குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அதுல , குழந்தைங்களை பத்தி டிஸ்கஸ் செஞ்சு இருந்தாங்க. நார்மலா அவங்க ஏதாவது ஒரு வேலையை செய்யும் போது நாம பாராட்டுவோம். குட் ஜாப், யூ டிட் இட்ன்னு எல்லாம் சொல்லுவோம். சில சமயம் I AM SO PROUD OF YOU சொல்லுவோம் இல்லையா, அதுக்கு பதிலா YOU SHOULD PROUD OF YOURSELF என்று சொல்லனுமாம்.

காரணம் என்னன்னா, நாம அவங்களை நெனைச்சு பெருமை படரதுக்கு முன்னாடி அவங்க செஞ்ச வேலைக்கு உரிய கிரடிட்டை அவங்களுக்கே கொடுக்கனும். அந்த பெருமைதான் அவங்க செஞ்ச காரியத்து மேல அவங்களுக்கே ஒரு தைரியத்தை கொடுக்கும். அதுனால அவங்க செல்ப் கான்பிடன்ஸ் அதிகமாகும். நாம செஞ்சா சரியா இருக்கும்ங்ற தைரியத்தோட, பயப்படாம செய்வாங்களாம்.

இன்னொரு விசயம், குழந்தைகள் நம்மள பாத்து எப்பவுமே பயந்துகிட்டே இருக்கக்கூடாது. ரொம்ப அரட்டி, உருட்டிகிட்டே இருந்தா நாளைக்கு ஏதாவது தெரியாம தப்பு செஞ்சா கூட நம்மகிட்ட மறைக்கப்பாப்பாங்க. அப்புறம் அதுக்காக பொய் சொல்ல ஆரம்பிப்பாங்க. பொய்யின்னு தெரிஞ்சு கேட்டாக்கூட அதை ஒத்துக்க பயந்து அடுத்த ஆயுதமா அடம் பண்ண ஆரம்பிப்பாங்க. அதுனால அவங்க வயசுக்கு ஏத்த மாதிரியே பழகனும்.

சில சமயம் பார்த்தீங்கன்னா, ஸ்கூல்ல பசங்களுக்கு ஏதாவது ஒரு விசயத்துல சண்டை(EX:OUR KIDS BULLYING BY OTHERS) வரும். அந்த மாதிரி சமயத்துல நாம நம்ம பசங்களை நம்பனும். மாறாக, அவங்களை திட்டக்கூடாது. ஞாயமான விஷயத்துக்காக சண்டை போட்டு இருந்தா நாம எப்பவும் அவங்களுக்கு சப்போட்டா இருப்போம்னு அவங்களுக்குப் புரிய வைக்கனும். அதுக்காக நாம உடனே வரிஞ்சு கட்டிகிட்டு போய் நிக்கக்கூடாது. முதல்ல நம்ம பசங்களே போய் டீச்சர் கிட்டயோ, அந்த பையனோட பேரன்ஸ் கிட்டயோ தனக்கு நடந்ததை சொல்லட்டும். அப்பதான் பயமில்லாம பிரச்சனையை அவங்களால எதிர்நோக்க முடியும். அதே சமயம் தப்பான விசயாமா இருந்தா செல்லம் கொடுக்காம கண்டிக்கவும் செய்யனும். மொத்தத்தில தராசு மாதிரி பேலன்ஸ்டா இருந்து அவங்களுக்கு நல்லது, கெட்டதை புரிய வைக்கனும்.
Rajini

நன்றி , இதைத்தான் தெடினென்.இதை பற்றி யெதாவ து லின்க் அனுப்பமுடியுமா?
I told her boodham lam onnum illa , dont get scred now she's telling me, amma bayapdathey boodhamlam onnum illa.

she use to call me and all va, po
not vaanga, ponga
nowadays i started calling her "siva inga vaanga"
she also calls all now with respect

Dear marliya, your tips are realy nice.thanks for sharing .I just go thru part 1.
உங்கள் குழந்தை பிறந்தது முதல் அவர்கள் செய்வதை தனி டையரியில் எழுதி வையுஙள் ,some times we will forget wat they do exactly in last yr.

யாரவது குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது எப்படி என்று சொல்லுங்கலென் பாரம்பரிய முறை , குளிக்கும் பொது மசாஜ் செய்வது எப்படி ,இரவு தூங்கும் முன் மசாஜ் செய்வது எப்படி

அல்லது இங்கு வெளிநாடுகளில் டாக்டர்கள் சொல்லும் முறை பட்றியும் சொல்லுங்கலென்.

வாழ்த்தி இருக்கும் ஜலிலாக்கா,அங்சலி,விஜி,ரஜினி,திவ்யா,அனைவருக்கும் என் நன்றி...

ஜலிலாக்கா என்ன ஆன்லைனில் காணோம்?

ரஜினி என்னப்பா இப்ப்டி சொல்லிட்டீங்க?சாப்பிங் போனதை விட என் பொண்ணு என்னை படுத்தியதுதான் ரொம்ப டயர்ட்..அங்கு ஓடுறா இங்கு ஓடுறா டிரஸை பார்த்தா இவ காணாமல் போஇடுவா அய்யோன்னு தேடினா 6 பேர்(எல்லாம் கடை பசங்க)நடுவில் இவ உக்கார்ந்து (தரையில்)அரட்டை அடிச்சுட்டு இருப்பா அவங்களும் இவ கை,கால் ஆட்டி பேசுறதை ரசித்துட்டு இருப்பாங்க..இப்பன்னு இல்லை எப்பௌம்தான்..அதோட பாவம்னு வெளியே கூட்டிபோனா என் பக்கத்தில் இருப்பது இல்லை யாராவது சின்ன பிள்ளைகள் வந்தா பின்னாடியே போஇடுவா..அதனாலயே எனக்கு பாதி டயர்ட் ஆகிடும்...ஒருமுறை மாலில் இவளைதான் ஹேண்டி கேமில் எடுத்துட்டு இருந்தேன்..அந்த டைம் வேலந்தைன்ஸ் டைம் சோ மால் சூப்பரா இருந்தது மாலையும் எடுக்கலாம்னு எடுத்துட்டு பார்த்தா இவளை காணோம்..அப்புறம் பார்த்தா ஒரு இங்லீஸ் கார ஆளுடன் ஜமுன்னு சேரில் இருந்து தலையை ஆட்டி,ஆட்டி பாட்டு கேட்டுட்டு இருக்கா..ஹெட் போன் இவ காதில் ஒன்னு அந்த ஆள் காதில் ஒன்னு..என்னத்த சொல்லப்பா சொல்லிட்டே போகலாம் இவ லூட்டியை...சொல்லி மாலாது

இல்லைப்பா என் கணவருக்கு எப்பவும் பாரம் தர மாட்டேன்..என் பொண்ணுக்கு மட்டும் ஆசை பட்டதை வாங்கிடுவேன் எதுவானாலும்(இதுதானே பெண்களின் தாய்மை உள்ளம் நான் மட்டும் விதி விலக்கா?)மற்றபடி எனக்கு ஏதாவது ரொம்ப ஆசைனா மட்டும் அவரிடம் சொல்லுவேன் அவருக்கு எப்ப தோதுபடுமோ அப்ப கண்டிப்பா வாங்கி தருவார்....தரவில்லை என்றாலும் விட்டுடுவேன் ரொம்ப அலைச்சலில் இருப்பார் பாவம் நானும் ஏன் தொல்லை கொடுக்கனும்னு...

ஹாய் வித்யா இதுதான் முதல் முறைன்னு நினைக்கிறென் உங்களிடம் பேசுறது....
நலமா?இவ ஆரம்ப ஸ்டேஜில் டைரியிலும்,கேமிலும் பதிவு பண்ணினேன் ..இப்ப டைம் இல்லை சோ அப்பப்ப கேமில் மட்டும் எடுத்து வைத்துடுவேன்..பிறந்ததில் இருந்து இப்ப வரை இவ முதல் முதலா தவள ஆரம்பித்தது பேசிய வார்த்தைகள்..தனியா செய்யும் வேலை,பண்ணும் லூட்டி இப்படி எல்லாம் கேமில் இருக்கு..இப்பவரை...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் திவ்யா சுத்தமான தேங்காய் எண்ணைய் அல்லது ஆலிவ் ஆயிலை அடுத்து உடம்பு முழுவதும் தேய்கனும் ஆமா குழந்தையின் வயதை முதலில் கொடுங்க அப்பதான் விளக்கமா சொல்ல வசதியாக இருக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,

நான் சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன். ஆனா உங்க பொண்னு உங்களுக்கு சூப்பரா விளையாட்டு காட்ரா போல இருக்கே. இந்த மாதிரி அவ லூட்டி அடிக்கும் போது தனியா எக்சர்சைஸ்ன்னு ஒன்னு உங்களுக்கு தேவையே இல்லை. இப்போ அவளுக்கு என்ன வயது?. பேர் என்ன?. நீங்க கேன்டிகேம்ல எடுத்து வைக்கறதை எல்லாம் அவ கொஞ்சம் பெரியவள் ஆனதும் காமிச்சா, அவளுக்கே ஆச்சர்யமாவும், சிரிப்பாவும் இருக்கும்.

என் பையனோட லீலைகளை அவன் கிட்ட காமிச்சப்போ, அவனுக்கு ஒரே வெக்கம். ஏன் மம்மி நான் FUNNY YA இப்படி எல்லாம் நடந்துக்கிட்டேன்னு என்கிட்டயே கேக்கறான். நானும் இப்போ திரும்பவும் அதே வேலைதான் செஞ்சுட்டு இருக்கேன். என் பொண்னு இப்போதான் தவழ ஆரம்பிச்சு இருக்கா. அதுனால பிசியோ பிசி.
Rajini

அய்யோ நான் ஒன்னும் தப்பா நினைக்கலமா...நானும் நார்மலாகதான் சொன்னேன்..இரண்டரை வயது ஆகிறது அடுத்த மாதம் பிலே ஸ்கூலில் போடுறதா இருக்கொம்(2 அல்லது 3 மணி நேரம்)..பாவமா இருக்கு அவளை பார்த்தால் அவ ஏஜ் பசங்களோடு விளையாட ஆசை படுறா..என் பொண்ணு பெயர் மரியம்..இப்பவே தன்னை தானே பார்த்து ரசித்துகுறா ரொம்ப தேவைதான் இவளுக்கு :-))

ஆமாம் எனக்கு அதுதான் ஆசை அப்புறம் இவளின் வருங்கால கணவரிடம் போட்டு காட்டனும்..இப்படிலாம் இமேஜன் இருக்கு ஹா ஹா...ஓஹ் உங்களுக்கு 2 பிள்ளைகளா?நல்லது அவங்க வயது?சொல்லுங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
நீங்க சொன்ன "அப்புறம் இவளின் வருங்கால கணவரிடம் போட்டு காட்டனும்.." ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே. உண்மையிலேயே இதைவிட நல்ல கிப்ட் இருக்க முடியாது. ப்ளே ஸ்கூலுக்கு முதல் தடவை அனுப்பும் போது நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். நானும் என் பையன் அழுகக் கூடாதுன்னு ரொம்ப வேண்டிக்கிட்டே, அவன் கிட்டயும் ப்ளே ஸ்கூல் பத்தி ஆஹா ஓஹோன்னு சொல்லி கூட்டிட்டு போனேன். அவன் சீக்கிரம் எல்லாருடனும் பழகிடுவான். ஸ்கூல் போனதும் சின்ன சின்ன குட்டிகளை பார்த்து ரொம்ப குஷி ஆயிட்டான். அவங்க டீச்சர் வந்து ஹாய் சொல்லி கூப்பிட்டதும் சந்தோசமா போய்ட்டான். எனக்கும் டாடா சொன்னான், உடனே அவங்க மிஸ் என்னை போக சொல்லிட்டாங்க. எனக்குத்தான் ரொம்ப அழுகை அழுகையா வந்தது. கார்ல வந்து அழுது தீர்த்துட்டேன். மதியம் அவனை பார்கிறவரை மனசே சரியில்லை. இதைத்தான் "பெத்த மனசு பித்துன்னு" சொல்லுவாங்க போலருக்கு. இப்போ என் பையனுக்கு 7 வயசு. பேர் அனிருத். பொண்னுக்கு 7 மாசம் ஆகுது, பேர் அக்ஷிதா.
Rajini

நான் ஊர் போனப்ப கொஞ்சநாள் எனக்கு தெரிஞ்சவங்க ஸ்கூலில் விட்டுட்டு மறைந்து இருந்து நோட்டமிட்டு வந்தேன் 2 நாளில் பழகிட்டா அனைவருடனும்(அப்படி விட காரண்ம் இங்கு புது ஸ்கூலில் சேர்க்குறப்ப என் பொண்ணு எப்படி அதை பேஸ் பண்ணுவாளோன்ன பயம்தான் காரணம் அதோட நானும் நின்னு பார்க முடியாது,விட மாட்டாங்க..மனசு ரொம்ப கஸ்டமாகிடும் அதனால் கொஞ்சம் இப்படி தெரிஞ்சவங்க ஸ்கூலில் விட்டு பிடிச்சா என்னன்னுநானே தெரிஞ்சுக்கலாமே,நினைத்த டைமில் என் பொண்ணை பார்த்துக்கலாம்...அதற்காகதான் விட்டு பிடித்தேன் சிரமம் பார்ர்காமல்...பின் என் பொண்ணை பார்த்து கொள்ளும் மிஸ்ஸிடம் ஒரு செல்லை(cell) கொடுத்து வைத்துட்டு வந்துட்டேன் 2 நாள் கழித்து...அப்பப்ப போன் பண்ணி கேட்டேன் எப்படி இருக்கானு ஜாலியா இருப்பதாக சொல்வாங்க அதோட அவளையும் பேச வைப்ப்பாங்க எனக்கு மனசு ரிலாக்ஸா இருக்கும்...பின் செம மழை வந்ததது அதனால் அவளை ஸ்கூல் அனுப்பல...இடைவேளி விழுந்து போச்சு..அதிலிரும்ந்து ஒரே அழுகைதான்...நான் ரிட்டன் வர 3, 4 நாள் இருப்பதால் சரின்னு ஸ்கூல் அனுப்பல...இப்ப எப்படின்னு பயமாகதான் இருக்கு...இறைவந்தான் துணை இருக்கனும்...உங்க பிள்ளைகள் பெயர் இரண்டும் ரொம்ப நல்லா இருக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்