சியையும் என்றுமளிக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!

அன்புள்ள செல்வி'மா,
எப்டி இருக்கீங்க?
ரொம்ப நாளாச்சு.. பேசி..
வீடு கட்டி முடிச்சாச்சா??!!
ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..

வாழ்க்கையில் வீடு கட்டி செட்டில் ஆவது என்பது ஒரு மிக முக்கியமான அத்தியாயம்...
அது இனிதே நடந்ததில் மிகவும் சந்தோஷம்.

நான் தனியாக மெயில் இப்போ இல்லை.. கொஞ்ச நாள் கழித்து அனுப்புகிறேன்.. வீட்டை பற்றிய டீடெயில்ஸ் தாருங்கள்.. நானும் இடம் / தனிவீடு பார்க்கிறேன் சென்னையில் அளவு கூட 2400 ஸ்கொயர்பீட் தான் முடிவு பண்ணிஉள்ளோம்.. அது எனக்கு மிகவும் யூஸ்புல்லாக இருக்கும்....

எல்லோருக்கும் சொல்லியுள்ள பதிலின் கேள்வியை நானும் கேட்கிறேன்..
போட்டோ அனுப்பி ஷேர் பண்ணுங்க...

பெயிண்ட் என்ன கலர் பண்ணப்போறீங்க???

நல்லா ஃபங்ஷனை கொண்டாடுங்கள்...

அப்பா, தம்பிக்கு என் வாழ்த்துக்கள்.

ஹாய் செல்வி,
புது வீடு போகும் நேரம் பொன்னான நேரமாக அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் வாழ்க்கையில் எல்லா நலனும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் செல்வி,
புது வீடு போகும் நேரம் பொன்னான நேரமாக அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் வாழ்க்கையில் எல்லா நலனும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்