புது மனை புகு விழா அழைப்பு....

அறுசுவை சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

ஒருவழியாக வீட்டை கட்டி முடித்து விட்டோம். இன்னும் சில வேலைகள் மீதமுள்ளன.

வரும் 26 ந்தேதி (மே - 2008) திங்களன்று காலை 11 மணியளவில் புது மனை புகு விழா நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று வருகை தர வேண்டுமென அழைக்கிறோம்.

உதவிக்குறிப்புக்கள் வழங்கிய அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீட்டு வேலைகளும், புது மனை புகு விழாவும் முடியும் வரை என்னால் அறுசுவைக்கு வர இயலாதென நினைக்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

அன்பு அறுசுவை சகோதரிகளே,
வணக்கம். என்னுடைய 3வது ஓவியத்தையும் கீழ்காணும் லின்க்-ல் கண்டு தங்களின் மேலான கருத்துக்களை சொல்லவும்.
http://s227.photobucket.com/albums/dd279/senreb/
மீண்டும் சந்திப்போம், விழாவிற்கு பின்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எப்படி இருக்கீங்க?நலம்தானே?உங்கள் க்றிஸ்டல் ஓவியத்தை நான் மட்டும் பார்க்க முடியாதது ஏனோ?எனக்கு ஏரர் மெஸ்ஸேஜ் தான் வருகிரது என் மெயில் பார்த்தீர்களா? தாங்கள் திட்டமிட்டபடி விழா சிறப்பாக அமைய மீண்டும் என் வாழ்த்துக்கள்

செல்வியக்கா,
இது என்ன இது... ஓவியம் என்கிறீங்கள்... அப்படித்தெரியவே இல்லை நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது... இது எதற்காக? இதுவும் ஜன்னலுக்கா? உடனேயே நானும் பழகவேணும்போல இருக்கு, கெதியா வேலையை முடித்திட்டு வாங்கோ....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மனமார்ந்த வாழ்த்துக்கள், செல்விம்மா!மிக அற்புதம் உங்கள் பெயிண்டிங்ஸ்,ஓவியத்திறன் பார்த்து அசந்து போனேன்.உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் எங்கள் சந்தோஷம்,மகிழ்ச்சிகலந்த வாழ்த்துகள்...!!!உங்கள் புது வீட்டில் என்றும் மகிழ்ச்சியும்,கலகலப்பும் நிறைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வ்ளமுடன், வளர்க நலமுடன்..
அன்புடன் விமலா.

வணக்கம்

அன்பு செல்விஅம்மா அவர்களுக்கு

நான் உங்கள் குறிப்புகளை சிலதை செய்தது உண்டு ஆனால் நான் பின்னுட்டம் அனுப்பியது இல்லை.அதே போல் நீங்கள் வீடு கட்டி பால்காய்ப்பு விசேஷம் வரும் 26ஆம் தேதி வைத்துள்ளீர்கள் என்று உங்களுக்கு வரும் வாழ்த்துபகுதியில் இருந்து தெரிந்து கொண்டேன்.எனக்கு உங்களை அதிகம் தெரியாததால் எப்படி வாழ்த்துவது என்று இருந்தேன் ஆனால் நீங்கள் அறுசுவை உறுப்பினருக்கு உங்கள் கிறிஸ்டல் ஓவியத்தை பார்க்க லிங்க் கொடுத்தை நானும் பார்த்து அசந்துவிட்டேன்.எனக்கும் ஓவியத்தில் ஆர்வம் உண்டு ரொம்ப செய்ய தெரியாவிட்டலும் என்னால் முடிந்த சாரி பெய்ண்டிங்,ஹன்ட் எம்பிராய்டரி என்று போடுவேன்.இந்த கிறிஸ்டல் ஓவியத்தை பார்த்துவிட்டு வாழ்த்தாமல் இருக்கமுடியவில்லை.வாழ்த்தவயது சிறிது என்றாலும் என்மனம் பெரிது
உங்கள் பால்காய்ப்பு விசஷேசம் இனிதே நடப்பதற்கும் உங்கள் குடுப்பத்தோடு நல்ல சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன்
மேலும் உங்கள் ஓவிய பணி மேலும் மெருகேறி பலரும் பார்த்து போற்றும் வண்ணம் முன்னேறவேண்டும்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

நலமாக இருக்கிறீர்களா. உங்களிடம் பேசி நிறைய நாள் ஆகிவிட்டது என்ன காரணம் என்று உங்களுக்கும் தெரியும்.உங்களின் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டது மிகவும் சந்தோஷம். நீங்கள் அனுப்பிய இன்விடேஷனும் கிடைத்தது என்னால் வர இயலவில்லை. எல்லா போட்டோக்களையும் எனக்கு மெயிலில் அனுப்பிவிடுங்கள். நீங்கள் நினைத்தபடி குடிபுகுதல் விழா மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் இல்லத்தில் என்றும் மகிழ்ச்சியும்,நிம்மதியும் நிறைந்து வழிய என்னுடைய வாழ்த்துக்களும்,பிரார்த்தனையும்.

அன்புடன் கதீஜா.

புது வீடு, புது படங்கள்.
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. நீங்க ஒரு சின்ன இன்ஸ்டிடியூட்டே ஆரம்பிக்கலாம் கை வேலைக்காக.
சகலகலாவல்லிக்கு வாழ்த்துக்கள்.
புதுமனை புகும் நேரம் எல்லா விதத்திலும் நல்லபடியாக அமைய உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்புள்ள செல்வி'மாவிற்கு,

புது வீடு, புது பெயிண்டிங் கலக்குறீங்க!!
நல்ல 16 செல்வங்கள் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்.. குடும்பத்துடன்... இப்போ ரொம்ப பிஸியா இருப்பீங்க!!
ஃபங்ஷன் முடிந்து இந்த பதிவுகளை பார்த்து சந்தோசப்படுங்கள்.

புது மனை புகுவிழா நல்ல படியாக நடந்ததா?. தாங்கள் களைப்பு தீர ஓய்வு எடுத்தாச்சா? என்ன மெனு அன்று(கற்பனையில் சாப்பிட்டு பார்க்கிறேன்)? நம்ம அருசுவையில் இருந்து யாரைல்லாம் வந்தாங்க? உங்கள் மனதை/கருத்தை கவர்ந்த பரிசுப் பொருள் என்ன? நேரம் கிடைக்கும் போது பதில் தாருங்கள்

செல்வி அம்மா,

நலமா.புது வீட்டில் குடியேறிட்டீங்களா.உங்கள் ஒவியங்கள் பார்த்தேன்.மிக மிக அருமை.அறுசுவைக்கு சீக்கிரம் வாங்க.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.நன்றி.

மேலும் சில பதிவுகள்