கார்டன் பகுதி II

நன்றி அ.சு.தோழிகள் நன்றாக நல்ல குறிப்புகள் குடுத்த எல்லாருக்கும், நம்ம Rajini க்கும் அதிரா அதுதான் எதையுமே ஒரு போரடிக்காமல் எல்லாரையும் நல்ல் அதிர வாய் குலுங்க சிரிக்க வைக்கும் தன்மை கொண்ட அதிராவுக்கு நன்றி.

இது இரண்டாம் பகுதியாக தொடர்கிறது.

வாவ் ரொம்ப நன்றி ரஜினி. நான் இந்த தடவை தான் நிற்ய்ய தோட்டபயிர் போட்டுள்ளேன். அதாவது கீரை,சிவப்பு கல்ர் முள்ளங்கி,தக்காளி,ஸுக்கினி,கத்திரிக்காய் ஆனுவல் பூக்கள்,போட்டுள்ளேன் எது வரும் தெரியாது. ஆனால் எல்லாம் சின்ன சின்ன செடி முளைத்துள்ளது. முல்லை எங்கு கிடைக்கும், ரஜினி சொல்லுங்க, செம்பருத்தி உள்ளே வைக்கலாமா, எப்பவும் உள்ளே தான் வைக்கனுமா, நான் பாஸ்டனில் உள்ளேன். இங்க இப்பவௌன் லைட்டா குளிர் இருக்கு.

ஆகா இந்த வருடம் நம்ம கார்டன் விருப்பம் உள்ள எல்லா அ.சு. நன்பர்கள் வீட்டில் நல்ல தோட்டகலை செய்ய போகிறார்கள். எல்லாரும் அப்பிடியே அவங்வங்க வீட்டில் விளைந்த காய், பூத்த பூக்கள் எல்லாவற்றையும் பற்றி எப்ப எப்ப டைம் கிடைக்கும் போது தெரிவித்தால் எல்லாருக்கும் நன்றாக இருக்கும்.
அப்பிடியே அருசுவயில் அவங்கவ்ங்க வீட்டில் பயிர் செய்த காய்களை வைத்து சமைத்து அந்த ரெசிப்பிஸை அனுப்புங்க.

நன்றி

நன்றி அதிரா, ஆனால் எனக்கு தூக்கி போட மனது வரமாட்டெங்குது, ஏனென்றால் போன மதர்ஸ்டேக்கு என் பசங்க வாங்கி கொடுத்த ரோஜாசெடிகள் அவை. ரோஜா செடி பற்றிய உங்கள் கருத்து ஆச்சர்யமாக உள்ளது.
உங்கள் கிலுகிலு வெந்தயசெடிபற்றி படித்தவுடன் எனக்கும் வெந்தயம் பயிரிட ஆசை வந்துவிட்டது.

விஜி எப்படி இருக்கீங்க?. நீங்க இந்த த்ரெட்டை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சீங்க அறுசுவையே ஓரே "வயலும் வாழ்வும்" மாதிரி போய்கிட்டு இருக்கு.
முல்லை ஹோம்டெபொட், லோவ்ஸ் ல கிடைக்கும். செம்பருத்தி செடியை வின்டரில் மட்டும் உள்ளே வைச்சா போதும். மற்றபடி சன்லைட் படும் இடமா பார்த்து வையுங்க.
Rajini

ஸிம்பிள். நான் நிற்ய்ய போட்டு அப்பப்ப பறித்து விடுவேன். அதிராவை காணவில்ல. ஒரு வேளை கார்டனிலேயே உறங்கிட்டாங்களோ? என்னவோ?
பார்க்கலாம் வருகிறார்களா என்று.

ஆமாம் என்ன 2 பேர் உங்களுக்கு, ஏதாவது ஸ்பெஷல் எனக்கு ஒரு டவுட் செம்பருத்தி செடியா தான் வாங்கனுமா, எப்பவுமே தொட்டியில் தான் வைக்கனுமா.

ஸாரிப்ப திரும்பதிரும்ப கேட்பதற்க்கு, எனக்கு செம்பருத்தி ரொம்ப பிடிக்கும் அதனால் தான். சிவப்பு கல்ர் கிடைக்குமா?

நன்றி ரஜினி

மேனகா எப்படி இருக்கீங்க?. உங்க கூட பேசறதுல ரொம்ப சந்தோசம். கத்திரிக்காய் விதை போடலாம் நல்லா வரும். வெள்ளரி , குடைமிளகாய் போடலாம். இந்தியா காய்விதைகள்(அவரை, சுரை, பாகற்காய், பீர்க்கை,) கிடைச்சா போடுங்க. இந்தியன் ஸ்டோர்ல பச்சை மஞ்சள் கிடைக்கும், அதை நட்டு வையுங்க. அடுத்த வருஷ பொங்கலுக்கு உங்க வீட்டுலயே மஞ்சள் செடி இருக்கும். சீசனுக்கு ஏத்த மாதிரி பூ செடி வைக்கலாம். இது போதுன்னு நினைக்கிறேன். என்ஞ்சாய் பண்ணுங்க:)
Rajini

விஜி,
குழப்பம் வேண்டாம். ரஜினி தான் என் பெயர். செம்பருத்தி செடிதான் கிடைக்கும். சிகப்பு கலர் இருக்கு. நான் முதல்ல தரையில தான் செம்பருத்தி வைச்சேன். ஒரு ஸ்னொ, அவ்வளவு தான் என் செடி போயே போயிந்தி. அதுனால அடுத்த தடவை உசாரா தொட்டியில வைச்சுட்டேன். வின்டர் சமயம் செடி உள்ள வந்துடும்.
Rajini

நான் இந்த வாரம் போய் வாங்க போறேன்.

விஜி எங்க தோட்டத்தில கூட ஒரு செம்பருத்தி செடி இருக்கு(தொட்டியில் அல்ல) . வீடு வாங்கும்போதே இருந்தது. ஊதா கலர் அடுக்கு செம்பருத்தி. வின்டரில் போய்விடும்,அடுத்த ஸ்பிரிங் சீசனில் திரும்ப துளிர் விடும். நான் இருப்பது பாஸ்டனில்.

மேலும் சில பதிவுகள்