தேதி: May 7, 2008
பரிமாறும் அளவு: இரண்டு நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
அரிசிமாவு - ஒரு கைப்பிடி
மோர் - ஒரு குழிக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
மோரில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு அதில் உப்பு, சீரகம் சேர்த்து கலக்கி கோதுமை மாவு, அரிசி மாவும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். தேவைப்பட்டால் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு ஊற்றவும்.
Comments
ஜலீலக்கா
எனக்கு, கோதுமை தோசை, ரவா தோசை செய்தால், தோசை கல்லிலேயே ஒட்டிக் கொள்கிறது. தோசை எடுக்க சுலபமாக வருவது இல்லை. ஒரே போராட்டம், தோசை கல்லோடு. எப்பவும் தோசை கல் தான் ஜெய்கிறது. நான் ஜெய்பதற்கு என்ன பண்ணுவது.
வித்யா கண்டிப்பா ஜெயிக்கலாம்,
வித்யா ஒன்றும் கவலை வேண்டாம் நீங்கள் அடுத்த முறை கண்டிப்பா ஜெயிக்கலாம்,
தோசை கல்லை ரொம்ப சூடுபடுத்தி விட்டு ஊற்றினால் அப்படி தான் போய் ஒட்டி கொள்ளும்.
தவ்வாவை ஓரத்தில் இருக்கும் கருப்பை தோசை கரண்டியால் நல்ல சொரண்டி கழுவுங்கள் இது நாள் வரை பிடித்திருந்த அடை கழண்டு விடும்.
இப்போது லேசா சூடாகும் போதே தீயை குறைத்து வைத்து விட்டு கொஞ்சம் எண்ணை, உப்பு போட்டு வெங்காயத்தை அரை வட்டமா அரிந்து அதன் கொண்டையபிடித்து கொள்ளுங்கள், இல்லை ஒரு போஃக்கால் குத்தி தவ்வா முழுவதும் நல்ல தேய்க்கவும்.
பிறகு தோசையை ஊற்றியதும் சுற்றி எண்னையை தெளித்து விடுங்கள்.
இப்ப்போது சுடுங்கள் தோசையே சுட தெரியாதவர்கள் கூட சூபரா வரும் ஆனால் முதல் தோசையை சுட்டு போட்டு விடுங்கள் இரண்டாவதும் அதே மாதிரி வெங்காயத்தை தேய்த்து சுடுங்கள் இனி அடுத்து அடுத்து தேக்க தேவையில்லை.
ஒகே வா
சுட்டு பார்த்து விட்டு சொல்லுங்கள்.
ஜலீலா
Jaleelakamal
நன்றி ஜலீலாக்கா.
முயற்சி செய்து விட்டு சொல்கிறேன். இதற்கு தான் தாங்கள் வேண்டும், என்கிறது. நான் என் தோசை கல்லையே மாற்றலாம் என்று இருந்தேன்.
ஆமாம் வித்யா
ஆமாம் வித்யா..கல் ரொம்ப சூடானா தான் இப்படி ஆகும்..நானும் வெங்காயம் தான் தேய்ப்பேன் இல்லைன்னா முதலில் முட்டை புல்ஸ் ஐ செய்து விட்டு பிறகு கனமாக தோசை ஊற்றுவேன் அது எளிதில் வரும்..பிறகு அடுத்தடுத்து மெல்லிய ரோஸ்டாக ஊற்றுவேன்.நான் எண்ணை கூட தெளிப்பதில்லை