புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

செல்வியக்கா இப்ப தான் படம் பாத்தேன்..ரொம்ப சூப்பரா இருக்கு..எனக்கு எல்லாதையும் விட சொல்ல தோனுவது உங துனிச்சல் தன்னம்பிக்கை..இவ்வளவு பெரிய கன்னாடி அதுவும் வீட்டுக்கு ஜன்னலில் மாட்ட என்னால் முடியும் என்று செஞ்சீங்க பாருங்க ..அதான்
ரொம்ப அழகா கலர்ஃபுல்லா இருக்கு...இதுக்கு அனுசரிச்ச மாதிரி ஆர்ஞ்&மஞ்சள் கலரில் டபில் கலர் பெயின்டிங் பன்னினால் ரொம்ப அழகு தான் உங்க ஹால்
நான் ஊரில் இருக்கலை நேற்று இரவு தான் வந்தேன்..எதுவும் பேச நேரமில்லை இப்ப..ஆயிரதெட்டு வேலை இருக்கு...பிறகு....

உங்கள் வேலைகள் எல்லாம் முடிந்ததும், எப்படி செய்வது என்ன பெயின்ட் பாவிப்பது என்பதுபோன்ற எல்லா விபரங்களையும் தெரிவியுங்கள்....

ஓ அப்படியா..? பாபு அண்ணன் கூட திருமணப்படத்தில் பார்த்ததைவிட றிசப்சன் படத்தில் கொஞ்சம் மெலிந்ததுபோல்தான் தெரிகிறார்.... ஒருவேளை திருமணத்தின் பின் இழைத்துவிட்டாரோ என்னவோ ? :) :)

நீங்கள் இப்படிக் கூறுவீங்கள் என்று முன்னமே தெரிந்திருந்தால், உங்களைக் கூப்பிடாமலே விட்டிருக்கலாம்... றிசப்சனுக்கு , என்று இப்பத்தான் யோசிக்கிறார்...:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அனைவருக்கும் வணக்கம்.
புதுமனை புகுவிழா தேதியில் சின்ன மாற்றம். பெண்ணுக்கு லீவு கிடைக்காத காரணத்தால், மே 26 ந்தேதியில் நடைபெற இருந்த விழா மே 24 ந்தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. வெளி நாட்டில் இருந்து நீங்கள் அனைவரும் வரவேண்டும் என்று தான் முன் கூட்டியே விழாவைப் பற்றி சொன்னேன்:-). அனைவரும் வருக.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி'மா,
சனிக்கிழமை எந்த நேரம்னு சொல்லலியே!!
எந்த டைம்னு கரெக்டா செல்லுங்கம்மா!!

என்ன செல்வீக்கா இது அப்ப உள் நாட்டில் இருக்கும் நாங்களாம் வர வேனாமா? ;-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

டியர் செல்வி, இரண்டாவது ஓவியமும் மிக மிக அழகாக இருக்கின்றது. ரொம்ப அழகான வர்ணங்களைத் தான் தேர்ந்தெடுத்திருக்கின்றாய், என்னைக் கேட்டால் நீ இந்த கலையை முழு நேர தொழிலாகவே செய்யலாம். இரண்டு நாள், ஒன்றரை நாள் என்பதெல்லாம் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை, ஏதோ மாதக் கணக்கில் ஆகியிருக்கும் என்று நினைத்தேன். நிச்சயம் உனது வீடு உன் அழகிய கைவண்ணத்தால் மேலும் பொலிவுபெறும் என்பது உறுதி. இன்னும் வேறு ஏதாவது எங்களுடன் ஷேர் செய்ய விரும்பினாலும் வந்து சொல்லு கேட்க ஆவலாய் உள்ளது. உனது தோட்டத்தை பற்றியும் படித்தேன், மீண்டும் அதேப் போன்று அழகான நந்தவனம் அமைய எனது வாழ்த்துக்கள்.
ஒரு வேண்டுகோள்: என் பெயரை பழைய படியே மனோகரி என்றே எழுது இந்த புதிதாக ஹரி வேண்டாம் ஓகேவா.

செல்வி மேம் ரொம்ப நன்றாக இருக்கு. உங்க கையை விடலா நன்றாக சுற்றி போட சொல்லுங்க கன் த்ருஷ்டி பட்டுட போகுது. என் கன்னே பட்டும் போல இருக்கும். தப்பா எடுக்காதிங்க. விழா முடிந்த்த பிறகு எங்களுக்காக கொஞ்சம் டைம் எடுத்து இதை எல்லாம் ஸெடெப் பை ஸ்டெப் போடுங்க. ரொம்ப நன்றி. இது மது பாணி ஒவியம் தானே. எங்க கத்துகிட்டிங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை நான் அப்புறம் விடாமல் துரத்தறேன் பாருங்க.

செல்வி!... சூப்பர்!!...நல்ல உழைப்பு தெரிகிறது. இப்பதான் நீங்க வரைந்த படங்களை பார்த்தேன். எப்படி இவ்வளவு குறைந்த அவகாசத்தில் இத்தனை பெரிய படங்களை வரைந்தீர்கள்? முதுகுவலி எதுவும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். படத்தில் உள்ள பெண்களின் ட்ரஸ்ஸின் கலர் காம்பினேஷன் நன்றாக இருக்கிறது. ஸிதார் பெண்ணின் மயில் கழுத்து கலர் பாவாடையும் அதன் வெல்வெட் ஷைனிங் ஃபினிஷிங்கும் அருமை!..... அந்த கைகளின் வளயல்களுக்கு இன்னும் பெயிண்ட் பண்ணவில்லை என்று நினைக்கிறேன். வளையள்களும் நெயில் பாலீஷும் மட்டும் பாக்கி இருக்கிறது போலும். மெதுவாக ஃபினிஷ் பண்ணுங்க. உடம்பை பார்த்துக்கொள்ளுங்க.
கேர்ள் வித் டாப் பெயிண்டிங் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கு. இந்த பெண்ணின் முக எக்ஸ்பிரஷன் ரியலி டாப். இந்த படத்தில் அவுட்லை மாதிரி பூங்கொடியை தொங்கவிட்டு இருப்பது ஓவியத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
பொறுமை, கடின உழைப்பு, விடாமுயற்சி எல்லாம் தெரிகிறது.
வாழ்த்துக்களும்!! பாராட்டுக்களும்!!

உங்கள் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள். மிகவும் தாமதமான இந்த வாழ்த்துக்கு மன்னிக்கவும்.

உங்க ஒவியங்களை நான் தினமும் பார்த்து கொண்டிருக்கேன். எனக்கு ரொம்ப பிடித்துஇருக்கு. நான் மட்டும் உங்க ஊர்லேயே இருந்திருந்தால் கண்டிப்பா உடனேயே உங்க வீட்டிற்க்கு வந்து கத்துகொள்வேன். எனன பன்னுவது வழி இல்லை , பார்க்கலாம்

மேலும் சில பதிவுகள்