புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

வாவ் எனக்கு ரொம்ப பிடித்த படம் தான் நிங்களும் வைச்சிருக்கிங்க. ஆனால் நான் வரையல்லை. வாங்கியத். எனக்கும் என் ஹஸ்சுக்கும் ரொம்ப பிடிக்கும் இந்த ஒவியம் நான் நிறய்ய கலெக்ஷன் வைத்துள்ளேன். நாங்க இந்தியா போகும் போதெல்லாம் வாங்கி வருவோம். நான் தாஞ்சாவுர் பெயிண்டின்ங் செய்துள்ளேன். ரியல் மாதிரி வரல்ல கொஞ்சம் அது மாதிரி இருக்கும். நான் படம் போட்டு லின்க் அனுப்பறேன். பார்த்து சொல்லுங்க

ரொம்ப நன்றாக இருக்கு இந்த படங்கள்.

தங்கள் கண்ணாடியில் செய்த ஓவியத்தைப் பார்த்து, வாய் பிளந்து விட்டோம். உங்களுக்குத் தான் எவ்வளவு பொறுமை. இதனை வரைய எவ்வளவு மாதம் ஆகி இருக்கும்.
எப்படி வீடு, அறுசுவை பங்களிப்பு, அலுவலகம், கை வேலை இப்பொழுது பெட் வேறு, கொஞ்சம் கற்று தாருங்கள், தங்கள் time management-ஐ.
என் கணவர் அழகாக ஓவியம் வரைவார், பையிண்டிங்கும் கொஞ்சம் செய்வார். இந்த முறையில் கண்ணாடியில் எப்படி வரைவது என்று சொல்லி கொடுங்கள்.

அஞ்சலி, வாழ்த்துக்கு நன்றி.

மர்ழியா,
வீட்டு படம் விரைவில். உன் அட்ரஸை மெயில் பண்ணு கட்டாயம்.
ஜெயந்தி மேடம், நீங்களும் தான்.

ஹாய் தீபு,
கண்டிப்பா போடு தர்றேன். அதற்கான சார்ஜ் மட்டும் கொடுத்துடு:-))

அன்பு ம்னோகரி,
நலமா? பாராட்டுக்கு நன்றி. இரண்டு இரவுகள் ஆயின. காலையில் இருந்து 7 மணி வரை சைட்டில் சரியாக இருக்கும். மாலை வந்து புது மனை புகு விழா வேலைகள்(சாப்பாடு, டெக்கரஷேன், இன்விடேசன் பிரிண்டிங்). வீடு வந்து டிபன் செய்து சாப்பிட 11 மணி ஆகும். அதற்குப் பிறகு உட்கார்ந்து 4 மணி வரை பெயிண்ட் பண்னினேன். இரண்டு நாளில் முடித்தேன். ஹாலில் ஹைசீலிங் ஜன்னலில் வரும் இன்னுமொன்று முடியும் த்ருவாயில் உள்ளது. கதவுக்கு பக்கம் ஒன்று (3x1) போட வேண்டும்.
அதற்கு கிரிஸ்டல் ஒர்க் செய்ய வேண்டும்.
கடையில் வரைந்து தர கேட்டோம். அதுர அடிக்கு 250 ரூபாய் சார்ஜ் கேட்டார்கள். துவும் இது போல் இல்லை. வேறும் பூ டிசைன் சின்னதாக. அந்த கணக்குப் படி இந்த பெயிண்டிங்கின் விலை 5000 ரூபாய்:-))
கிரிஸ்டல் வேலைக்கு சதுர அடிக்கு 750 ரூபாய். அதுவும் நானே செய்யப் போகிறேன். இனி இன்விடேஷன் கொடுக்க போகணும். மீண்டும் சந்திப்போம்.

அஞ்சலி, வாழ்த்துக்கு நன்றிம்மா, அப்படியே கூப்பிடு.

இலா, அட்மின் வராம பங்க்ஷனா?

விஜி, இது போல நிறைய இருக்கு படங்கள் என்னிடம். பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பா உங்க படம் அனுப்புங்க.

வித்யா,
டைம் எப்படி இதுக்கினேன்னு மேலே சொல்லி இருக்கேன் பாருங்க:-)) இதயும் விடாம ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுத்திருக்கேன். விழா முடிஞ்சு ஃபிரீ ஆனதும் அட்மினுக்கு அனுப்பறேன். இன்னுமிரண்டு ஓவியம் முடிந்ததும் அதையும் சேர்க்கிறேன்.

அனைவருக்கும் நன்றி.

இனி விழா முடிந்து தான் அறுசுவைக்கு வருவேன்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கு கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி தற்காலிகமாக விடை பெறுகிறேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

படங்கள் மிகவும் அழகாக இருக்கு செல்வி அக்கா. வரைந்ததை step-by-step படங்கள் எடுத்தீர்களா என கேட்க நினைத்தேன். நீங்களே அட்மினுக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டீர்கள். :) நல்லது. நான் இதுவரை கிளாஸ் பெயின்டிங் செய்ததில்லை. உங்களுடையதை பார்த்துதான் செய்ய வேண்டும்.

மீண்டும் வாழ்த்துக்கள்!
-நர்மதா :)

மேம் ரொம்ப நன்றாக ஒங்க ஸாரி பெயிண்டிக் கூட நல்லா இருக்கு. எங்க கத்துகிட்டிங்க.எனக்கு டைம் கிடைக்கும் போது என்ன மாதிரி பொருடக்ள் சென்னையில் வாங்க கிடைக்கும் சொன்னால் ரொம்ப நன்றாக இருக்கும். என் ஸிஸ்டர்ஸ் எல்ல்லாம் கூட நிற்ய்ய கைவினை,எம்பிராய்டரி,பெயிண்டிங் பன்னுவார்கள். அவர்களுக்கு சொல்லதான். நான் இப்ப தான் ரிவர்ஸ் கிளாஸ் பெயிண்டிங் தொடங்கியுள்ளேன். முடிந்தவுடன் நான் அனுப்புகிறேன்.

நன்றி செல்வி மேம்.

புதுமனை விழாக்கு என்னுடைய வாழ்த்துகள்.
நான் மெயில் ஐடி தறேன். நிஙக உங்க வீட்டு பிக்சர் அனுப்புங்கள்.

ஹாய் செல்விக்கா.ஆல்ரெடி என் கூகில் ஐ டி உங்களிடம் இருக்கு அதுக்கே அனுப்பிடுங்க....

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்னது.... இரண்டு நாட்களில் வரைந்த ஓவியமா!!!!,அதைப் படித்து மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்திவிட்டாய் உனது திறமையை பாராட்ட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை ஆகவே, நீ நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடி பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி பேசாமல் விடைப்பெற்றுக் கொள்கின்றேன் நன்றி.

நன்றி தோழி மனோஹரி.
அப்படியே போனா எப்படி? என்னோட அடுத்த படத்தையும் பார்த்துட்டு பதில் சொல்லிட்டு போங்க. (அதே லின்க் தான்). இந்த ஓவியம் ஒண்ணரை நாளில் முடித்தேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஓவியம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது. வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்ததும், உங்களுடைய அடுத்த வேலை எங்களுக்கு கிளாஸ் பெயின்டிங் பழக்குவதுதான் ஓகேயா? அப்படியே ஒரு பிறேமில் போட்டு சுவரில் கொழுவ அழகாக இருக்கும்.
பாபு அண்ணனின் றிசப்சன் சாப்பாடா வாழை இலையில் இருப்பது?. வாழை இலையையும் கறிகளையும் பார்க்கிறபோது அப்படியே சாப்பிட வேண்டும் போலுள்ளது. நீங்கள் அந்தப் படத்தில் மெலிந்ததுபோல் தெரிகிறீங்கள், வீட்டு வேலையால் இளைத்துவிட்டீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
நலமா? கண்ணாடி ஹாலில் மேலே உள்ள ஜன்னலுக்கு. பிரேம் செய்து மாட்ட இன்னும் சிறியதாக இருந்தால் போதும். இவ்வளவு பெரிது தேவையில்லை. இது 6 அடி நீளம், 3 அடி அகலம். ஜன்னலில் பொருத்தியதும் படம் எடுத்து போடுகிறேன். அதல்லாமல் ஒன்றரை அடி அகலம், 6 அடி உயரம் கண்ணாடிக்கு கிரிஸ்டல் வேலையுடன் செய்ய வேண்டும். அதையும் ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்து போடுகிறேன். உங்களுக்கு விளங்கும்.

அது பாபுவோட ரிசப்னில் எடுத்தது தான்.
ஒருவேளை பாபு பக்கத்தில இருக்கிறதால அப்ப்டி தெரிகிறேனோ என்னவோ:-))
மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்