பால் அவல் (வயதானவர்களுக்கு)

தேதி: May 7, 2008

பரிமாறும் அளவு: 2 person

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - ஒரு கப்
பால் - 1 1/2 கப்
சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி


 

முதலில் அவலை மண் போக கழுவவும். அப்படி இல்லை என்றால் புளி வடிகட்டும் கண் வடிகட்டியில் அவலை போட்டு அப்படியே டாப் தண்ணீரில் காண்பித்து களைந்தால் மண் கீழே தனியாக வந்து விடும்.
இப்போது பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி அதில் களைந்து வைத்துள்ள அவலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி 15 நிமிடம் ஊற விடவும். பிறகு சாப்பிடவும்.
தேவைப்பட்டால் ஒரு பின்ச் ஏலக்காய் தூள் சேர்க்கலாம்.


வயதானவர்களுக்கு காலை எழுந்தவுடன் இதை போட்டு கொடுத்தால் பசி தாங்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். நாம் கூட சாப்பிடலாம். இது அருமையான காலை உணவும் கூட, வெறும் அவல் சாப்பிட்டால் சளியை அறுக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலா அக்கா,
குழந்தைக்கு எத்தனை மாதம் முதல் அவல் கொடுக்கலாம்?

டியர் விஜி உங்கள் குழந்தைக்கு 9 மாதம் தானே, வெள்ளை அவல் பயன் படுத்துங்கள். அவலை கல்லில்லாமல் களைந்து சூடான பாலில் லேசா ஓட்ஸ், ராகி போல் காய்ச்சி கொடுங்கள்.நல்ல சாஃப்டகிடும்.
முதலில் கொஞ்சமா கொடுத்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஜலீலா அக்கா,
என் பையன் இப்ப எல்லாம் அவல் கொடுத்தால் சாப்பிடுவதில்லை, வெறும் அவல் டேஸ்ட் அவனுக்கு புடிக்கலை,அவலை யூஸ் செய்து வேற ஏதாவது ரெசிபி செய்து கொடுக்க idea இருந்தா சொல்லுங்களேன்,pls?even i tried by mixing it with boiled apple, he don't like that.

விஜி ராம்ஸ் அவலில் நிறைய ரெஸிபி இருக்கு, அவல் பாயசம்,அவல் தோசை,அவல் உப்புமா, இன்னும் பல. அது போல் செய்து கொடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

நான் பரிமளா. அறுசுவையின் புதிய தோழி. உங்களின் குறிப்புகள் எல்லாம் எனக்கு மிக உதவியாக இருக்கும். அறுசுவையின் வளர்ச்சியில் தங்களின் பங்கு அளப்பரியது. வாழ்த்துக்கள் தங்களுக்கும் அறுசுவைக்கும்